• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

“தி மம்மி ரிட்டர்ன்ஸ்” படம், பூஜையுடன் துவங்கியது !!

by Tamil2daynews
January 16, 2026
in சினிமா செய்திகள்
0
0
SHARES
8
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
“தி மம்மி ரிட்டர்ன்ஸ்” படம்,  பூஜையுடன் துவங்கியது !!

Pepin de Raisin Productions சார்பில்,  P. J. கிஷோர் தயாரிப்பில், ஜெய் அமர் சிங் இயக்கத்தில் உருவாகும், அழகான காமெடி ஃபேமிலி எண்டர்டெயினர்  “தி மம்மி ரிட்டர்ன்ஸ்” திரைப்படம், படக்குழுவினருடன் திரை பிரபலங்கள் கலந்துகொள்ள, விமரிசையான பூஜையுடன், இன்று கோலாகலமாக துவங்கியது.

இயக்குநர் விஷ்ணுவர்தன் மற்றும் இயக்குநர் I. அகமது இவ்விழாவில் கலந்துகொண்டு படக்குழுவுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

பல வருட கோமாவில் இருந்து மீண்டு வரும் தன் தாயை காப்பாற்ற தன்  அம்மா வாழ்ந்த  1990 களின் உலகை தன் நண்பர்களுடன் இணைந்து உருவாக்குகிறான் மகன். அதில் நடக்கும் களேபரங்கள் தான் இப்படத்தின் மையம். வயிறு வலிக்க சிரித்து மகிழும் காமெடியுடன், அனைவரும் ரசிக்கும் அழகான ஃபேமிலி எண்டர்டெயினராக இப்படத்தை உருவாக்குகிறார்  ஜெய் அமர் சிங்.
இந்த படத்தில் கிருஷ்ணா, தேவதர்ஷினி, ஸ்வாதி, கின்ஸ்லி, லொள்ளு சபா மாறன், பியோர்ன், தீபா (விஜய் டிவி) ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

இப்படத்தின் படப்பிடிப்பை, சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இரண்டு கட்டமாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
படம் குறித்து இயக்குநர் ஜெய் அமர் சிங் கூறியதாவது..,
நான் லண்டனில் ஃபிலிம் இண்ட்ஸ்டிடியூட் படித்து விட்டு சென்னையில் இயக்குநர் I. அகமது அவர்களிடம் “என்றென்றும் புன்னகை” படத்தில் பணிபுரிந்தேன். ஆக்சன் படங்கள் அதிகமாக வரும் இன்றைய காலகட்டத்தில் ரசிகர்கள் காமெடி படங்களுக்கு ஏங்குகிறார்கள். எனக்கும் காமெடி படங்கள் தான் அதிகம் பிடிக்கும். எனவே தான் இந்தப்படத்தை முழுக்க முழுக்க ரசிகர்கள் சிரித்து மகிழும் படமாக வடிவமைத்துள்ளேன். ஒரு தாயை காப்பாற்ற மகன் என்னவெல்லாம் செய்கிறான் என்பது தான் படம், எமோஷனலான கதையை, மக்கள் வயிறு வலிக்க சிரிக்கும்படி சொல்லப்போகிறோம் என்றார்.
இப்படத்திற்கு முன்னணி இசையமைப்பாளர் சாம் சி.எஸ் இசையமைக்ககிறார். மணிகண்ட பாலாஜி எடிட்டிங் செய்கிறார்.   கார்த்திக் சுப்பிரமணியன்  ஒளிப்பதிவு செய்கிறார்.

படத்தின் மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என படக்குழு தெரிவித்துள்ளது.

Previous Post

தலைவர் தம்பி தலைமையில் – விமர்சனம் ரேட்டிங் – 4 / 5

Next Post

தனுஷ் நடிப்பில் ‘கர’ – பட ஃபர்ஸ்ட் லுக் வெளியானது : 90-களின் பின்னணியில் உருவாகும் உணர்வுப்பூர்வ திரில்லர் !!

Next Post

தனுஷ் நடிப்பில் ‘கர’ – பட ஃபர்ஸ்ட் லுக் வெளியானது : 90-களின் பின்னணியில் உருவாகும் உணர்வுப்பூர்வ திரில்லர் !!

Popular News

  • அதிரடி ஆக்ஷனில் மிரளவைக்கும் ராஷ்மிகா: மைசா’ திரைப்படத்தின் டீசர் வெளியீடு!

    0 shares
    Share 0 Tweet 0
  • வரலாற்றில் முதல் முறையாக இசைஞானி இளையராஜாவின் இசையில் உருவான இலங்கைத் தமிழ்த் திரைப்படம்

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘வேட்டுவம்’ பா.இரஞ்சித்தின் பிரம்மாண்ட அபோகலிப்டிக் ஆக்ஷன் திரைப்படம்.

    0 shares
    Share 0 Tweet 0
  • நவம்பர் 20-ம் தேதி பிரமாண்டமாக வெளியாகும் துல்கர் சல்மானின் ‘AOT’

    0 shares
    Share 0 Tweet 0
  • ரவி மோகன் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் “An Ordinary Man” திரைப்படம் பூஜையுடன் தொடக்கம் – இயக்குநராக தன் புதிய பயணத்தை தொடங்கும் ரவி மோகன் ; நகைச்சுவை நாயகனாக யோகி பாபு!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

நல்லபடம் -விமர்சனம்

September 21, 2026

‘சிக்மா’ திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா நிகழ்வு!

September 21, 2026

இரா.சரவணன் இயக்கத்தில், நிவாஸ் கே. பிரசன்னா இசையில், அழுத்தமான படைப்பாக அதிர வைக்க வருகிறது ‘நந்தன் 2’.

September 21, 2026

அதிரடி ஆக்ஷனில் மிரளவைக்கும் ராஷ்மிகா: மைசா’ திரைப்படத்தின் டீசர் வெளியீடு!

September 21, 2026

#Love’ – அக்டோபர் 2 முதல் நெட்ஃப்ளிக்ஸில் மட்டும்

September 20, 2026

பிரம்மாண்டமாக நடைபெற்ற ‘பத்தா’ இசை வெளியீட்டு விழா!

September 20, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.