• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா விமர்சனம்

தலைவர் தம்பி தலைமையில் – விமர்சனம் ரேட்டிங் – 4 / 5

by Tamil2daynews
January 16, 2026
in விமர்சனம்
0
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
தலைவர் தம்பி தலைமையில் – விமர்சனம்

நீண்ட நாட்களுக்கு பிறகு நடிகர் ஜீவா நடித்த மக்களை மிகவும் கவரும் திரைப்படம் தலைவர் தம்பி தலைமையில்.

பஞ்சாயத்து தலைவரான ஜீவா, ஊர் மக்களின் வாக்குகளுக்காக அவர்களது வீட்டு விசேஷங்கள் முதல் துக்கம் நிகழ்வு வரை அனைத்தையும் தலைமை ஏற்று நடத்துகிறார். அதன்படி, இளவரசுவின் மகள் திருமணத்திற்கான பணிகளில் ஜீவா ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது, அவரது பக்கத்து வீட்டுக்காரரான தம்பி ராமையாவின் நோய்வாய்ப்பட்ட தந்தை இறந்து விடுகிறார்.

இளவரசு மற்றும் தம்பி ராமையா இருவருக்குமிடையே ஏற்கனவே பகை இருப்பதால், இளவரசுவின் மகள் திருமணம் நடைபெறும் அதே நேரத்தில் தான், தனது தந்தையின் இறுதி ஊர்வலமும் நடக்க வேண்டும், என்று தம்பி ராமையா பிடிவாதம் பிடிக்கிறார். தன் மகள் திருமணம் தனது வீட்டில் தான் நடக்க வேண்டும், என்பதில் இளவரசுவும் உறுதியாக இருக்கிறார்.
Thalaivar Thambi Thalaimaiyil' movie review: A superb Jiiva lights up Nithish Sahadev's firecracker comedy - The Hinduஇந்த இரண்டு குடும்பங்களையும் சமாதானப்படுத்தி, இரண்டு நிகழ்வுகளையும் சரியாக நடத்தும் பொறுப்பை ஏற்று பஞ்சாயத்து செய்யும் ஜீவா, அதில் வெற்றி பெற்றாரா ? என்பதை சிரிக்கும்படியும், சிந்திக்கும்படியும் சொல்வதே ‘தலைவர் தம்பி தலைமையில்’.

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரிடத்திலும் அன்பாகவும், அக்கறையாகவும், நட்பாகவும் பழகும் ஒரு கலகலப்பான மற்றும் பொறுப்பான கதபாத்திரத்தில் மிக சரியாக பொருந்திப் போகும் ஜீவா, தனது இயல்பான நடிப்பு மூலம் முழு படத்தையும் தன் தோளில் சுமந்திருக்கிறார்.  ஜீவாவை தவிர்த்து படத்தில் இடம் பெறும் அனைத்து கதாபாத்திரங்களும் திரைக்கதையில் முக்கியத்துவம் பெற்று, பார்வையாளர்களை சிரிக்க வைத்தாலும், அவர்கள் அனைவரையும் தலைமை தாங்கி வழி நடத்தும் தலைவராக ஜீவா முத்திரை பதித்துள்ளார்.

’பார்க்கிங்’ படத்தில் மகளாக கவனம் ஈர்த்த பிரார்த்தனா நாதன், இதில் மணமகள் கதாபாத்திரத்தில் எளிமையான அழகு மற்றும் அளவான நடிப்பு மூலம் பார்வையாளர்கள் மனம் கவர்கிறார்.

கதையின் மையப்புள்ளிகளாக பயணித்திருக்கும் இளவரசு மற்றும் தம்பி ராமையா இயல்பான நடிப்பின் மூலம் திரைக்கதையின் சுவாரஸ்யத்தை அதிகரிக்கச் செய்திருக்கிறார்கள். ஜென்சன் திவாகர், சர்ஜின் குமார், ஜெய்வந்த், ராஜேஷ் பாண்டியன், அமித் மோகன், சுபாஷ் கண்ணன், சரத், சாவித்ரி ஆகியோர் படம் முழுவதும் சிரிக்க வைக்கிறார்கள்.

படம் முழுவதையும் கலர்புல்லாக காட்சிப்படுத்தியிருக்கும் ஒளிப்பதிவாளர் பப்ளு அஜு, மலையாளப் படத்தை பார்த்த உணர்வை கொடுக்கிறார்.
Thalaivar Thambi Thalaimaiyil' movie review: A superb Jiiva lights up Nithish Sahadev's firecracker comedy - The Hinduஇசையமைப்பாளர் விஷ்ணு விஜய் இசையில் பாடல்கள் கொண்டாட்டம் ரகம். பின்னணி இசை காட்சிகளுக்கு வலு சேர்க்கும் விதத்தில் அமைந்துள்ளது.

படத்தின் துவக்கம் முதல் இறுதி வரை, ஒரு குறிப்பிட்ட லொக்கேஷனில் கதை பயணித்தாலும் அந்த உணர்வே ஏற்படாத வகையில் படத்தை வேகமாக நகர்த்தி செல்லும் படத்தொகுப்பாளர் அர்ஜுனே பாபு, இயக்குநர் சொல்ல வந்த கருத்தையும் பார்வையாளர்களிடத்தில் நேர்த்தியாக கடத்தியிருக்கிறார்.

சஞ்சோ ஜோசப், நிதிஷ் சகாதேவ் மற்றும் அனுராஜ்.ஓ.பி ஆகியோரது திரைக்கதை எளிமையான கதைக்கருவுக்கு மிகப்பெரிய வலிமை சேர்த்திருக்கிறது. படம் முழுவதும் நகைச்சுவையாக இருந்தாலும், அதில் பேசப்பட்டிருக்கும் சில விசயங்கள் சிந்திக்க வைக்கிறது.Thalaivar Thambi Thalaimaiyil release date: Jiiva and Falimy director Nithish Sahadev to hit theatres in January
இயக்குநர் நித்திஷ் சகாதேவ், எதார்த்தமான வாழ்வியல் சம்பவங்களை மிக நேர்த்தியான காட்சிகள் மூலம் நகைச்சுவையாக சொல்லி ரசிக்க வைத்திருக்கிறார். குறிப்பாக படம் முழுவதையும் மலையாளப் படம் போன்று கையாண்டது தமிழ் பார்வையாளர்களுக்கு புதிய அனுபவத்தை கொடுக்கிறது.
மொத்தத்தில் தமிழ் ரசிகர்களுக்கு,தலைவர் தம்பி தலைமையில் தரமான பொங்கல் கொண்டாட்டம்.
Previous Post

புதிய ஆண்டு, புதிய திரைப்படங்கள்! 2026 ஆம் ஆண்டுக்கான உரிமம் பெற்ற தமிழ் திரைப்படங்கள் பட்டியலை பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி நிறுவனம் அறிவித்துள்ளது!

Next Post

“தி மம்மி ரிட்டர்ன்ஸ்” படம், பூஜையுடன் துவங்கியது !!

Next Post

“தி மம்மி ரிட்டர்ன்ஸ்” படம், பூஜையுடன் துவங்கியது !!

Popular News

  • சென்னை செங்கல்பட்டு காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கம் சார்பில் மறைந்த தலைவர் கே.ராஜன் திருவுருவப் படத் திறப்பு மற்றும் நினைவேந்தல் கூட்டம்: தயாரிப்பாளர் டாக்டர் ஐசரி கே.கணேஷ் தலைமையில் திரையுலகினர் நெகிழ்ச்சி அஞ்சலி!

    0 shares
    Share 0 Tweet 0
  • கீது மோகன் தாஸ் பிறந்தநாள் கொண்டாட்டம் : பிரத்யேக BTS காணொலியை வெளியிட்ட ‘டாக்ஸிக்’ படக்குழு

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘சிங் கீதம்’ படத்தின் முன் வெளியீட்டு விழா

    0 shares
    Share 0 Tweet 0
  • “ஸ்லம் டாக் 33 டெம்பிள் ரோட்” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!

    0 shares
    Share 0 Tweet 0
  • நடிகர் ரவி தேஜாவின் முதல் தமிழ்–தெலுங்கு இருமொழிப் படம் ‘இருமுடி கட்டு’! தந்தை–மகள் பாசம், ஆன்மிகம் மற்றும் மனதைத் தொடும் உணர்வுப்பூர்வமான படைப்பாக உருவாகியுள்ளது!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

“மூன்றாம் கண்” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!

June 9, 2026

சென்னை செங்கல்பட்டு காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கம் சார்பில் மறைந்த தலைவர் கே.ராஜன் திருவுருவப் படத் திறப்பு மற்றும் நினைவேந்தல் கூட்டம்: தயாரிப்பாளர் டாக்டர் ஐசரி கே.கணேஷ் தலைமையில் திரையுலகினர் நெகிழ்ச்சி அஞ்சலி!

June 9, 2026

கீது மோகன் தாஸ் பிறந்தநாள் கொண்டாட்டம் : பிரத்யேக BTS காணொலியை வெளியிட்ட ‘டாக்ஸிக்’ படக்குழு

June 9, 2026

‘சிங் கீதம்’ படத்தின் முன் வெளியீட்டு விழா

June 9, 2026

‘நோவா’ படத்தில் ஆக்சன் காட்சிகளில் மிரட்டி இருக்கும் ‘பியார் பிரேமா காதல்’ புகழ் ரைசா வில்சன்

June 9, 2026

விறுவிறுப்பான படப்பிடிப்பில் வேகமாக தயாராகும் நடிகர் ‘விக்கல்ஸ்’ விக்ரமின் ‘லைட் வெயிட் பேபி’

June 9, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.