• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

”கே டி: தி டெவில் – K D : The Devil ” படத்திலிருந்து ‘திற நீ எந்தன் தரணி திற நீ – Thira Nee Enthan Tharani Thira Nee” பாடல் மூலம் கொண்டாட்டத்தின் உச்சத்தை வழங்குகிறார் நோரா ஃபதேஹி (Nora Fatehi )

by Tamil2daynews
March 18, 2026
in சினிமா செய்திகள்
0
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

”கே டி: தி டெவில் – K D : The Devil ” படத்திலிருந்து ‘திற நீ எந்தன் தரணி திற நீ – Thira Nee Enthan Tharani Thira Nee” பாடல் மூலம் கொண்டாட்டத்தின் உச்சத்தை வழங்குகிறார் நோரா ஃபதேஹி (Nora Fatehi )

 

பிரேம் இயக்கத்தில் மிகப் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாகி வரும் ‘கே டி : தி டெவில் –  K D : The Devil ‘ திரைப்படம் நாடு முழுவதும் ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

கே வி என் புரொடக்ஷன்ஸ் – KVN Productions நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் வெங்கட் கே. நாராயணா தயாரித்துள்ள இந்தத் திரைப்படம் இந்த ஆண்டில் மிகவும் எதிர்பார்க்கப்படும் பான் இந்திய வெளியீடுகளில் ஒன்றாக உள்ளது.

இப்படத்தில் ‘ஆக்சன் பிரின்ஸ்’ துருவா சர்ஜா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இவருடன் ஷில்பா ஷெட்டி, வி. ரவிச்சந்திரன், ரமேஷ் அரவிந்த், ரீஷ்மா நானையா மற்றும் நோரா ஃபதேஹி உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்துள்ளனர்.‌

விரைவில் வெளியாக உள்ள இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் தயாரிப்பாளர்கள் ‘திற நீ எந்தன் தரணி திற நீ – Thira Nee Enthan Tharani Thira Nee” எனும்  துள்ளல் மிகுந்த மற்றும் உற்சாகமான ஒரு நடனப் பாடலை வெளியிட்டுள்ளனர். அதிரடியான தாளமும் கொண்டாட்ட மனநிலையையும் கொண்ட இந்த பாடல் ரசிகர்களிடையே ஒரு முக்கியமான ‘பார்ட்டி கீதம்’ ஆக ( Party Anthem) உருவெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Imageபரபரப்பான பாலிவுட் நடன தாரகை நோரா ஃபதேஹி மற்றும் வசீகரமான நட்சத்திர நடிகர் சஞ்சய் தத் ஆகியோர் இணைந்து நடித்துள்ள இந்த பாடல் – கவர்ச்சி – திரையில் இருவரின் ஆளுமை மிக்க தோற்றம்-  விறுவிறுப்பான நடன அசைவுகள் – ஆகியவற்றை கொண்டுள்ளது. அர்ஜுன் ஜன்யா இசையமைத்துள்ள இந்தப் பாடல் பல்வேறு மொழி பேசும் ரசிகர்களின் மனதிலும் ஆழமாக பதியும் வகையிலான ஒரு ஈர்க்கக்கூடிய தாள லயத்தை கொண்டுள்ளது.

துடிப்புமிக்க பாடகி ராஜலட்சுமி இந்தப் பாடலைப் பாடியுள்ளார். அவரது உற்சாகமான குரல் பாடலின் கொண்டாட்ட மனநிலைக்கு பொருத்தமாக அமைந்துள்ளது. பாடலின் வரிகளை மதன் கார்க்கி எழுதியுள்ளார். இசை அமைத்தல் – இசை ஒருங்கிணைப்பு மற்றும் பாடல் தயாரிப்பு பணிகளை அர்ஜுன் ஜன்யா மேற்கொண்டுள்ளார்.

‘திற நீ எந்தன் தரணி திற நீ ‘ பாடல் இணையத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில் ரசிகர்களின் ஃபிளேலிஸ்டிலும் ( Playlists) , நடன மேடைகளிலும் இந்தப் பாடல் விரைவில் இடம் பிடிக்கும் என படக் குழுவினர் உறுதியாக நம்புகின்றனர்.

கே டி : தி டெவில் – KD : The Devil ‘ திரைப்படம் ஏப்ரல் 30-ஆம் தேதி அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகிறது. இது ரசிகர்களுக்கு மறக்க முடியாத பிரம்மாண்டமான திரை அனுபவத்தை வழங்கும் என உறுதியளிக்கிறது.

Previous Post

‘நாகபந்தம்’ படத்தின் ஆன்மீக கீதமான ( Spiritual Anthem) ‘நமோ ரே ‘ ( NAMO Re) வெளியீடு

Next Post

சூப்பர் ஸ்டார் ரஜினி தவிர யாரும் தயாரிப்பாளர்களுக்கு உதவுவதில்லை ” ரூம் பாய் ” இசை வெளியீட்டு விழாவில் தயாரிப்பாளர் ஃபைவ் ஸ்டார் கதிரேசன் பேச்சு!!

Next Post

சூப்பர் ஸ்டார் ரஜினி தவிர யாரும் தயாரிப்பாளர்களுக்கு உதவுவதில்லை " ரூம் பாய் " இசை வெளியீட்டு விழாவில் தயாரிப்பாளர் ஃபைவ் ஸ்டார் கதிரேசன் பேச்சு!!

Popular News

  • #Love’ – அக்டோபர் 2 முதல் நெட்ஃப்ளிக்ஸில் மட்டும்

    0 shares
    Share 0 Tweet 0
  • அதிரடி ஆக்ஷனில் மிரளவைக்கும் ராஷ்மிகா: மைசா’ திரைப்படத்தின் டீசர் வெளியீடு!

    0 shares
    Share 0 Tweet 0
  • வரலாற்றில் முதல் முறையாக இசைஞானி இளையராஜாவின் இசையில் உருவான இலங்கைத் தமிழ்த் திரைப்படம்

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘தி கிராண்ட் மாஸ்டர்’… கவனம் ஈர்க்கும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

    0 shares
    Share 0 Tweet 0
  • “என்ன விலை திரைப்படம் ரசிகர்களுக்கு நிச்சயம் மறக்க முடியாத அனுபவம் கொடுக்கும்” -நடிகை நிமிஷா சஜயன்!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

நல்லபடம் -விமர்சனம்

September 21, 2026

‘சிக்மா’ திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா நிகழ்வு!

September 21, 2026

இரா.சரவணன் இயக்கத்தில், நிவாஸ் கே. பிரசன்னா இசையில், அழுத்தமான படைப்பாக அதிர வைக்க வருகிறது ‘நந்தன் 2’.

September 21, 2026

அதிரடி ஆக்ஷனில் மிரளவைக்கும் ராஷ்மிகா: மைசா’ திரைப்படத்தின் டீசர் வெளியீடு!

September 21, 2026

#Love’ – அக்டோபர் 2 முதல் நெட்ஃப்ளிக்ஸில் மட்டும்

September 20, 2026

பிரம்மாண்டமாக நடைபெற்ற ‘பத்தா’ இசை வெளியீட்டு விழா!

September 20, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.