காளிதாஸ் 2 – விமர்சனம்
ஸ்ரீ செந்தில் இயக்கத்தில், பரத் நடிப்பில் ஏப்ரல் 3, 2026-ல் வெளியாகும் காளிதாஸ் 2, முதல் பாகத்தின் தொடர்ச்சியாக இல்லாமல், ஒரு தனித்துவமான, விறுவிறுப்பான இன்வெஸ்டிகேஷன் திரில்லராக (Investigative Thriller) உருவாகியுள்ளது. பெண் காணாமல் போதல் மற்றும் திரையரங்கில் நடக்கும் கொலை சம்பவங்களை மையமாக வைத்து, சாம் சி.எஸ் இசையில் இப்படம் உருவாகியுள்ளது.
காளிதாஸ்’ வெற்றிப்படத்தைத் தந்த ஸ்ரீ செந்தில் இயக்கத்தில், பரத் நடிப்பில் உருவாகி ஏப்ரல் 3ல் வெளியாகவுள்ள பரபரப்பான திரில்லர் திரைப்படம் ’காளிதாஸ் 2’.
முதல் பாகம் ஒரு குடும்பத்தை மையமாகக் கொண்ட புலனாய்வு திரில்லராக அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. அதே பாணியில், இந்த இரண்டாம் பாகமும் உணர்ச்சிகரமான அதேசமயம் அதிரடியான களத்தில் பரபரப்பான திரில்லராக இருக்கிறது.
கதாநாயகனாக போலிஸ் அதிகாரி வேடத்தில் பரத் சிறப்பாக நடித்துள்ளார். இன்னொரு கதாநாயகனாக அஜய் கார்த்திக் சிறப்பாக நடித்துள்ளார். பவானி ஸ்ரீ, அபர்னதி, சங்கீதா, ஜெயவேல் என இதில் நடித்திருக்கும் அனைவரும் அவரவர் கதாபாத்திரம் உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளனர்.சாம் சி.எஸ்.ஸின் இசை ரசிக்க வைக்கிறது. சுரேஷ் பாலாவின் ஒளிப்பதிவு படத்திற்கு பெரிய பலம். புவன் ஸ்ரீனிவாசன் படத்தொகுப்பு ஷார்ப்எல்லோரும் ரசிக்கக் கூடிய வகையில் வெற்றி படமாக கொடுத்துள்ளார் இயக்குநர் ஸ்ரீ செந்தில். பாராட்டுக்கள்.









