காளிதாஸ் 2 – விமர்சனம்

காளிதாஸ் 2 – விமர்சனம்

 

ஸ்ரீ செந்தில் இயக்கத்தில், பரத் நடிப்பில் ஏப்ரல் 3, 2026-ல் வெளியாகும் காளிதாஸ் 2, முதல் பாகத்தின் தொடர்ச்சியாக இல்லாமல், ஒரு தனித்துவமான, விறுவிறுப்பான இன்வெஸ்டிகேஷன் திரில்லராக (Investigative Thriller) உருவாகியுள்ளது. பெண் காணாமல் போதல் மற்றும் திரையரங்கில் நடக்கும் கொலை சம்பவங்களை மையமாக வைத்து, சாம் சி.எஸ் இசையில் இப்படம் உருவாகியுள்ளது.

காளிதாஸ்’ வெற்றிப்படத்தைத் தந்த ஸ்ரீ செந்தில் இயக்கத்தில், பரத் நடிப்பில் உருவாகி ஏப்ரல் 3ல் வெளியாகவுள்ள பரபரப்பான திரில்லர் திரைப்படம் ’காளிதாஸ் 2’.

முதல் பாகத்தை இயக்கி முத்திரை பதித்த இயக்குநர் ஸ்ரீ செந்தில் இந்த இரண்டாம் பாகத்தையும் இயக்கியுள்ளார். பரத் நாயகனாக நடிக்கும் இப்படத்தில், அவருடன் இணைந்து அஜய் கார்த்தி இன்னொரு கதாநாயனாகவும் நடித்துள்ளார். மேலும், ‘பூவே உனக்காக’ புகழ் நடிகை சங்கீதா நீண்ட இடைவேளைக்குப் பிறகு மிக முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் இப்படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்திருக்கிறார். இவர்களுடன் பவானி ஸ்ரீ மற்றும் அபர்ணதி ஆகியோரும் இணைந்து நடித்துள்ளனர்.

முதல் பாகம் ஒரு குடும்பத்தை மையமாகக் கொண்ட புலனாய்வு திரில்லராக அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. அதே பாணியில், இந்த இரண்டாம் பாகமும் உணர்ச்சிகரமான அதேசமயம் அதிரடியான களத்தில் பரபரப்பான திரில்லராக இருக்கிறது.

கதை
560 பேர் வசிக்கும் அபார்ட்மெண்ட்டில் ஒரு குழந்தை காணாமல் போக போலிஸ் அதிகாரிகளான பரத்தும், பவானி ஸ்ரீ கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்குகின்றனர். காணமல் போன குழந்தை பிணமாக கிடைக்க அடுத்தடுத்து சிலர் இறக்க அஜய் கார்த்திக்கை சந்தேகத்தில் அரெஸ்ட் செய்ய அஜயை பிரபல லாயரான பிரகாஷ் ராஜ் விடுவிக்க உண்மையிலே கொலைகாரன் யார்? எதற்காக செய்கிறார்? என்பதை விறுவிறுப்பாக சொல்லியிருக்கும் கிரைம் திரில்லர் படம்தான் காளிதாஸ் 2.
கதாநாயகனாக போலிஸ் அதிகாரி வேடத்தில் பரத் சிறப்பாக நடித்துள்ளார். இன்னொரு கதாநாயகனாக அஜய் கார்த்திக் சிறப்பாக நடித்துள்ளார். பவானி ஸ்ரீ, அபர்னதி, சங்கீதா, ஜெயவேல் என இதில் நடித்திருக்கும் அனைவரும் அவரவர் கதாபாத்திரம் உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளனர்.சாம் சி.எஸ்.ஸின் இசை ரசிக்க வைக்கிறது. சுரேஷ் பாலாவின் ஒளிப்பதிவு படத்திற்கு பெரிய பலம். புவன் ஸ்ரீனிவாசன் படத்தொகுப்பு ஷார்ப்

எல்லோரும் ரசிக்கக் கூடிய வகையில் வெற்றி படமாக கொடுத்துள்ளார் இயக்குநர் ஸ்ரீ செந்தில். பாராட்டுக்கள்.

இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து காளிதாஸ் 3 நிச்சயம் வெளியாகும்
Next Post

Recent News

error: Content is protected !!