• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

ராக்கிங் ஸ்டார் யாஷ்: ‘டாக்ஸிக்’ ஒரு புதுமையான கேங்ஸ்டர் சினிமா அனுபவம்!

by Tamil2daynews
April 16, 2026
in சினிமா செய்திகள்
0
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
ராக்கிங் ஸ்டார் யாஷ்: ‘டாக்ஸிக்’ ஒரு புதுமையான கேங்ஸ்டர் சினிமா அனுபவம்!

CinemaCon 2026 விழாவில் கவனம் ஈர்த்த “டாக்ஸிக்”  திரைப்படம் !!

CinemaCon 2026 விழாவில் லாஸ் வேகாஸ் நகரில் இந்திய சினிமா உலகளவில் கவனம் ஈர்த்த வேளையில், நடிகர் யாஷ் தனது ‘டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் க்ரோன்-அப்ஸ்’  ( Toxic: A Fairy Tale for Grownups )  படம் குறித்து பகிர்ந்த கருத்துகள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. நமித் மல்ஹோத்ரா உடன் கலந்து கொண்ட அவர், இந்த படம் கேங்ஸ்டர் ஜானருக்கு  புதிய  வண்ணம்  தரும் படைப்பாக இருக்குமென தெரிவித்தார்.

படத்தைப் பற்றி யாஷ் கூறியதாவது:
“எங்கள் திரைத்துறையில் முதன்முறையாக இந்த படத்தை ஆங்கிலத்திலும் எடுத்துள்ளோம். இந்த படத்தின் கான்செப்ட் பல அடுக்குகள் கொண்டது. இது சாதாரண கேங்ஸ்டர் ஆக்ஷன் படம் அல்ல. வெளிப்படையாக பார்த்தால் இது ஒரு ஆக்ஷன் நிறைந்த கேங்ஸ்டர் படம் போல தோன்றும். ஆனால் இதில் ஆழமான சைக்கலாஜிகல் அம்சங்களும், மனித வாழ்க்கையின் சுவாரஸ்யமான கோணங்களும் உள்ளன. ஒரு டார்க் கதாபாத்திரத்தை மிகவும் தனித்துவமான முறையில் காட்டியுள்ளோம் என்று நான் நினைக்கிறேன்.”

இயக்குநர் கீது மோகன் தாஸ்  மற்றும் தொழில்நுட்பக் குழுவுடன் பணியாற்றிய அனுபவத்தைப் பற்றி அவர் கூறுகையில் :

“அது மிகவும் உற்சாகமான அனுபவமாக இருந்தது. எங்கள் இயக்குநர் கீது மோகன் தாஸ் கேங்ஸ்டர் படங்களுக்கு ஒரு புதிய பார்வையை கொண்டு வந்துள்ளார். நான் இதை மிகவும் ரசித்தேன். இதன் காட்சி ரசிகர்களுக்கு ஒருவிருந்தாக இருப்பதோடு, பார்வையாளர்களின் மனதிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.”
Toxic: A Fairy Tale for Grown-Upsஇந்திய சினிமாவின் வளர்ச்சியைப் பற்றி பேசும்போது.., இந்தியா ஒரு தனி உலகம் போல உள்ளது — சில நூறு கிலோமீட்டர் சென்றாலே மொழியும் கலாச்சாரமும் மாறிவிடும் என்று அவர் கூறினார். டப்பிங் மற்றும் பான்-இந்தியா கதைகள் மூலம் இப்போது அனைத்து பிராந்தியங்களிலும் உள்ள பார்வையாளர்களை இணைக்கும் நிலை உருவாகியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் டாக்ஸிக் Toxic இந்த மாற்றத்தின் பிரதிபலிப்பாகும் — இந்திய உணர்வுகளை அடிப்படையாகக் கொண்டாலும், உலகளாவிய பார்வையாளர்களுக்காக உருவாக்கப்பட்ட ஒரு படம். அனைவருக்கும் பிடிக்கும் வகையில், அதே சமயம் ஒரு தனித்துவமான அனுபவத்தை வழங்கும் படம் இது,” என்று அவர் முடித்தார்.

கீது மோகன் தாஸ் இயக்கத்தில், கே வி என் புரொடக்ஷன்ஸ் ( KVN Productions ) மற்றும் மான்ஸ்டர் மைண்ட் கிரியேசன்ஸ் (Monster Mind Creations) தயாரிப்பில் உருவாகியுள்ள ‘டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் க்ரோன்  -அப்ஸ்’  ( Toxic: A Fairy Tale for Grownups ) படத்தில் யாஷ், நயன்தாரா, கியாரா அத்வானி, ஹுமா குரேஷி, ருக்மிணி வசந்த், மற்றும் தாரா சுதாரியா ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்தப் படம் உலகம் முழுவதும் 2026 ஜூன் 4ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது

Previous Post

வைபவ் முருகேசன் வெறும் புகழைத் தேடி ஓடவில்லை.. அவர் தனக்கான நிரந்தர இடத்தை கட்டமைத்து வருகிறார்!

Next Post

யோகி பாபுவின் சன்னிதானம் பிஓ படம்! வெளியானது ‘ஏறி வந்தோம் ஐயப்பா’ பாடல்!

Next Post

யோகி பாபுவின் சன்னிதானம் பிஓ படம்! வெளியானது 'ஏறி வந்தோம் ஐயப்பா' பாடல்!

Popular News

  • பியார் பிரேமா கல்யாணம் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • “மஹாவீர் கர்ணா”; டிசம்பர் 4, 2026 அன்று வெளியாகிறது!!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘நேச்சுரல் ஸ்டார்’ நானி நடித்திருக்கும் ‘தி பாரடைஸ் – The Paradise ‘ படத்தின் டீசர் வெளியீடு

    0 shares
    Share 0 Tweet 0
  • திரு.கமல்ஹாசன் பாராட்டிய சரிகமா ஒரிஜினல்ஸின் ‘ச்சீ ப்பா தூ…’ இசை ஆல்பம் !!

    0 shares
    Share 0 Tweet 0
  • விஜய் ஆண்டனியின் ‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தின் இரண்டாவது சிங்கிள் டிராக் ‘தேடியே போறேன்…’ பாடல் ஹிப் ஹாப் ஆதி மற்றும் டி.இமான் ஆகியோரால் வெளியிடப்பட்டது!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

மாண்புமிகு முதலமைச்சர் C. ஜோசப் விஜயின் இறுதித் திரைப்படம் ஆகஸ்ட் 21 முதல் தமிழ் ZEE5-ல் ஸ்ட்ரீமிங்

மாண்புமிகு முதலமைச்சர் C. ஜோசப் விஜயின் இறுதித் திரைப்படம் ஆகஸ்ட் 21 முதல் தமிழ் ZEE5-ல் ஸ்ட்ரீமிங்

August 22, 2026

பியார் பிரேமா கல்யாணம் – விமர்சனம்

August 22, 2026

ஆன்ஷ்வா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் பிரபு ஏகாம்பரம் இயக்கி நடிக்கும் ‘மிடில் கிளாஸ் மாப்பிள்ளை’ (MCM)

August 22, 2026

இருமுடி கட்டு – விமர்சனம்

August 22, 2026

”நடிகர் கவுண்டமணிதான் இன்ஸ்பிரேஷன்”…நடிகர் அப்துல் லீ!

August 22, 2026

“மஹாவீர் கர்ணா”; டிசம்பர் 4, 2026 அன்று வெளியாகிறது!!

August 22, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.