• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

ஜிவி பிரகாஷ் குரலில், நயன்தாரா – கவின் இணையும் “ஹாய்” பட ஃபர்ஸ்ட் சிங்கிள்

by Tamil2daynews
April 23, 2026
in சினிமா செய்திகள்
0
0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
ஜிவி பிரகாஷ் குரலில், நயன்தாரா – கவின் இணையும் “ஹாய்” பட ஃபர்ஸ்ட் சிங்கிள்

நயன்தாரா – கவின் இணையும் “ஹாய்” திரைப்படம் வெளியீட்டுக்கு முன்பே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், தற்போது இப்படத்தின் முதல் சிங்கிள் பாடல் வெளியாகி ரசிகர்களின் மனதை கவர்ந்து வருகிறது.

“கன்னக்குழியா புதைகுழியா குழப்புறயே” என தொடங்கும் இந்த கலக்கலான காதல் மெலடி, இசையமைப்பாளர் ஜென் மார்டின் இசையில் உருவாகி, ஜிவி பிரகாஷின் இனிமையான குரலில் உயிர் பெற்றுள்ளது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு மனதை வருடும் ஒரு மென்மையான காதல் பாடலாக இது உருவாகியுள்ளது. கேட்கக் கேட்க இதமாக மனசை தொடும் இந்த பாடல், அதன் கவித்துவமான வரிகளாலும், துள்ளலான மெலடியாலும் ரசிகர்களை உடனே கவர்ந்து விடுகிறது.

காட்சியமைப்பிலும் பாடல் தனி மெருகை பெற்றுள்ளது. முதன்முறையாக திரையில் இணையும் நயன்தாரா – கவின் ஜோடி, இந்த பாடலில் கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது. இருவரின் ரசனையான கெமிஸ்ட்ரி (chemistry) பாடலின் காதல் உணர்வை மேலும் உயர்த்துகிறது. பாடலின் ஒவ்வொரு ஃப்ரேமும் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளதால், இது இசையுடன் சேர்ந்து ஒரு முழுமையான காதல் அனுபவமாக மாறியுள்ளது.
ImageZ ஸ்டூடியோஸ், தி ரவுடி பிக்சர்ஸ் மற்றும் 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோ ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் “ஹாய்” படத்தை விஷ்ணு எடவன் எழுதி இயக்குகிறார். இயக்குனர் லோகேஷ் கனகராஜுடன் “கைதி”, “மாஸ்டர்”, “விக்ரம்” போன்ற படங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்ட விஷ்ணு எடவன், இந்த படத்தின் மூலம் தனித்துவமான காதல் மற்றும் குடும்ப கதையை கொண்டு வருகிறார்.

இந்தப் படத்தில் நயன்தாரா, கவின் ஆகியோருடன் கே.பாக்யராஜ், பிரபு, ராதிகா, சத்யன், ஆதித்யா கதிர், குரேஷி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்படம் முழுக்க முழுக்க பொழுதுபோக்கான குடும்ப கதையில் உண்மையான காதலை சொல்லும் வகையில் உருவாகி வருகிறது. முதல் சிங்கிள் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்துள்ள “ஹாய்” படம், அடுத்தடுத்த அப்டேட்களால் மேலும் எதிர்பார்ப்பை கூட்டி வருகிறது. நயன்தாரா – கவின்  காம்பொ ஜென் மார்டின் இசை, மற்றும் விஷ்ணு எடவனின் புதிய கதை சொல்லும் முறையுடன், இந்த படம் ஒரு உணர்ச்சி மிக்க காதல் அனுபவமாக மாறும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

Link  –  https://youtu.be/XXo-VzYUIjo
Previous Post

பெரும் எதிர்பார்ப்பிலிருக்கும் “29” திரைப்படத்தை வரும் மே 8 ஆம் தேதி White Carpet Films தமிழகமெங்கும் வெளியிடுகிறது !!

Next Post

“காந்தி கிருஷ்ணாவின் படங்கள் நாவலை படிப்பது போன்ற அனுபவத்தை பெரிய திரையில் தரும்… ‘பிரேக்ஃபாஸ்ட்’ திரைப்படம் அதுபோன்ற ஒரு பயணம்” – ஜி.வி. பிரகாஷ் குமார்!

Next Post

“காந்தி கிருஷ்ணாவின் படங்கள் நாவலை படிப்பது போன்ற அனுபவத்தை பெரிய திரையில் தரும்... ‘பிரேக்ஃபாஸ்ட்’ திரைப்படம் அதுபோன்ற ஒரு பயணம்” – ஜி.வி. பிரகாஷ் குமார்!

Popular News

  • ரெபெல் ஸ்டார் பிரபாஸ், கிரியேட்டிவ் டைரக்டர் ஹனு ராகவபூடி, பிரபல தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ், டி-சீரிஸ் இணைந்து வழங்கும் மிகவும் எதிர்பார்க்கப்படும் பான் இந்தியா திரைப்படம் ‘ஃபௌஜி‘ – படத்திலிருந்து சுதந்திர தினத்தை தியாகத்திற்கு அர்ப்பணிக்கும் புதிய போஸ்டர் வெளியீடு !!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘அன்பில் அவன்’ படத்தின் ‘ஆசை வரமே’ ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியானது !! –

    0 shares
    Share 0 Tweet 0
  • விஸ்வநாத் அண்ட் சன்ஸ் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘பியார் பிரேமா கல்யாணம்’ டிரெய்லர் வெளியீட்டு விழா !

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘நேச்சுரல் ஸ்டார்’ நானி நடித்திருக்கும் ‘தி பாரடைஸ் – The Paradise ‘ படத்தின் டீசர் வெளியீடு

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

மாண்புமிகு முதலமைச்சர் C. ஜோசப் விஜயின் இறுதித் திரைப்படம் ஆகஸ்ட் 21 முதல் தமிழ் ZEE5-ல் ஸ்ட்ரீமிங்

மாண்புமிகு முதலமைச்சர் C. ஜோசப் விஜயின் இறுதித் திரைப்படம் ஆகஸ்ட் 21 முதல் தமிழ் ZEE5-ல் ஸ்ட்ரீமிங்

August 22, 2026

பியார் பிரேமா கல்யாணம் – விமர்சனம்

August 22, 2026

ஆன்ஷ்வா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் பிரபு ஏகாம்பரம் இயக்கி நடிக்கும் ‘மிடில் கிளாஸ் மாப்பிள்ளை’ (MCM)

August 22, 2026

இருமுடி கட்டு – விமர்சனம்

August 22, 2026

”நடிகர் கவுண்டமணிதான் இன்ஸ்பிரேஷன்”…நடிகர் அப்துல் லீ!

August 22, 2026

“மஹாவீர் கர்ணா”; டிசம்பர் 4, 2026 அன்று வெளியாகிறது!!

August 22, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.