படித்தவன் ஏமாற்றி வாங்குவதையும் , படிக்காதவன் தெரியாமல் இழந்ததையும், சொல்லும் உணர்ச்சிபூர்வமான படம் கர.
போர் தொழில் என்கிற தனது முதல் படத்தின் மூலம் பத்திரிகைகளால் யார் இந்த இயக்குனர் என்று பரபரப்பாக பேசப்பட்டவர் விக்னேஷ் ராஜா. அவர் இயக்கத்தில் இரண்டாவது படமாக தனுஷ், மிதா பைஜு,கே எஸ் ரவிக்குமார் கருணாஸ் நடிப்பில் வந்திருக்கும் படம் கர.
1990 களில் அமெரிக்கா ஈராக் இடையிலான போர் இராமநாதபுரம் மாவட்டத்தில் ஏற்படும் பாதிப்பு , கடன் என்கிற பெயரில் விவசாயிகளை சுரண்டு வங்கிகள் , தந்தையின் நீலத்தை மீட்க போராடும் நாயகன் என மூன்று அடுக்குகளில் கர படத்தின் கதையை இணைத்திருக்கிறார் இயக்குநர் விக்னேஷ் ராஜா. சுவாரஸ்யமான கதை களம் கர.
1990 களில் அமெரிக்கா ஈராக் இடையிலான போர் இராமநாதபுரம் மாவட்டத்தில் எண்ணெய் தட்டுப்பாட்டை ஏற்படுத்துகிறது. மறுபக்கம் அப்பாவி விவசாயிகளை கடன் வாங்க வைத்து அவர்கள் நிலத்தை ஜப்தி செய்கிறது வங்கி. இந்த களத்தில் வெவ்வேறு கதாபாத்திரங்களின் வழியாக சுவாரஸ்யமான ஒரு த்ரில்லர் திரைப்பட அனுபவத்தை கர திரைப்படம் வழங்குகிறது. முதல் பாதியில் வங்கியை கொள்ளையடிக்கும் ஒட்டுமொத்த சீக்வன்ஸ் படத்தில் மாஸ்டர் டச் . முதல் பாதி பெரும்பாலும் செண்டிமெண்ட் காட்சிகள் அதிகமுள்ளன. நாயகன் எடுக்கப்போகும் அதிரடியான முடிவுகளுக்கு இந்த செண்டிமெண்ட் காட்சிகள் அடித்தளம் அமைக்கின்றன.
1990 காலகட்டங்களில் ராமநாதபுரம் மாவட்டத்தில் நடந்த ஒரு உண்மை சம்பவம் என்று நம் கேள்விப்பட்டாலும் கதை முதலில் இருந்து படத்தின் இறுதி காட்சி வரை ஒவ்வொரு காட்சிகள் நகரும் போதும் படத்திற்க்கு விறுவிறுப்பாக நகர்வது படத்திற்கு மிகப்பெரிய பிளஸ்.
கரசாமியாக வரும் தனுஷ் எப்போதும் போல் நடிப்பால் ஒட்டுமொத்த கதையையும் தாங்கியிருக்கிறார். இதுவரை பார்த்த தனுஷ் படங்களின் நடிப்பில் இருந்து இதில் நடிப்பு அரக்கனாக மாறி இருக்கிறார் நம்ம தனுஷ்.மமிதா பைஜூ மிகத் தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தாலும் படத்தில் அவருக்கு தனுஷூடன் ஒரு சில காட்சிகள் மட்டுமே உள்ளன. அப்பாவாக வரும் கேஎஸ். ரவிகுமார் தனது வழக்கமான ஸ்டைலில் இல்லாமல் புதிய விதமாக கதாபாத்திரத்தை காட்டி தனது பங்கிற்கான நடிப்பை நிறைவு செய்கிறார் கே எஸ் ரவிக்குமார். சூராஜ் வெஞ்சமூடுவின் நடிப்பி சிறப்பு. அவரது கதாபாத்திரம் வரும்போது எல்லாம் திரையில் அடுத்து என்ன அடுத்து என்ன என்று சீட்டின் நுனியில் பார்வையாளர்களை அமர்த்தப் போவது நிஜம். வங்கி மேலாளராக வரும் ஜெயராம் நகைச்சுவை , வில்லத்தனம் என சரிவர வழங்கியிருக்கிறார்.
கருணாஸ் தனுஷின் தாய் மாமனாக நடித்து ஒரு சில காட்சிகளில் நகைச்சுவையும் காட்டுகிறார்.தனுஷின் நண்பனாக வரும் பிருத்திவி பாண்டியராஜன் தனத்துக்கு கொடுத்த வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார்.
படத்திற்கு மிகப்பெரிய பக்கபலம் பின்னணி இசை.காட்சிக்கு காட்சி பின்னணி இசையால் பார்வையாளர்களை கவர்கிறார் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்.
போர் தொழில் படத்தின் கதைக்களம் க்ரைம் திரில்லர் சம்பந்தமான கதைக்களத்தை கையில் எடுத்த அவர் கர படத்தின் மூலம் உண்மை சம்பவத்தை கையாண்ட அவர் கர படத்தில் வங்கிகளின் லோன் மூலம் வட்டிக்கு மேல் வட்டி விவசாயிகளின் ரத்தத்தை உறிஞ்சும் விஷயத்தை மறைவில்லாமல் தெளிவாக தைரியமாக சொன்னதற்கு இயக்குனர் விக்னேஷ் ராஜாவிற்கு சபாஷ்.
படத்தின் ஆரம்பம் காட்சிக்கு முதல் இறுதி காட்சி வரை எல்லா காட்சிகளிலும் தனுஷ் வந்து சிக்ஸ் அடிக்கிறார்.
மொத்தத்தில் இந்த கர படம் வங்கிகளின் ஊழல்களை தோலுரித்துக் காட்டும் படம்.







