• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

“தனது முழுத்திறனையும் வெளிப்படுத்தி கோமலி பிரசாத் நடித்திருக்கிறார் ” இயக்குநர் சரண்ராஜ் செந்தில்குமார்

by Tamil2daynews
May 19, 2026
in சினிமா செய்திகள்
0
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

“தனது முழுத்திறனையும் வெளிப்படுத்தி கோமலி பிரசாத் நடித்திருக்கிறார் ” இயக்குநர் சரண்ராஜ் செந்தில்குமார்

 

சாதாரணமாக ஒரு கதாபாத்திரத்தில் நடிப்பதை விடவும் அந்தப் பாத்திரத்திற்காக தன்னை உணர்வுப்பூர்வமாக ஒப்படைத்தல், உடல்ரீதியான மாற்றம் என கதைக்காக பல சவால்களையும் சந்திக்க வேண்டும். அப்படியான ஒரு கதாபாத்திரத்தில் ‘மண்டவெட்டி’ படத்தில் நடித்திருக்கிறார் நடிகை கோமலி பிரசாத். சரண்ராஜ் செந்தில்குமார் இயக்கத்தில் சூப்பர் நேச்சுரல் கிரைம் த்ரில்லர் கதையான இந்தப் படத்தில் கோபம், துன்பம் மற்றும் மர்மம் நிறைந்த கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் கோமலி.

இயக்குநர் சரண்ராஜ் செந்தில்குமார் பகிர்ந்து கொண்டதாவது, “‘மண்டவெட்டி’ திரைப்படத்தின் கதாநாயகி கதாபாத்திரத்திற்கு ஆழமான உணர்வுகளை சரியாக, பயமில்லாமல் வெளிப்படுத்தும் ஒருவர் தேவை என்பதை ஆரம்பத்திலேயே உணர்ந்தேன். இந்த கதாபாத்திரத்தில் நடிக்காமல் ஆழமான உணர்வுகளை வெளிப்படுத்தியதோடு உடல்ரீதியாகவும் மாறி வாழ்ந்திருக்கிறார் கோமலி. மிகுந்த சோர்வு, மனதை உலுக்கும் காட்சிகள் மற்றும் உடல் ரீதியாக கடினமான தருணங்கள் இருந்தபோதிலும் மிகுந்த அர்ப்பணிப்போடு அவர் நடித்தார். இந்தக் கதை, தன்னைவிட பலமிக்க சக்தியுடன் போராடும் ஒரு பெண்ணின் வாழ்க்கையையும், அவள் அனுபவிக்கும் தாங்க முடியாத வேதனையையும், மனக்குழப்பங்களையும் மையமாகக் கொண்டது. அதனால் இந்த கதாபாத்திரம் பலவீனம், கொந்தளிப்பு, வலி மற்றும் மீண்டு வரும் மனவலிமை என இவை அனைத்தையும் கோமலி தேர்ந்த நடிப்பின் மூலம் வெளிப்படுத்தியுள்ளார்”.
மேலும் அவர் கூறியதாவது, “சூப்பர் நேச்சுரல் கதையை படம் மையமாகக் கொண்டிருந்தாலும் உணர்வு சார்ந்த உண்மைகளையும் ‘மண்டவெட்டி’ பேசும். பழமைவாதத்தில் இருந்து தன்னையே மீண்டும் கண்டுபிடிக்க முயலும் ஒரு பெண்ணின் கதையே இதன் மையம். அந்தக் கதாபாத்திரத்திற்கு கோமலியின் அற்புதமான நடிப்பை படக்குழுவே வியந்து பாராட்டியது” என்றார்.

டஸ்கர்ஸ் டென் பிக்சர்ஸ் பேனரில் சரண்ராஜ் செந்தில்குமார் எழுதி, இயக்கி, தயாரித்திருக்கும் ‘மண்டவெட்டி’ திரைப்படம் பதட்டம், நாட்டுப்புறக் கதைகள் மற்றும் மனித உணர்வுகளை இணைக்கும் சூப்பர் நேச்சுரல் கிரைம் திரில்லராக உருவாகியுள்ளது. இதில் கதாநாயகியாக கோமலி பிரசாத் நடித்துள்ளார். ‘செஞ்சி’ எனப்படும் சக்திவாய்ந்த உள்ளூர் தெய்வத்தை மையமாகக் கொண்ட மர்மமான புராணக் கதையைக் கொண்டு, மனதை பதறவைக்கும் மற்றும் உணர்வுப்பூர்வமான உலகிற்குள் இந்த திரைப்படம் பயணிக்கிறது. தற்போது படத்தின்ன் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

தொழில்நுட்பக் குழு:

தயாரிப்பு நிறுவனம் : டஸ்கர்ஸ் டென் பிக்சர்ஸ்,
தயாரிப்பாளர் & இயக்குநர் : சரண்ராஜ் செந்தில்குமார்,
ஒளிப்பதிவு : பிரகாஷ் மனிதன்,
படத்தொகுப்பு : குணா பழனிசாமி,
இசையமைப்பாளர் : தீபக் வேணுகோபால்,
சண்டைக் காட்சிகள் : கெளதம்,
உடை வடிவமைப்பு : சங்கீதா சென்,
ஒலி கலவை : டோனி ஜே ஆண்டனி,
டிஐ கிரேடிங் : பாலகங்காதரன்,
சிஜிஐ : விஜயன்,
தயாரிப்பு மேலாளர் : மகேந்திரன் கந்தசாமி,
ஒப்பனை : நர்மதா
மக்கள் தொடர்பு : சுரேஷ் சந்திரா – அப்துல் நாசர்

Previous Post

நண்பன் அழைத்து வராமல் இருக்க முடியுமா? – அதிரடி பட விழாவில் சஞ்சு சாம்சன்..!!

Next Post

‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுன் நடிக்கும் ‘பிளாஸ்ட்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு

Next Post

'ஆக்ஷன் கிங்' அர்ஜுன் நடிக்கும் 'பிளாஸ்ட்' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு

Popular News

  • நல்லபடம் -விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • #Love’ – அக்டோபர் 2 முதல் நெட்ஃப்ளிக்ஸில் மட்டும்

    0 shares
    Share 0 Tweet 0
  • இரா.சரவணன் இயக்கத்தில், நிவாஸ் கே. பிரசன்னா இசையில், அழுத்தமான படைப்பாக அதிர வைக்க வருகிறது ‘நந்தன் 2’.

    0 shares
    Share 0 Tweet 0
  • அதிரடி ஆக்ஷனில் மிரளவைக்கும் ராஷ்மிகா: மைசா’ திரைப்படத்தின் டீசர் வெளியீடு!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘சிக்மா’ திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா நிகழ்வு!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

நல்லபடம் -விமர்சனம்

September 21, 2026

‘சிக்மா’ திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா நிகழ்வு!

September 21, 2026

இரா.சரவணன் இயக்கத்தில், நிவாஸ் கே. பிரசன்னா இசையில், அழுத்தமான படைப்பாக அதிர வைக்க வருகிறது ‘நந்தன் 2’.

September 21, 2026

அதிரடி ஆக்ஷனில் மிரளவைக்கும் ராஷ்மிகா: மைசா’ திரைப்படத்தின் டீசர் வெளியீடு!

September 21, 2026

#Love’ – அக்டோபர் 2 முதல் நெட்ஃப்ளிக்ஸில் மட்டும்

September 20, 2026

பிரம்மாண்டமாக நடைபெற்ற ‘பத்தா’ இசை வெளியீட்டு விழா!

September 20, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.