• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய “கான் சிட்டி” வரும் ஜூன் 26 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது !!

by Tamil2daynews
May 24, 2026
in சினிமா செய்திகள்
0
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய   “கான் சிட்டி” வரும் ஜூன் 26 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது !!

“கான் சிட்டி” திரைப்படத்தின் டீசர், முதல் மற்றும் இரண்டாம் சிங்கிள் பாடல்கள் ஏற்கனவே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருந்த நிலையில், தற்போது வெளியாகியுள்ள ரிலீஸ் தேதி அறிவிப்பு ரசிகர்களை மேலும் உற்சாகப்படுத்தியுள்ளது. அர்ஜூன் தாஸ் நடிப்பில் உருவாகியுள்ள “கான் சிட்டி” திரைப்படம் வரும் ஜூன் 26 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனை ஒரு அதிரடி போஸ்டருடன்  படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

பவர் ஹவுஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் அர்ஜூன் தாஸ், அன்னா பென், யோகி பாபு, வடிவுக்கரசி உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். பட அறிவிப்பின் ஆரம்பத்திலிருந்தே இப்படத்தின் வித்தியாசமான கதைக்களம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நிலையில், வெளியான டீசரும் அதற்கான எதிர்பார்ப்பை அதிகரித்தது.

குறிப்பாக “ரா ரா ரங்கையா” முதல் சிங்கிள் பாடல் வெளியானவுடனே சமூக வலைதளங்களில் வைரலானது. அதைத்தொடர்ந்து வெளியாகிய “நான் தான் கிங்கு” பாடலும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. ஷான் ரோல்டன் இசையில் உருவான இந்தப் பாடல்கள், அதன் தனித்துவமான மேக்கிங் , ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தது.
“கான் சிட்டி” படம் ஒரு மிடில் கிளாஸ் குடும்பத்தை மையமாக வைத்து பரபரப்பான கமர்ஷியல் எண்டர்டெயினராக  உருவாகியுள்ளது. புதுமையான கதைக்களத்தில் உருவாகும் “கான் சிட்டி” படம், நகர வாழ்க்கையில் கடனில் சிக்கித் தவிக்கும் ஒரு மிடில் கிளாஸ் குடும்பத்தின் கதையை மையமாகக் கொண்டு, குடும்ப உணர்வுகள், நகைச்சுவை, பரபரப்பு ஆகிய அனைத்தும் கலந்த ஒரு முழுமையான ஃபேமிலி என்டர்டெயினராக உருவாகியுள்ளது.

மங்களூர், சென்னை, மும்பை உள்ளிட்ட பல பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ள இந்தப் படத்தின் டிஜிட்டல் உரிமையை Netflix நிறுவனம் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

டீசர், முதல் மற்றும் இரண்டாம் சிங்கிள் பாடல்கள் என தொடர்ந்து வெளியாகிய ஒவ்வொரு அப்டேட்டும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது வெளியான ஜூன் 26 ரிலீஸ் தேதி அறிவிப்பு “கான் சிட்டி” படத்தின் மீதான எதிர்பார்ப்பை இன்னும் அதிகரித்துள்ளது.

தொழில்நுட்ப குழு

எழுத்து, இயக்கம்: ஹரிஷ் துரைராஜ்
தயாரிப்பு: பவர் ஹவுஸ் பிக்சர்ஸ்
ஒளிப்பதிவு: அரவிந்த் விஸ்வநாதன்
எடிட்டிங்: அருள் மோசஸ்
இசை: ஷான் ரோல்டன்
கலை இயக்கம்: ராஜ் கமல்
உடை வடிவமைப்பு: நவா ராம்போ ராஜ்குமார்
ஸ்டண்ட்: ஆக்ஷன் சந்தோஷ்
மக்கள் தொடர்பு: யுவராஜ்

Previous Post

சோனி மியூசிக் வழங்கும் ராப்பர் கிட் சாந்தேவின் “நா வேற லெவல்” பாடல் பத்திரிக்கையாளர் சந்திப்பு !

Next Post

கியூப்ஸ் என்டர்டெயின்மெண்ட்ஸ் தயாரிப்பில் ஷெரீப் முகம்மது வழங்கும் ‘காட்டாளன்’ திரைப்படத்தை ஜி எஸ் சினிமா இன்டர்நேஷனல் லெனின் மே 28ம் தேதி தமிழகமெங்கும் வெளியிடுகிறார்

Next Post

கியூப்ஸ் என்டர்டெயின்மெண்ட்ஸ் தயாரிப்பில் ஷெரீப் முகம்மது வழங்கும் 'காட்டாளன்' திரைப்படத்தை ஜி எஸ் சினிமா இன்டர்நேஷனல் லெனின் மே 28ம் தேதி தமிழகமெங்கும் வெளியிடுகிறார்

Popular News

  • நல்லபடம் -விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • இரா.சரவணன் இயக்கத்தில், நிவாஸ் கே. பிரசன்னா இசையில், அழுத்தமான படைப்பாக அதிர வைக்க வருகிறது ‘நந்தன் 2’.

    0 shares
    Share 0 Tweet 0
  • அதிரடி ஆக்ஷனில் மிரளவைக்கும் ராஷ்மிகா: மைசா’ திரைப்படத்தின் டீசர் வெளியீடு!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘வேட்டுவம்’ பா.இரஞ்சித்தின் பிரம்மாண்ட அபோகலிப்டிக் ஆக்ஷன் திரைப்படம்.

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘சிக்மா’ திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா நிகழ்வு!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

நல்லபடம் -விமர்சனம்

September 21, 2026

‘சிக்மா’ திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா நிகழ்வு!

September 21, 2026

இரா.சரவணன் இயக்கத்தில், நிவாஸ் கே. பிரசன்னா இசையில், அழுத்தமான படைப்பாக அதிர வைக்க வருகிறது ‘நந்தன் 2’.

September 21, 2026

அதிரடி ஆக்ஷனில் மிரளவைக்கும் ராஷ்மிகா: மைசா’ திரைப்படத்தின் டீசர் வெளியீடு!

September 21, 2026

#Love’ – அக்டோபர் 2 முதல் நெட்ஃப்ளிக்ஸில் மட்டும்

September 20, 2026

பிரம்மாண்டமாக நடைபெற்ற ‘பத்தா’ இசை வெளியீட்டு விழா!

September 20, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.