• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

பேட்மிண்டன் விளையாட்டு பின்னணியிலான தமிழ் சினிமாவின் முதல் காதல் திரைப்படம்

by Tamil2daynews
May 30, 2026
in சினிமா செய்திகள்
0
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

பேட்மிண்டன் விளையாட்டு பின்னணியிலான தமிழ் சினிமாவின் முதல் காதல் திரைப்படம்

 

இந்திய சினிமாவில் கிரிக்கெட்டை மையமாக கொண்டு பல திரைப்படங்கள் வெளியாகியுள்ள நிலையில், இந்தியாவில் அனைத்து வயதினராலும்அதிகமாக விளையாடப்படும் மற்றும் பிரபலமான விளையாட்டான பேட்மிண்டன் இதுவரை திரையில்பெரிதாக பிரதிபலிக்கப்படவில்லை. அந்தக் குறையை போக்கும் முயற்சியாக, தமிழ் சினிமாவில் முதல் முறையாக பேட்மிண்டனை மையமாகக் கொண்டு உருவாகும் இளமை ததும்பும் காதல் கலந்த விளையாட்டுதிரைப்படமாக ‘ரீமேட்ச்’ உருவாகிறது.

பிரபல நகைச்சுவை நடிகரும் சமூகசேவகருமான ‘கலக்கப் போவது யாரு?’(KPY) நிகழ்ச்சியின் வெற்றியாளரான KPY பாலா இப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். 2025ம் ஆண்டு வெளியான ‘காந்தி கண்ணாடி’ திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான பாலா, தனது நடிப்பாலும் சமூக சேவைகளாலும்பாராட்டைப் பெற்றுள்ளது அனைவரும் அறிந்ததே.
Imageதனது அடுத்த படத்திற்காக பல கதைகளைகேட்ட பிறகு, பேட்மிண்டனுடன் உள்ளதனிப்பட்ட நெருக்கத்தின் காரணமாக ‘ரீமேட்ச்’ படத்தை பாலா தேர்வு செய்துள்ளார்.பள்ளி நாட்களிலிருந்தே தீவிர பேட்மிண்டன் வீரராக இருந்து, மாநில அளவிலான போட்டியில் மூன்றாம் இடம்பெற்ற அனுபவம் கொண்ட பாலா, இப்படத்தின்உணர்ச்சிமிக்க கதை மற்றும் பேட்மிண்டன் பின்னணியுடன் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார்.

இந்த திரைப்படத்தின் மூலம் தமிழ்சினிமாவுக்கு கதாநாயகியாக அறிமுகமாகிறார் தானு ஹர்ஷா. நாடகக் கலைஞர்,மாடல் மற்றும் கன்னட திரைப்படங்களில் பரிச்சயமான முகமாக இருக்கும் தானு, சிறந்தபேட்மிண்டன் வீராங்கனையுமாவார் எனப்து குறிப்பிடத்தக்கது.

மேலும், முக்கிய கதாபாத்திரங்களில் இளவரசு மற்றும் சந்தோஷ் பிரதாப்நடிக்கின்றனர். இவர்களுடன் ஷா ரா, சஷாங்க், சித்ரா லட்சுமணன், CELL முருகன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். தொழில்நுட்பக் குழுவினர்: இசை – அச்சுராஜாமணி, ஒளிப்பதிவு – அர்வி, படத்தொகுப்பு – என்.பி. ஸ்ரீகாந்த்,கலை இயக்கம் – பா. மகேந்திரன், உடை வடிவமைப்பு – அனுஷா.

‘ரீமேட்ச்’ திரைப்படத்தை, BOFTA திரைப்படக் கல்லூரியின் திரைக்கதைமற்றும் இயக்கப் பிரிவில் விருது பெற்ற மாணவரும், ‘காற்றின் மொழி’, ‘பொம்மை’ போன்ற படங்களில் இயக்குநர் ராதாமோகனின் இணை இயக்குநராக பணியாற்றியவருமான அறிமுக இயக்குநர் ஆர். விமல் குமார்எழுதி இயக்குகிறார்.
Imageஇந்த படத்தை  Zinema Media and Entertainment Ltd நிறுவனத்தின் தினேஷ்ராஜ், தயாரிப்பாளர்கள் பிரகாஷ்சேஷாத்ரி மற்றும் G. ரவி குமார் ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர். Creative Entertainers & Distributors நிறுவனத்தின் G. தனஞ்ஜெயன் படத்தின் க்ரியேட்டிவ் மற்றும் லைன்புரொடக்ஷன் பணிகளை மேற்பார்வை செய்கிறார். மக்கள் தொடர்பு: நிகில் முருகன்.

தமிழ் திரைப்படத் துறையைச் சேர்ந்த பலமுக்கிய பிரபலங்கள், படக்குழுவினர்மற்றும் நடிகர்கள் கலந்து கொண்ட பூஜை விழாவுடன் இன்று இப்படத்தின் படப்பிடிப்புதொடங்கியது. இந்த நிகழ்வில் கலைப்புலி எஸ். தாணு, நடிகை மீனா, அருள்பதி, இயக்குநர்கள் சசி, ராதா மோகன், ஆர். கண்ணன், மகேஷ் ராஜேந்திரன், நடிகர் கதிர், சரிகம ஆனந்த், குக் வித் கோமாளி ஜோஷ்வா, கேபிஒய் தாம்சன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தொடக்கம் முதல் முடிவு வரை ஒரே கட்டமாகநடைபெறும் படப்பிடிப்பு, 2026 அக்டோபருக்குள்நிறைவடையும் என திட்டமிடப்பட்டுள்ளது.விளையாட்டு, காதல், உணர்வுகள் மற்றும் இன்றைய தலைமுறையின்உறவுகளை இணைத்து உருவாகும் ‘ரீமேட்ச்’, பேட்மிண்டனின் உற்சாகத்தையும் உணர்வையும் பெரிய திரையில்கொண்டு வந்து, ரசிகர்களுக்குபுதுமையான திரையரங்க அனுபவத்தை வழங்கும் என படக்குழுவினர் தெரிவிக்கிறார்கள்.

Previous Post

லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் வழங்கும் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில், சந்தீப் கிஷன் நடிப்பில் உருவாகியுள்ள ‘சிக்மா’ திரைப்படம் உலகமெங்கும் ஜூலை 31ஆம் தேதி வெளியாகிறது!

Next Post

பிரபல கேமராமேனும் தயாரிப்பாளருமான ரவியாதவ் பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடிய “ரஞ்சன்” படக்குழு.

Next Post

பிரபல கேமராமேனும் தயாரிப்பாளருமான ரவியாதவ் பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடிய "ரஞ்சன்" படக்குழு.

Popular News

  • பேட்மிண்டன் விளையாட்டு பின்னணியிலான தமிழ் சினிமாவின் முதல் காதல் திரைப்படம்

    0 shares
    Share 0 Tweet 0
  • பிரபல கேமராமேனும் தயாரிப்பாளருமான ரவியாதவ் பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடிய “ரஞ்சன்” படக்குழு.

    0 shares
    Share 0 Tweet 0
  • “எல்லோரையும் நம்பாதே” என்பது ரவி மோகன் தனது இளம் பருவ ரவி மோகனுக்கு அளிக்கும் அறிவுரை.

    0 shares
    Share 0 Tweet 0
  • திரைப்பட இயக்குநராக இருந்து நடிகராக மாறிய பாலாஜி சக்திவேல், பைலட் திரைப்படமான ‘ஆஃப் தி ரெக்கார்ட்’டில் கதாநாயகனாக நடித்துள்ளார்!

    0 shares
    Share 0 Tweet 0
  • AP இண்டர்நேஷனல் மற்றும் விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் நிறுவனங்கள் இணைந்து வழங்கும் “யெல்லோ யெல்லோ டர்டி ஃபெல்லோ” பட ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் டீசர் வெளியானது !!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

திரைப்பட இயக்குநராக இருந்து நடிகராக மாறிய பாலாஜி சக்திவேல், பைலட் திரைப்படமான ‘ஆஃப் தி ரெக்கார்ட்’டில் கதாநாயகனாக நடித்துள்ளார்!

May 30, 2026

“எல்லோரையும் நம்பாதே” என்பது ரவி மோகன் தனது இளம் பருவ ரவி மோகனுக்கு அளிக்கும் அறிவுரை.

May 30, 2026

பிரபல கேமராமேனும் தயாரிப்பாளருமான ரவியாதவ் பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடிய “ரஞ்சன்” படக்குழு.

May 30, 2026

பேட்மிண்டன் விளையாட்டு பின்னணியிலான தமிழ் சினிமாவின் முதல் காதல் திரைப்படம்

May 30, 2026

லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் வழங்கும் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில், சந்தீப் கிஷன் நடிப்பில் உருவாகியுள்ள ‘சிக்மா’ திரைப்படம் உலகமெங்கும் ஜூலை 31ஆம் தேதி வெளியாகிறது!

May 30, 2026

கரண் தயாநிதி மாறன் அறிமுகப்படுத்தும் கதைஷார்ட்ஸ் (KadhaiShorts) – மைக்ரோ டிராமாவுக்கென உருவாகும் தமிழ்நாட்டின் முதல் டிஜிட்டல் கதைத் தளம்

May 30, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.