• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

இசைஞானி இளையராஜா இசையில் மாரி செல்வராஜ் இயக்கும் புதிய படம் “மஞ்சணத்தி” அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

by Tamil2daynews
June 2, 2026
in சினிமா செய்திகள்
0
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

இசைஞானி இளையராஜா இசையில் மாரி செல்வராஜ் இயக்கும் புதிய படம் “மஞ்சணத்தி” அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

 

தமிழ் சினிமாவில் சமூக அக்கறை மிக்க கதைகளையும், அழுத்தமான கலைப்படைப்புகளையும் தொடர்ந்து வழங்கி வரும் இயக்குநர் மாரி செல்வராஜ், இசைஞானி இளையராஜாவுடன் முதல் முறையாக இணையும் புதிய திரைப்படம் “மஞ்சணத்தி” இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அறிவிப்பு வெளியானதுமே ரசிகர்கள் மற்றும் திரையுலக வட்டாரங்களில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கதை சொல்லும் தனித்துவமான பாணிக்காக பாராட்டப்படும் மாரி செல்வராஜ் மற்றும் காலத்தால் அழியாத இசையை வழங்கி வரும் இளையராஜா ஆகிய இரு படைப்பாளிகளின் கூட்டணி தமிழ் சினிமாவிற்கு புதிய அனுபவத்தை வழங்கும் என்ற நம்பிக்கையை உருவாக்கியுள்ளது.
‘பரியேறும் பெருமாள்’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான மாரி செல்வராஜ், தொடர்ந்து ‘கர்ணன்’, ‘மாமன்னன்’, ‘வாழை’, ‘பைசன் காளமாடன்’ உள்ளிட்ட படங்கள் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு வலுவான அடையாளத்தை உருவாக்கியுள்ளார். சமூகத்தின் அடித்தட்டு மக்களின் வாழ்வியலையும், அவர்களின் உணர்வுகளையும் ஆழமாக பதிவு செய்யும் அவரது படைப்புகள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. அந்த வகையில் அவரது இயக்கத்தில் உருவாகும் ஆறாவது திரைப்படமாக “மஞ்சணத்தி” உருவாகிறது.இசை உலகில் ஐந்து தசாப்தங்களுக்கும் மேலாக தனித்துவமான ஆளுமையாக விளங்கி வரும் இசைஞானி இளையராஜா, ஆயிரக்கணக்கான பாடல்களையும் மறக்க முடியாத பின்னணி இசைகளையும் வழங்கியுள்ளார். நாட்டுப்புற இசை, கர்நாடக இசை, மேற்கத்திய இசை உள்ளிட்ட பல்வேறு இசை வடிவங்களை ஒருங்கிணைத்து தமிழ் சினிமாவுக்கு புதிய பரிமாணங்களை அளித்தவர். கதையின் உணர்வுகளுக்கு உயிர் கொடுக்கும் அவரது இசை, “மஞ்சணத்தி” திரைப்படத்திற்கும் மிகப்பெரிய பலமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
‘வாழை’ திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு, நவ்வி ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் அடுத்த படைப்பாக “மஞ்சணத்தி” உருவாகிறது. நவ்வி ஸ்டூடியோஸ் சார்பாக திவ்யா மாரி செல்வராஜ் வழங்கும் இந்த திரைப்படத்தை ஃபார்சூன் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் சுஷாந்த் பிரசாத் இணைந்து தயாரிக்கிறார்.

இதேவேளை, தயாரிப்பாளர் ஐசரி K கணேஷ் வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில் நடிகர் தனுஷுடன் மாரி செல்வராஜ் இணையவுள்ள பிரம்மாண்டமான வரலாற்றுத் திரைப்படத்தின் பணிகளும் ஒருபுறம் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த படத்திற்கு இசைபுயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். ஏற்கனவே மாமன்னன் படத்தில் ஏ.ஆர்.ரஹ்மானுடன் மாரி செல்வராஜ் இணைந்து பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தனுஷுடன் மாரி செல்வராஜ் பணியாற்றும் படத்திற்கான விரிவான வரலாற்று ஆய்வுகள் மற்றும் மிகப்பெரிய அளவிலான முன்தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால், அந்தத் திட்டத்தின் இடைவேளையில் “மஞ்சணத்தி” திரைப்படம் உருவாகவுள்ளது. குறிப்பாக, ‘வாழை’ திரைப்படத்தைப் போல மனதுக்கு நெருக்கமான, மண்ணின் மணம் வீசும் வாழ்வியல் படைப்பாக “மஞ்சணத்தி”யை மாரி செல்வராஜ் உருவாக்கவுள்ளார். அதனால் இப்படம் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.
மாரி செல்வராஜின் தனித்துவமான கதை சொல்லல், இசைஞானி இளையராஜாவின் மாயாஜால இசை மற்றும் வாழ்வியலை மையமாகக் கொண்ட கதைக்களம் ஆகியவற்றின் சங்கமமாக உருவாகும் “மஞ்சணத்தி”, தமிழ் சினிமாவில் கவனிக்கத்தக்க படைப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. படத்தின் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரே வருடத்தில் இருவேறு படங்களில் தமிழ் திரையுலகின் இசை ஜாம்பவான்களான இசைஞானி இளையராஜா மற்றும் இசைபுயல் ஏ.ஆர்.ரஹமான் உடன் இயக்குனர் மாரி செல்வராஜ் பணியாற்றுவது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

https://youtu.be/rVvhhfhjxds?si=r6qnV69mSd8aOk6A
Previous Post

சென்னையில் கோலாகலமாக நடைபெற்ற ‘பெத்தி’ திரைப்பட பத்திரிகையாளர் சந்திப்பு

Next Post

தயாள் பத்மநாபனின் ‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ பத்திரிகையாளர் சந்திப்பு!

Next Post

தயாள் பத்மநாபனின் ‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ பத்திரிகையாளர் சந்திப்பு!

Popular News

  • பிரபல கேமராமேனும் தயாரிப்பாளருமான ரவியாதவ் பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடிய “ரஞ்சன்” படக்குழு.

    0 shares
    Share 0 Tweet 0
  • இசைஞானி இளையராஜா இசையில் மாரி செல்வராஜ் இயக்கும் புதிய படம் “மஞ்சணத்தி” அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

    0 shares
    Share 0 Tweet 0
  • அறிமுக இயக்குநர் படத்தில் சிவராஜ்குமார் – அபிஷன் ஜீவிந்த்..!!

    0 shares
    Share 0 Tweet 0
  • தயாள் பத்மநாபனின் ‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ பத்திரிகையாளர் சந்திப்பு!

    0 shares
    Share 0 Tweet 0
  • துல்கர் சல்மான், பூஜா ஹெக்டே நடிக்கும் #DQ41 படத்தின் முக்கியமான படப்பிடிப்பு கட்டம் நிறைவடைந்துள்ளது !!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

அறிமுக இயக்குநர் படத்தில் சிவராஜ்குமார் – அபிஷன் ஜீவிந்த்..!!

June 2, 2026

தயாள் பத்மநாபனின் ‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ பத்திரிகையாளர் சந்திப்பு!

June 2, 2026

இசைஞானி இளையராஜா இசையில் மாரி செல்வராஜ் இயக்கும் புதிய படம் “மஞ்சணத்தி” அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

June 2, 2026
சென்னையில் கோலாகலமாக நடைபெற்ற ‘பெத்தி’ திரைப்பட பத்திரிகையாளர் சந்திப்பு

சென்னையில் கோலாகலமாக நடைபெற்ற ‘பெத்தி’ திரைப்பட பத்திரிகையாளர் சந்திப்பு

June 2, 2026

‘பென்ஸ்’ திரைப்படத்தில் நடிகர் ரவி மோகன் முன்னணி கதாபாத்திரங்களில் ஒருவராக இணைந்திருப்பது LCU மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகமாக்கியுள்ளது!

June 2, 2026

திரைப்பட இயக்குநராக இருந்து நடிகராக மாறிய பாலாஜி சக்திவேல், பைலட் திரைப்படமான ‘ஆஃப் தி ரெக்கார்ட்’டில் கதாநாயகனாக நடித்துள்ளார்!

May 30, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.