• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

பாக்ஸ் ஆபீஸ் வசூலில் புதிய சரித்திரம் படைத்த ‘தந்தை’ சிரஞ்சீவி – ‘மகன்’ ராம்சரண்

by Tamil2daynews
June 16, 2026
in சினிமா செய்திகள்
0
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
பாக்ஸ் ஆபீஸ் வசூலில் புதிய சரித்திரம் படைத்த ‘தந்தை’ சிரஞ்சீவி – ‘மகன்’ ராம்சரண்

பல புகழ்பெற்ற குடும்பங்களையும்…. வெற்றிகரமான தலைமுறைகளையும்… ஒரே குடும்பத்தில் இருந்து உருவான பல நட்சத்திரங்களையும்… இந்திய திரையுலகம் சந்தித்துள்ளது. ஆனால் 2026 ஆம் ஆண்டில் ஒரு தனித்துவமான நிகழ்வை இந்திய திரையுலகம் கண்டுள்ளது. தந்தையும், மகனும் ஒரே ஆண்டில் மிகப் பெரிய பாக்ஸ் ஆபீஸ் வசூல் சாதனையாளராக திகழ்கின்றனர்.

முதலில் ‘மெகா ஸ்டார்’ சிரஞ்சீவி- அவரது  நடிப்பில் வெளியான மன சங்கர வர பிரசாத் காரு ( Mana Sangara Vara Prasad Garu) திரைப்படத்தின் மூலம் வசூலுக்கான சாதனை களத்தை அமைத்தார். இந்தத் திரைப்படம் உலகம் முழுவதும் 300 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்தது. இது இந்த ஆண்டின் அதிக வசூல் செய்த தென்னிந்திய திரைப்படம் என்ற சாதனையையும் படைத்தது. சில மாதங்களுக்கு பிறகு சிரஞ்சீவியின் மகனும், ‘மெகா பவர் ஸ்டார்’ என ரசிகர்களால் வர்ணிக்கப்படுபவருமான ராம்சரண் அந்த சாதனையை ஒரு படி மேலே கொண்டு சென்றார்.

அவரது நடிப்பில் அண்மையில் வெளியான பிரம்மாண்ட வெற்றி படமான ‘பெத்தி’ ( Peddi ) –  ‘மன சங்கர வர பிரசாத் காரு’ படத்தின் உலகளாவிய ஒட்டுமொத்த வசூலையும் முறியடித்தது. அத்துடன் 2026 ஆம் ஆண்டில் தென்னிந்தியாவின் வெளியான படங்களில் அதிக வசூலை செய்து ,பாக்ஸ் ஆபீஸ் சாம்பியனாகவும் உருவெடுத்தது. புச்சி பாபு சனா இயக்கத்தில் உருவான ‘பெத்தி’ திரைப்படம் 400 கோடி ரூபாய் வசூல் என்ற இலக்கை நோக்கி வேகமாக முன்னேறுகிறது.
இந்த சாதனை சரித்திரத்தின் முக்கியத்துவம் என்பது வசூல் தொகையை கடந்து நிற்கிறது. ஒரு ஆண்டில் மிகப்பெரிய வசூல் செய்த படங்களின் பட்டியலில் முதல் இரண்டு இடங்களை.. தந்தையும், மகனும் ஜோடியாக பிடித்திருப்பதை இந்திய திரையுலகம் இதற்கும் முன் கண்டதில்லை.. ஒரு திரை குடும்பத்தை சேர்ந்த இரண்டு தலைமுறையினரும்.. ஒரே நேரத்தில் திரையுலகில் ஆதிக்கம் செலுத்தி இருக்கும் அபூர்வ தருணம் இது.

அவர்கள் நிகழ்த்திய இந்த சாதனையை தனித்துவமாக வெளிப்படுத்துவது அவர்கள் வெற்றி பெற்ற காலம் தான். பொதுவாக தற்போதைய சூழலில் திரையுலகினருக்கு மிகப்பெரிய வணிக ரீதியான வெற்றிகள் அவசியமாக தேவைப்பட்ட ஒரு காலகட்டத்தில்… இந்த இரு படங்களும் வெளியாகி வெற்றி பெற்றதுடன், திரையரங்கு சார்ந்த வணிகத்திற்கு புதிய உத்வேகத்தையும் அளித்திருக்கின்றன. குறிப்பாக கோடை கால பருவத்தில் எதிர்பார்த்த அளவிற்கு திரையரங்குகள் மூலமான வெற்றி கிடைக்காத நிலையில்… திரைப்பட விநியோகஸ்தர்களுக்கும்.. திரையரங்கு உரிமையாளர்களுக்கும்… ‘பெத்தி’ திரைப்படம் மிகவும் நெருக்கடியான காலகட்டத்தில் வெற்றியைப் பெற்று, அவர்களுக்கு நிம்மதியை வழங்கி உள்ளது.

சிரஞ்சீவியும், ராம்சரணும் இணைந்து 2026 ஆம் ஆண்டில் ‘மெகா’ குடும்பத்திற்கு ஒரு வரலாற்று சிறப்புமிக்க ஆண்டாக மாற்றி உள்ளனர். இவை பல ஆண்டுகளுக்கு ஈடு இணையற்றதாக திகழக்கூடிய ஒரு பாக்ஸ் ஆபீஸ் சரித்திரத்தின் புதிய அத்தியாயத்தை அவர்கள் எழுதியுள்ளனர்.

Previous Post

நடிகர் அல்லு அர்ஜூனின் ’AA23’ திரைப்படத்தின் தீம் இசையை பயன்படுத்திய பிரதமர் நரேந்திர மோடி!

Next Post

டி. கோபிசந்த், சங்கல்ப் ரெட்டி, ஸ்ரீனிவாசா சித்தூரியின் ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன், பவன் குமார் வழங்கும் வரலாற்றுப் படம் ‘பாரதவர்ஷா’!

Next Post

டி. கோபிசந்த், சங்கல்ப் ரெட்டி, ஸ்ரீனிவாசா சித்தூரியின் ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன், பவன் குமார் வழங்கும் வரலாற்றுப் படம் 'பாரதவர்ஷா'!

Popular News

  • இரா.சரவணன் இயக்கத்தில், நிவாஸ் கே. பிரசன்னா இசையில், அழுத்தமான படைப்பாக அதிர வைக்க வருகிறது ‘நந்தன் 2’.

    0 shares
    Share 0 Tweet 0
  • வரலாற்றில் முதல் முறையாக இசைஞானி இளையராஜாவின் இசையில் உருவான இலங்கைத் தமிழ்த் திரைப்படம்

    0 shares
    Share 0 Tweet 0
  • பீப் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘வேட்டுவம்’ பா.இரஞ்சித்தின் பிரம்மாண்ட அபோகலிப்டிக் ஆக்ஷன் திரைப்படம்.

    0 shares
    Share 0 Tweet 0
  • இயக்குநர் சுரேஷ் சங்கையா இந்தப் படத்தை கொடுத்தது பாக்கியமாக பார்க்கிறேன் – யோகி பாபு

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

நல்லபடம் -விமர்சனம்

September 21, 2026

‘சிக்மா’ திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா நிகழ்வு!

September 21, 2026

இரா.சரவணன் இயக்கத்தில், நிவாஸ் கே. பிரசன்னா இசையில், அழுத்தமான படைப்பாக அதிர வைக்க வருகிறது ‘நந்தன் 2’.

September 21, 2026

அதிரடி ஆக்ஷனில் மிரளவைக்கும் ராஷ்மிகா: மைசா’ திரைப்படத்தின் டீசர் வெளியீடு!

September 21, 2026

#Love’ – அக்டோபர் 2 முதல் நெட்ஃப்ளிக்ஸில் மட்டும்

September 20, 2026

பிரம்மாண்டமாக நடைபெற்ற ‘பத்தா’ இசை வெளியீட்டு விழா!

September 20, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.