• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

ஜூலை 2 முதல் நெட்ஃப்ளிக்ஸில் ப்ரீமியர் ஆகும் சூப்பர் சுப்பு’!

by Tamil2daynews
June 16, 2026
in சினிமா செய்திகள்
0
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

ஜூலை 2 முதல் நெட்ஃப்ளிக்ஸில் ப்ரீமியர் ஆகும் சூப்பர் சுப்பு’!

 

மணி அடிக்கும் முன்பே ஒரு கேள்வி மாகிபூர் முழுவதும் பேசுபொருளாகும் சுப்பு சாரின் வகுப்புக்கு உங்களை வரவேற்கிறோம். இயக்குநர் மாலிக் ராம் இயக்கியுள்ள இந்தத் தொடரில் சந்தீப் கிஷன், மிதிலா பால்கர் மற்றும் முரளி ஷர்மா ஆகியோர் நடித்துள்ளனர். ‘சூப்பர் சுப்பு’ ஜூலை 2 அன்று நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகிறது.

நெட்ஃப்ளிக்ஸின் முதல் தெலுங்கு ஒரிஜினல் தொடரான ‘சூப்பர் சுப்பு’, சுப்பிரமணியம் சில்லுகுரி ராவ் (சுப்பு) என்ற நேர்மையான இளைஞரின் வாழ்க்கையை காட்டுகிறது. மாகிபூர் என்ற கிராமத்தில் செக்ஸ் எஜூகேஷன் ஆஃபிசராக வேலை கிடைத்ததும் அவரது வாழ்க்கை தலைகீழாக மாறுகிறது. அனுபவமின்றி பாடத்திட்டத்தையும், கிராம மக்களுக்கு கல்வி கற்பிக்க வேண்டும் என்ற சூழலில் அங்கு செல்கிறார் சுப்பு. ஆனால் ஆர்வம், குழப்பம் மற்றும் நான்கு சுவர்களுக்குள் உரையாடல் என சிக்கிக் கொள்கிறார். சுப்புவுக்கு இந்த குறுகிய காலப் பணி, வாழ்க்கையை மாற்றும் அனுபவமாக மாறுகிறது. ஆனால் அவர் தன்னிடமே ஒரு முக்கியமான கேள்வியை எழுப்ப வேண்டியுள்ளது. அதாவது, இந்த புதிய சூழ்நிலையில் வாழ்வதற்காக தனது காதல், குடும்பம் மற்றும் தொழிலை ஆபத்தில் விட்டுவிட அவர் தயாரா எனபதுதான் அது.

நெட்ஃப்ளிக்ஸ் இந்தியாவின் உள்ளடக்கப் பிரிவு துணைத் தலைவர் மோனிகா ஷெர்கில் பகிர்ந்து கொண்டதாவது, “’சூப்பர் சுப்பு’ என்பது மனம் விட்டு சிரிக்க வைக்கும் நகைச்சுவைத் தொடர். மாகிபூர் கிராமத்தின் வண்ணமயமான உலகமும், அன்பான கதாபாத்திரங்களையும் இதில் நீங்கள் கண்டு ரசிக்கலாம். பாலியல் கல்வி மற்றும் அதனை மக்கள் எதிர்கொள்ளும் விதத்தை இயக்குநர் மாலிக் ராம் நகைச்சுவையுடன் சொல்லியுள்ளார். பாலியல் கல்வி ஆசிரியராக இந்த உலகில் தனது இடத்தைத் தேடும் அப்பாவியான சுப்பு என்ற கதாபாத்திரம் எதிர்கொள்ளும் நகைச்சுவை அனுபவங்களே இந்தக் கதை. சந்தீப் கிஷன், மிதிலா பால்கர், முரளி ஷர்மா, மானசா செளத்ரி மற்றும் லெஜெண்ட்ரி பிரம்மானந்தம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். நெட்ஃப்ளிக்ஸின் முதல் தெலுங்கு ஒரிஜினல் தொடரான ‘சூப்பர் சுப்பு’ ஒரு சிறந்த கதைக்குத் தேவையான அனைத்தையும் கொண்டுள்ளது. இந்த கதை நிச்சயம் பார்வையாளர்களின் நினைவில் நீண்ட நாள் நீடித்திருக்கும்” என்றார்.
இந்தத் தொடரைப் பற்றி இயக்குநர் மாலிக் ராம் பகிர்ந்து கொண்டதாவது, “’சூப்பர் சுப்பு’ மூலம் நாங்கள் நகைச்சுவையாகவும், உணர்வுப்பூர்வமாகவும் ஒரு கதையைச் சொல்ல விரும்பினோம். அதே நேரத்தில், பாலியல் கல்வி குறித்த உரையாடல்கள் மறைத்து பேசாமல், இயல்பாகப் பார்க்க வேண்டும் என்பதையும் நோக்கமாகக் கொண்டோம். அதற்கான சிறந்த வழி நகைச்சுவைதான். ஏனெனில், சிரிப்பு உடனடியாகத் தயக்கத்தை உடைத்துவிடுகிறது. இந்தக் குழப்பங்களின் மையத்தில், உலகில் தனது இடத்தைத் தேடும் மிகவும் அப்பாவியான சுப்பு இருக்கிறார். இந்தத் தொடர் குடும்ப உறவுகள், தலைமுறை இடைவெளிகள் மற்றும் மனித உறவுகளை பற்றியும் பேசுகிறது. திறமையான நடிகர்கள் மாகிபூருக்கு உயிர் கொடுத்துள்ளனர். உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்கள் நெட்ஃபிளிக்ஸ் மூலம் இந்த கிராமத்திற்குள் நுழைவதை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்” என்றார்.

மாலிக் ராம், ரமேஷ் எலிகெட்டி மற்றும் சிவானி தோபால் ஆகியோர் எழுதியுள்ள இந்தத் தொடரை ராஜீவ் சிலகா மற்றும் பரத் லட்சுமிபதி தயாரித்துள்ளனர். சிலகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தத் தொடரில் கெட் அப் ஸ்ரீனு, மானசா சௌத்ரி, ஜீவன், மற்றும் பிரம்மானந்தம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ஜூலை 2 முதல் ‘சூப்பர் சுப்பு’ நெட்ஃப்ளிக்ஸில் ஸ்ட்ரீமிங் ஆகிறது.

Previous Post

நடிகர்கள் ரவி மரியா, ராதாரவி நடிக்கும் ‘மக்கள் தலைவா’ படத்தின் இசை வெளியீட்டு விழா

Next Post

அல்புகெர்கி ரெக்கார்ட்ஸ் மற்றும் யுனிவர்சல் மியூசிக் இந்தியா கூட்டணியின் முதல் வெளியீடான ‘அரவிந்த்’ மூலம் ராக்ஸ்டார் அனிருத் புதிய அத்தியாயத்தைத் தொடங்குகிறார்!

Next Post

அல்புகெர்கி ரெக்கார்ட்ஸ் மற்றும் யுனிவர்சல் மியூசிக் இந்தியா கூட்டணியின் முதல் வெளியீடான ‘அரவிந்த்’ மூலம் ராக்ஸ்டார் அனிருத் புதிய அத்தியாயத்தைத் தொடங்குகிறார்!

Popular News

  • ஆகஸ்ட் 14ஆம் தேதி ஆலி

    0 shares
    Share 0 Tweet 0
  • புத்தியே சிறந்த ஆயுதம் ; க்ரைம் த்ரில்லராக உருவாகும் ‘பீப்’ திரைப்படம்

    0 shares
    Share 0 Tweet 0
  • பிரைம் வீடியோ வழங்க, சசிகுமார் நடிக்கும் ‘வதந்தி சீசன் 2: தி மிஸ்டரி ஆஃப் மணி’ இணையத் தொடரின் பத்திரிகையாளர் சந்திப்பு.

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ஸ்ட்ரீட் ஃபைட்டர்’ திரைப்பட டிரெய்லர்: நோவா சென்டினியோ, ஜேசன் மோமோவா மற்றும் வித்யுத் ஜமால் இணையும் அதிரடி ஆக்‌ஷன்!

    0 shares
    Share 0 Tweet 0
  • மரகத நாணயம் படப்புகழ் இயக்குநர் ARK சரவணன் இயக்கத்தில், நடிகர் ஹிப் ஹாப் ஆதி

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

‘நிறம்’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!

‘நிறம்’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!

August 3, 2026

ஆகஸ்ட் 14ஆம் தேதி ஆலி

August 3, 2026

புத்தியே சிறந்த ஆயுதம் ; க்ரைம் த்ரில்லராக உருவாகும் ‘பீப்’ திரைப்படம்

August 3, 2026

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் ‘டயங்கரம்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு

August 3, 2026

கார்த்தி நடிப்பில் ‘சர்தார் 2’ டீசர் வெளியீடு

August 3, 2026

பிரைம் வீடியோ வழங்க, சசிகுமார் நடிக்கும் ‘வதந்தி சீசன் 2: தி மிஸ்டரி ஆஃப் மணி’ இணையத் தொடரின் பத்திரிகையாளர் சந்திப்பு.

August 3, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.