• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

சூர்யா – மமிதா பைஜு கலக்கும் “விஸ்வநாத் & சன்ஸ்” படத்தின் இரண்டாவது சிங்கிள் “தி வெட்டிங் சாங்” ( The Wedding Song ) வெளியானது!

by Tamil2daynews
July 27, 2026
in சினிமா செய்திகள்
0
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

சூர்யா – மமிதா பைஜு கலக்கும் “விஸ்வநாத் & சன்ஸ்”  படத்தின் இரண்டாவது சிங்கிள் “தி வெட்டிங் சாங்” ( The Wedding Song ) வெளியானது!

 

“பட்டாம்பூச்சி / நேனோ பட்டர்ஃப்ளை” என்ற முதல் சிங்கிள் மூலம் இசை ரசிகர்களின் மனதை வென்ற “விஸ்வநாத் & சன்ஸ்” திரைப்படக் குழு, தற்போது மற்றொரு உற்சாகமான இசை விருந்தாக “தி வெட்டிங் சாங்” பாடலை வெளியிட்டுள்ளது. வெளியான சில நிமிடங்களிலேயே ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று, இந்த சீசனின் கொண்டாட்டப் பாடலாக இது பேசப்பட்டு வருகிறது.

முழுக்க முழுக்க திருமணக் கொண்டாட்டத்தின் மகிழ்ச்சி, உற்சாகம் மற்றும் குடும்ப பாசத்தை வெளிப்படுத்தும் இந்த பாடலில், சூர்யா மற்றும் மமிதா பைஜு தங்களது உற்சாகமான நடன அசைவுகளால் திரையை வண்ணமயமாக்கியுள்ளனர். குடும்பத்தின் பிரம்மாண்டமான  திருமணத்தின் கொண்டாட்ட மனநிலையை அப்படியே ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் இந்த பாடல் உருவாகியுள்ளது.

இந்தப் பாடலின் சிறப்பு அம்சமாக, நடிகர் சூர்யா தானே தனது குரலில் பாடியிருப்பது ரசிகர்களுக்கு இனிய ஆச்சரியமாக அமைந்துள்ளது. அவரது குரலும், திரையில் வெளிப்படும் உற்சாகமான நடிப்பும் இணைந்து பாடலுக்கு கூடுதல் உயிர் கொடுத்துள்ளன.
Imageஇசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார், மீண்டும் ஒருமுறை தனது துள்ளலான மற்றும் கொண்டாட்ட மனநிலையை பிரதிபலிக்கும் இசையால் அனைவரையும் கவர்ந்துள்ளார். பாடலாசிரியர் கென் கருணாஸ் எழுதிய வரிகள், திருமண விழாவின் மகிழ்ச்சியையும் குடும்ப உறவுகளின் உணர்வுகளையும் அழகாக வெளிப்படுத்துகின்றன.

ஏற்கனவே “பட்டாம்பூச்சி / நேனோ பட்டர்ஃப்ளை” மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது வெளியாகியுள்ள “தி வெட்டிங் சாங்” பாடலும் அதே வரிசையில் ரசிகர்களின் பிளேலிஸ்டில் இடம்பிடித்துள்ளது. தொடர்ச்சியாக இரண்டு வெற்றிப் பாடல்கள் வெளியாகியுள்ளதால், “விஸ்வநாத் & சன்ஸ்” திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.

இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கியுள்ள இந்த குடும்ப பொழுதுபோக்கு திரைப்படத்தை சூர்யதேவரா நாக வம்சி மற்றும் சாய் சௌஜன்யா ஆகியோர் சிதாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் (Sithara Entertainments)  மற்றும் ஃபார்ச்சூன் ஃபோர்   ( Fortune Four Cinemas )   சினிமாஸ் நிறுவனங்களின் சார்பில் தயாரித்துள்ளனர். ஸ்ரீகரா ஸ்டூடியோஸ் நிறுவனம் படத்தை வழங்குகிறது.

இந்தியா முழுவதும் சுதந்திர தின வார இறுதி கொண்டாட்டத்தை முன்னிட்டு, 2026 ஆகஸ்ட் 14 ஆம் தேதி “விஸ்வநாத் & சன்ஸ்” திரைப்படம் உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

Previous Post

நடிகர் ஜிவி பிரகாஷ் நடிப்பில், சீனு ராமசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள ’இடிமுழக்கம்’ திரைப்படத்தின் இரண்டு அதிரடி குத்துப்பாடல்களின் லிரிக்கல் வீடியோ

Next Post

மலேசியாவில் “சொடக்கு” பட ஆடியோ – டிரைலர் வெளியீடு!

Next Post

மலேசியாவில் “சொடக்கு” பட ஆடியோ - டிரைலர் வெளியீடு!

Popular News

  • ஏ.ஆர். ரஹ்மான் இசையில், கார்த்திக் நேத்தா வரிகளில், சின்மயி ஸ்ரீபதா மற்றும் ஹரிச்சரண் குரலில் உருவான ஸ்ரீ ராமரை கொண்டாடும் ‘ஜெய் ஜெய் ராம்’ பாடல் ‘ராமாயணம்’ திரைப்படத்தில் இருந்து வெளியாகியுள்ளது!

    0 shares
    Share 0 Tweet 0
  • தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராகத் தனது இடத்தை நிலைநிறுத்தும் முனைப்பில் நடிகை நிதி அகர்வால்!

    0 shares
    Share 0 Tweet 0
  • ராவடி டிசம்பர் 24 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது!!

    0 shares
    Share 0 Tweet 0
  • லெலின் பாண்டியன் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • பாரடைஸ் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

டோரதி – விமர்சனம்

September 25, 2026

இதுவரை காணாத ஹாட் லுக்! ஆலியா பட்டின் ‘லவ் & வார்’ (Love & War) முதல் பார்வை போஸ்டர்கள் வைரல்!

September 25, 2026

“வெற்றிமாறன் மாற்றியது சூரியை அல்ல, ரசிகர்களின் பார்வையை!” – பாடலாசிரியர் மதன் கார்க்கி விளக்கம்!

September 25, 2026

‘பத்தா’ படத்தின் டிரெய்லர் வெளியீடு – விஜய் சேதுபதியின் பல முகங்களைக் காட்டும் வித்தியாசமான டிரெய்லர்

September 25, 2026

மீசைய முறுக்கு2 – விமர்சனம்

September 25, 2026

பாரடைஸ் – விமர்சனம்

September 25, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.