• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

‘ஸ்ட்ரீட் ஃபைட்டர்’ திரைப்பட டிரெய்லர்: நோவா சென்டினியோ, ஜேசன் மோமோவா மற்றும் வித்யுத் ஜமால் இணையும் அதிரடி ஆக்‌ஷன்!

by Tamil2daynews
July 31, 2026
in சினிமா செய்திகள்
0
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

‘ஸ்ட்ரீட் ஃபைட்டர்’ திரைப்பட டிரெய்லர்: நோவா சென்டினியோ, ஜேசன் மோமோவா மற்றும் வித்யுத் ஜமால் இணையும் அதிரடி ஆக்‌ஷன்!

 

மிகுந்த எதிர்பார்ப்புக்கிடையில் ‘ஸ்ட்ரீட் ஃபைட்டர்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. இந்திய ரசிகர்களை ஆச்சரியப்படுத்தும் பல விஷயங்களும் இதில் உண்டு. பாரமவுண்ட் பிக்சர்ஸ், லெஜண்டரி என்டர்டெயின்மென்ட் மற்றும் கேப்காம் இணைந்து தயாரித்துள்ள இந்த திரைப்படத்தில் நோவா சென்டினியோ, ஜேசன் மோமோவா, ஆண்ட்ரூ கோஜி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்திய ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில், ஆக்ஷன் நாயகன் வித்யுத் ஜமால், புகழ்பெற்ற யோகா குரு தல்சிம் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

திரையரங்குகளில் ரசிகர்களை இருக்கை நுனியில் அமர வைக்கும் வகையில் அதிரடி ஆக்சன் காட்சிகளோடு இந்த டிரெய்லர் தற்போது வெளியாகி உள்ளது.

1993 ஆம் ஆண்டை பின்னணியாகக் கொண்ட இந்தக் கதையில், பிரிந்துபோன போர்வீரர்களான ரியூ (ஆண்ட்ரூ கோஜி) மற்றும் கென் மாஸ்டர்ஸ் (நோவா சென்டினியோ) மீண்டும் போர்க்களத்தில் களமிறங்க வேண்டிய சூழ்நிலை உருவாகிறது. மர்மம் நிறைந்த சுன்-லி (கலினா லியாங்), அடுத்த வேர்ல்ட் வாரியர் டோர்னமென்ட்டில் பங்கேற்க அவர்களை அழைக்கிறார். விதி மற்றும் கோபத்துடன் மோதும் இந்த கொடூரமான போட்டியின் பின்னால் உயிருக்கு ஆபத்தான ஒரு சதித்திட்டம் மறைந்துள்ளது. அது ரியூ மற்றும் கெனை ஒருவருக்கு ஒருவர் எதிராக நிற்கவும், தங்களின் கடந்தகால இருண்ட நினைவுகளை எதிர்கொள்ளவும் கட்டாயப்படுத்துகிறது. அவர்கள் தோல்வியடைந்தால் ஆட்டம் முடிந்தது.
இயக்குநர் கிடாவோ சகுராய் இயக்கியுள்ள ‘ஸ்ட்ரீட் ஃபைட்டர்’, ஆர்கேட் விளையாட்டின் பரபரப்பை ஹடூகன், ரவுண்ட்ஹவுஸ் கிக்குகள் மற்றும் ரசிகர்களின் விருப்பமான கதாபாத்திரங்களுடன் வெள்ளித்திரைக்கு கொண்டு வருகிறது.

நடிகர்கள்: நோவா சென்டினியோ – கென் மாஸ்டர்ஸ், ஆண்ட்ரூ கோஜி – ரியூ, கலினா லியாங் – சுன்-லி, ஜோ ரோமன் ரெய்ன்ஸ், அனோஆய் – அகுமா, டேவிட் டாஸ்ட்மால்சியன் – எம். பைசன்,
கோடி ரோட்ஸ் – கைல்,
ஆண்ட்ரூ ஷுல்ஸ் – டான் ஹிபிகி, எரிக் ஆண்ட்ரே – டான் சோவேஜ், வித்யுத் ஜாமால் – தல்சிம்,
ஆர்வில் பெக் – வேகா,
ஒலிவியர் ரிக்டர்ஸ் – சாங்கீஃப், ஹிரோஒக்கி கோட்டோ – இ. ஹோண்டா,
ரெய்னா வல்லாண்டிங்காம் – ஜூலி,
அலெக்சாண்டர் வோல்கனோவ்ஸ்கி – ஜோ, கர்டிஸ் ’50 சென்ட்’ ஜாக்சன் – பால்ராக் மற்றும்
ஜேசன் மோமோவா – பிளாங்கா

பாரமவுண்ட் ஸ்டுடியோஸ் இந்தியா நிறுவனம் 2026 அக்டோபர் 16 அன்று ‘ஸ்ட்ரீட் ஃபைட்டர்’ திரைப்படத்தை இந்திய திரையரங்குகளில் வெளியிடுகிறது.

Previous Post

நடிகை சிம்ரனின் நெகிழ்ச்சியான மனிதநேய செயல் – மாற்றுத்திறனாளி சிறுமியின் கனவை நனவாக்கிய மறக்க முடியாத தருணம்!

Next Post

நடிகர் கிருஷ்ணாவின் மைல்கல் படமான ‘மர்டர் இன் டவுன்’

Next Post

நடிகர் கிருஷ்ணாவின் மைல்கல் படமான 'மர்டர் இன் டவுன்’

Popular News

  • ஏ.ஆர். ரஹ்மான் இசையில், கார்த்திக் நேத்தா வரிகளில், சின்மயி ஸ்ரீபதா மற்றும் ஹரிச்சரண் குரலில் உருவான ஸ்ரீ ராமரை கொண்டாடும் ‘ஜெய் ஜெய் ராம்’ பாடல் ‘ராமாயணம்’ திரைப்படத்தில் இருந்து வெளியாகியுள்ளது!

    0 shares
    Share 0 Tweet 0
  • தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராகத் தனது இடத்தை நிலைநிறுத்தும் முனைப்பில் நடிகை நிதி அகர்வால்!

    0 shares
    Share 0 Tweet 0
  • ராவடி டிசம்பர் 24 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது!!

    0 shares
    Share 0 Tweet 0
  • லெலின் பாண்டியன் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • தேசிய விருது பெற்ற வைக்கம் விஜயலட்சுமியின் குரலில் ‘மண்டவெட்டி’ திரைப்படத்தின் முதல் பாடலான ‘ராட்சசியே’ வெளியானது!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

டோரதி – விமர்சனம்

September 25, 2026

இதுவரை காணாத ஹாட் லுக்! ஆலியா பட்டின் ‘லவ் & வார்’ (Love & War) முதல் பார்வை போஸ்டர்கள் வைரல்!

September 25, 2026

“வெற்றிமாறன் மாற்றியது சூரியை அல்ல, ரசிகர்களின் பார்வையை!” – பாடலாசிரியர் மதன் கார்க்கி விளக்கம்!

September 25, 2026

‘பத்தா’ படத்தின் டிரெய்லர் வெளியீடு – விஜய் சேதுபதியின் பல முகங்களைக் காட்டும் வித்தியாசமான டிரெய்லர்

September 25, 2026

மீசைய முறுக்கு2 – விமர்சனம்

September 25, 2026

பாரடைஸ் – விமர்சனம்

September 25, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.