• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

‘பியார் பிரேமா கல்யாணம்’ படத்தின் ‘அட் ராசிட்டி’ யான ஃபர்ஸ்ட் சிங்கிள் !

by Tamil2daynews
August 3, 2026
in சினிமா செய்திகள்
0
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

‘பியார் பிரேமா கல்யாணம்’ படத்தின் ‘அட் ராசிட்டி’ யான  ஃபர்ஸ்ட் சிங்கிள்  !

 

இயக்குநர் இளன் இயக்கி, முதன்முறையாக கதாநாயகனாகவும் அறிமுகமாகும் ‘பியார் பிரேமா கல்யாணம்’ திரைப்படத்தின் முதல் சிங்கிள் பாடலான ‘அட்ராசிட்டி’ (Atrocity) வெளியாகியுள்ளது. சமீபத்தில் வெளியான புரோமோ ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது வெளியாகியுள்ள இந்த முழுப் பாடலும் சமூக வலைதளங்களில் கவனம் ஈர்த்து வருகிறது. இப்படம் நெட்ஃப்ளிக்ஸில் ஆகஸ்ட் 21 முதல் ஸ்ட்ரீமாகவுள்ளது

யுவன் சங்கர் ராஜா இசையில் இளன் வெங்கயோ வரிகளில், மதிச்சியம் பாலா, சிந்தூரி விஷால், வெங்கயோ குரல்களில் உருவாகியுள்ள இந்த பாடல், இளமையும் உற்சாகமும் கலந்த காதல் பாடலாக அமைந்துள்ளது. துள்ளலான இசை, கவர்ச்சிகரமான காட்சியமைப்பு மற்றும் நாயகன்-நாயகியின் இயல்பான கெமிஸ்ட்ரி ஆகியவை பாடலின் முக்கிய அம்சங்களாக அமைந்துள்ளன. மாடர்ன் கல்யாணத்தின் அனைத்து  ‘அட்ராசிட்டி’ (Atrocity) விசயங்களையும் நகைச்சுவை ததும்ப காட்சிப்படுத்தியிருக்கும் இப்பாடல் சமூக வலைதளங்களில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

இயக்குநர் இளன், இந்தப் படத்தின் மூலம் முதன்முறையாக கதாநாயகனாக அறிமுகமாகிறார். அவருக்கு ஜோடியாக சான்வீ மேக்னா நடித்துள்ளார். திருமணத்திற்குப் பிறகும் தனது பெற்றோர் வீட்டை விட்டு செல்ல விரும்பாத மனைவியால், கணவரே மனைவியின் வீட்டிற்குச் சென்று வாழும் புதிய கதைக்களத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த படம், காதல், குடும்பம், நகைச்சுவை மற்றும் உறவுகளின் உணர்வுகளை வித்தியாசமான கோணத்தில் சொல்லவுள்ளது.
இப்படத்தில் ராதிகா சரத்குமார், யோகி பாபு, எம்.எஸ். பாஸ்கர், கீதா கைலாசம், இளங்கோ குமரவேல், செந்தில், மாறன், டீப்ஸ் சைரஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ரைஸ் ஈஸ்ட் என்டர்டெயின்மெண்ட் தயாரித்துள்ள இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். காதல், குடும்பம் மற்றும் வாழ்க்கையின் மகிழ்ச்சியை தனது இசையின் மூலம் மேலும் அழகாக வெளிப்படுத்தும் வகையில் பாடல்களும் பின்னணி இசையும் உருவாகியுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

முதல் சிங்கிள் ‘அட் ராசிட்டி’ வெளியானதைத் தொடர்ந்து, படத்தின் அடுத்தடுத்த அப்டேட்கள் குறித்தும் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். திருமணத்திற்குப் பிறகு தொடங்கும் எதிர்பாராத திருப்பங்களையும், கலகலப்பான குடும்ப தருணங்களையும் சுவாரஸ்யமாக சொல்ல வரும் ‘பியார் பிரேமா கல்யாணம்’ திரைப்படம் ஆகஸ்ட் 21 முதல் உலகம் முழுவதும் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் ஸ்ட்ரீமிங் ஆகிறது.

https://www.youtube.com/watch?v=3joIUDlLRgk
Previous Post

ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுனின் ஃபிரண்ட்ஷிப் டே மெசேஜ்: உண்மையான வெற்றி என்பது நண்பர்களையும் உங்களுடன் சேர்த்துக்கொண்டு முன்னேறுவதுதான்!

Next Post

பிரைம் வீடியோ வழங்க, சசிகுமார் நடிக்கும் ‘வதந்தி சீசன் 2: தி மிஸ்டரி ஆஃப் மணி’ இணையத் தொடரின் பத்திரிகையாளர் சந்திப்பு.

Next Post

பிரைம் வீடியோ வழங்க, சசிகுமார் நடிக்கும் 'வதந்தி சீசன் 2: தி மிஸ்டரி ஆஃப் மணி' இணையத் தொடரின் பத்திரிகையாளர் சந்திப்பு.

Popular News

  • பேசத் தயங்கும் விஷயங்களின் மவுனத்தை உடைக்கும் மலேசிய தமிழ் க்ரைம் த்ரில்லர் ‘இரும்புத் தோட்டம் ; விரைவில் தமிழகமெங்கும் ரிலீஸ்’!

    0 shares
    Share 0 Tweet 0
  • உலக மீனவர் தினத்தை முன்னிட்டு ‘தமிழினி’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

    0 shares
    Share 0 Tweet 0
  • காதல் மற்றும் உறவுகளின் உணர்வுப்பூர்வமான கொண்டாட்டமாக வெளியான ‘ஹைக்கூ’ திரைப்படம் நவம்பர் 20 அன்று நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது!

    0 shares
    Share 0 Tweet 0
  • டி பி சி (TPC) ட்ரீம் ஹவுஸ் நிறுவனத்தின் பிரம்மாண்டத் தயாரிப்பில், சிம்புதேவன் இயக்கத்தில், விமல் நடிக்கும் காமெடி-ஆக்‌ஷன் -ஃபேண்டஸி திரைப்படம் ‘நவோரியா’ டிசம்பர் வெளியீடு

    0 shares
    Share 0 Tweet 0
  • “கனவுகள், விடாமுயற்சி, சொந்த ஊரை விட்டு வெளியேறி வாழும் தமிழ் இளைஞர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் என அனைத்தையும் பேசும் கதைதான் ‘பீட்சா பாய்ஸ்’”…இயக்குநர் சேகர் கேசவ் சிரின்!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

“‘டெத் இரயில்வே பக்கா கமர்ஷியல் படம்”…’யாத்திசை’ இயக்குநர் தரணி ராசேந்திரன்!

November 22, 2026

ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன் தன் மகள் அல்லு அர்ஹாவுக்கு சொன்ன நெகிழ்ச்சியான பிறந்தநாள் வாழ்த்து!

November 22, 2026

உலக மீனவர் தினத்தை முன்னிட்டு ‘தமிழினி’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

November 22, 2026

‘டெலிவரி பாய்’ திரைப்பட முன் வெளியீட்டு விழா !!

November 22, 2026

பிரைம் ஷோ என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், Vi. ஆனந்தின் கற்பனையில், நடிகர் பஞ்ச வைஷ்ணவ் தேஜ் நடிக்கும் ‘ஹனுமேன் 2: தி ரைஸ் ஆஃப் வானராஸ்’ (HanuMan 2: The Rise of Vanaras) – டைட்டில் போஸ்டர் வெளியீடு!

November 22, 2026

ஆகாயத்தில் ஒரு தாரகை (AOT) – விமர்சனம்

November 22, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.