• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

ஜேசன் சஞ்சயின் ‘சிக்மா’ திரைப்படம் அக்டோபர் 2ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது!

by Tamil2daynews
August 21, 2026
in சினிமா செய்திகள்
0
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

ஜேசன் சஞ்சயின் ‘சிக்மா’ திரைப்படம் அக்டோபர் 2ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது!

 

லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘சிக்மா’திரைப்படத்தின் மூலம், ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகிறார். படத்தின் முதல் இரண்டு பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் பெரும்  எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

தமிழ் சினிமாவில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படங்களில் ‘சிக்மா’ முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் சுபாஸ்கரன் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் மூலம், ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகிறார். படத்தில் இருந்து வெளியாகியுள்ள ‘சிக்மா ஸ்டைல்’ மற்றும் ‘அய்யய்யோ அம்மாடி’ ஆகிய இரண்டு பாடல்களின் மாறுபட்ட இசை ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று, படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது. இந்நிலையில், ரசிகர்களின் நீண்டகால காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், ‘சிக்மா’ திரைப்படம் அக்டோபர் 2ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

படத்தின் கதை என்ன என்பது வெளிப்படையாக சொல்லாவிடினும், டீசர் மற்றும் முதல் இரண்டு பாடல்கள் மூலம் வெளியாகியுள்ள காட்சிகள், ‘சிக்மா’ படத்தின் வண்ணமயமான மற்றும் பொழுதுபோக்கு நிறைந்த உலகத்தைப் பற்றிய அறிமுகத்தை ரசிகர்களுக்கு வழங்கியுள்ளன. ‘சிக்மா ஸ்டைல்’ பாடலின் எனர்ஜியும், மெலோடியான ‘அய்யய்யோ அம்மாடி’ பாடலும் படத்தின் மீதான ஆர்வத்தை மேலும் அதிகரித்துள்ளன. வித்தியாசமான கதைக்களத்தையும், கண்கவர் காட்சியமைப்பையும் கொண்ட முழுமையான பொழுதுபோக்குத் திரைப்படமாக ‘சிக்மா’ உருவாகியிருப்பதற்கான எதிர்பார்ப்பை இந்த பாடல்கள் ஏற்படுத்தியுள்ளன.
படத்தின் உருவாக்கம் திட்டமிட்டபடி, நிர்ணயிக்கப்பட்ட காலக்கட்டத்திற்குள் நிறைவடைந்துள்ளதாக லைகா புரொடக்ஷன்ஸ் தெரிவித்துள்ளது. மேலும், படத்தின் இயக்குநராக அறிமுகமாகும் ஜேசன் சஞ்சயின் தொழில் அணுகுமுறை, தெளிவு மற்றும் ஒவ்வொரு பணியிலும் அவர் காட்டிய நுணுக்கமான செயல்பாடு ஆகியவற்றையும் தயாரிப்பு நிறுவனம் பாராட்டியுள்ளது.

லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி  ஜி.கே.எம். தமிழ் குமரன் பகிர்ந்து கொண்டதாவது, “‘சிக்மா’ திரைப்படம் அக்டோபர் 2ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என்பதை அறிவிப்பதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். படம் மிகவும் சிறப்பாக உருவாகியுள்ளது. குறிப்பாக, பாடல்களுக்கு கிடைத்துள்ள வரவேற்பு படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. சுவாரஸ்யம் கருதி, படத்தின் மையக்கதையையும், பல முக்கிய அம்சங்களையும் வெளிப்படுத்தாமல் வைத்துள்ளோம். இதுவரை வெளியிட்டுள்ள சில காட்சிகள் மூலம், சஞ்சய் உருவாக்கியுள்ள வண்ணமயமான மற்றும் பொழுதுபோக்கு நிறைந்த உலகத்தின் சிறிய அறிமுகத்தை ரசிகர்களுக்கு வழங்கியுள்ளோம்” என்றார்.

‘சிக்மா’ திரைப்படத்திற்காக புதுமையான விளம்பர மற்றும் சந்தைப்படுத்தல் நடவடிக்கைகளையும் படக்குழு திட்டமிட்டுள்ளது. இதற்கான பணிகள் விரைவில் தொடங்க உள்ளன. படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீடு குறித்த கூடுதல் அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் பிரம்மாண்டமாக தயாரித்துள்ள ‘சிக்மா’ திரைப்படத்தில் சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடித்துள்ளார். அவருடன் ஃபரியா அப்துல்லா, ராஜு சுந்தரம், சம்பத் ராஜ், ஷிவ் பண்டிட், அன்பு தாசன், யோக் ஜேபி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தை ஜேசன் சஞ்சய் எழுதி இயக்கியுள்ளார். தமன் எஸ். இசையமைத்துள்ளார். கிருஷ்ணன் வசந்த் ஒளிப்பதிவை மேற்கொண்டுள்ளார். பிரவீன் கே.எல். படத்தொகுப்புப் பணியை கவனித்துள்ளார். பெஞ்சமின் எம். கலைத்துறையை கையாண்டுள்ளார். ஹரிஹரசுதன் விஎஃப்எக்ஸ் மேற்பார்வையாளராக பணியாற்றியுள்ளார்.

‘சிக்மா’ திரைப்படம் அக்டோபர் 2ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

Previous Post

ஒன்மேன் – விமர்சனம்

Next Post

“பார்வையாளர்கள் ஒவ்வொருவரின் மனதை நெகிழ வைக்கும் குடும்பம், உணர்வு மற்றும் மாற்றத்தின் கதைதான் ‘இருமுடி கட்டு’”: மைத்ரி மூவி மேக்கர்ஸ்!

Next Post

“பார்வையாளர்கள் ஒவ்வொருவரின் மனதை நெகிழ வைக்கும் குடும்பம், உணர்வு மற்றும் மாற்றத்தின் கதைதான் ‘இருமுடி கட்டு’”: மைத்ரி மூவி மேக்கர்ஸ்!

Popular News

  • சாய்ரா இயக்கி நடிக்கும் புதிய திரைப்படம் ‘ஹலோ மிஸ்’

    0 shares
    Share 0 Tweet 0
  • பூந்தமல்லியில் ஜஸ்’ ஆன்கோவின் (Jus’ Onco) 4-வது புற்றுநோய் சிகிச்சை மையம் திறப்பு தரமான புற்றுநோய் சிகிச்சையை குறைந்த செலவில் மக்களுக்கு அருகில் கொண்டு சேர்க்கும் புதிய முயற்சி

    0 shares
    Share 0 Tweet 0
  • ஜேசன் சஞ்சயின் ‘சிக்மா’ திரைப்படம் அக்டோபர் 2ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது!

    0 shares
    Share 0 Tweet 0
  • “பார்வையாளர்கள் ஒவ்வொருவரின் மனதை நெகிழ வைக்கும் குடும்பம், உணர்வு மற்றும் மாற்றத்தின் கதைதான் ‘இருமுடி கட்டு’”: மைத்ரி மூவி மேக்கர்ஸ்!

    0 shares
    Share 0 Tweet 0
  • ”நல்ல கதைகளை தமிழ் சினிமா ரசிகர்கள் எப்போதும் வரவேற்பார்கள். ’மொத ராத்திரி’ திரைப்படமும் நிச்சயம் அவர்களை மகிழ்விக்கும்”: தயாரிப்பாளர்கள் நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவி சங்கர்!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

”நல்ல கதைகளை தமிழ் சினிமா ரசிகர்கள் எப்போதும் வரவேற்பார்கள். ’மொத ராத்திரி’ திரைப்படமும் நிச்சயம் அவர்களை மகிழ்விக்கும்”: தயாரிப்பாளர்கள் நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவி சங்கர்!

August 21, 2026

அமேசான் எம்ஜிஎம் ஸ்டுடியோஸ் மற்றும் கலர் யெல்லோ இணைந்து வழங்கும் இந்தியாவின் ஃபேன்டஸி குடும்பத் திரைப்படமான, யாமி கெளதம் கர் நடிப்பில் உருவாகியுள்ள ‘நய்யி நவெல்லி’!

August 21, 2026

செம்போஸ்கி மோஷன் பிக்சர்ஸ், ஃபார்ஸ் ஃபிலிம்ஸ் வழங்கும் ‘டிஸ்கோ’ – நவம்பர் 6-ல் உலகமெங்கும் ரிலீஸ்!

August 21, 2026

விக்கல்ஸ் விக்ரம் மற்றும் ஆரத்தி கிருஷ்ணாவின் ‘லைட்வெயிட்,பேபி!’ படத்தின் கலகலப்பான ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

August 21, 2026

சாய்ரா இயக்கி நடிக்கும் புதிய திரைப்படம் ‘ஹலோ மிஸ்’

August 21, 2026

“பார்வையாளர்கள் ஒவ்வொருவரின் மனதை நெகிழ வைக்கும் குடும்பம், உணர்வு மற்றும் மாற்றத்தின் கதைதான் ‘இருமுடி கட்டு’”: மைத்ரி மூவி மேக்கர்ஸ்!

August 21, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.