• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

‘நேச்சுரல் ஸ்டார்’ நானி நடிக்கும் ‘தி பாரடைஸ்- The Paradise ‘படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு

by Tamil2daynews
September 19, 2026
in சினிமா செய்திகள்
0
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

‘நேச்சுரல் ஸ்டார்’ நானி நடிக்கும் ‘தி பாரடைஸ்- The Paradise ‘படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு

 

‘நேச்சுரல் ஸ்டார்’ நானி நடிப்பில் தயாராகி எதிர்வரும் 24 ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் ‘தி பாரடைஸ்’ திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.

இயக்குநர் ஸ்ரீகாந்த் ஓடேலா இயக்கத்தின் உருவாகியுள்ள ‘தி பாரடைஸ்’ திரைப்படத்தில் நானி, கயாடு லோஹர், ராகவ் ஜூயால், சோனாலி குல்கர்னி, மோகன் பாபு, ஈஸ்வரி ராவ், சம்பூர்ணேஷ் பாபு, தணிகல பரணி, ராஜா ரவீந்திரா, ராம் ஜெகன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் நடிகை கீர்த்தி சுரேஷ் சிறப்பு தோற்றத்தில் தோன்றி, ஒரே ஒரு பாடலுக்கு நடனமாடி இருக்கிறார். சி. ஹெச். சாய் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். மாஸ் ஆக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஸ்ரீ லட்சுமி வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சுதாகர் செருகுரி  தயாரித்திருக்கிறார். ஐவிஒய் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் இஷான் சக்சேனா படத்தின் இணை தயாரிப்பாளராக பணியாற்றியுள்ளார். இந்த திரைப்படத்தை தமிழகம் முழுவதும் திங்க் ஸ்டுடியோஸ் நிறுவனம் வழங்குகிறது.

எதிர்வரும் 24 ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய இந்திய மொழிகளில் பான் இந்திய திரைப்படமாக வெளியாகும் இந்த திரைப்படத்தினை விளம்பரப்படுத்தும் வகையில் சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் பிரத்யேக நிகழ்வு நடைபெற்றது. இதில் படத்தின் இயக்குநர் ஸ்ரீகாந்த் ஓடேலா-  படத்தின் நாயகன் நடிகர் ‘நேச்சுரல் ஸ்டார்’ நானி – திங்க் ஸ்டுடியோஸ் ஸ்வரூப் ரெட்டி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் ‘திங்க் ஸ்டுடியோஸ்’ ஸ்வரூப் ரெட்டி பேசுகையில்,

 ” நவராத்திரி திருவிழாவின் போது நானி நடித்திருக்கும் ‘தி பாரடைஸ்’ திரைப்படம் வெளியாகிறது. நானி நடித்திருப்பதால் இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது. நாங்கள் நானி படத்திற்கு தொடர்ந்து ஆதரவளித்து வருகிறோம். இந்தப் படத்திற்கும் ரசிகர்களின் பேராதரவு கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம்” என்றார்.

இயக்குநர் ஸ்ரீகாந்த் வோடேலா பேசுகையில்,

 ” எனக்கு தமிழ் தெரியாது. அடுத்த படத்தில் தமிழை கற்றுக்கொண்டு பேசுகிறேன். இந்த திரைப்படம் தாயை பற்றியும்… புரட்சியைப் பற்றியும்… பேசும் திரைப்படம். இந்த வகையிலான திரைப்படம் ரசிகர்களுடன் அதிகமாக எளிதில் தொடர்பு கொள்ளும் என நம்புகிறோம்” என்றார்.

நடிகர் நானி பேசுகையில்,

 ” தி பாரடைஸ் திரைப்படம் 24ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. நான் நல்ல நடிகரா? இல்லையா? என்று எனக்குத் தெரியாது. ஆனால் எனக்கு ஒரு விசயம் மட்டும் தெரியும். நான் உங்களைப் போன்ற ஒரு நல்லதொரு பார்வையாளன்.

ஒரு பார்வையாளராக மாஸான திரைப்படத்தை பார்க்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. ஆனால் அது போன்றதொரு திரைப்படங்கள்  வெளியாவது குறைவு. அப்படி ஒரு பிரம்மாண்டமான மாஸான திரைப்படத்தை திரையரங்குகளில் பார்த்து ரசிக்க வேண்டும் என ஆவலுடன் காத்திருக்கிறேன். அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் திரைப்படம் தான் ‘தி பாரடைஸ்’.

ஒவ்வொரு ரசிகர்களுக்கும், பார்வையாளர்களுக்கும் இது போன்றதொரு மாஸான திரைப்படம் அவசியம் தேவை.‌ இந்தப் படம் அப்படிப்பட்டதொரு திரைப்படம். இதை நான் நம்பிக்கையுடன் சொல்கிறேன். இதனை நீங்கள் 24 ஆம் தேதி திரையரங்குகளுக்கு வந்து, இந்த படத்தை பார்த்த பிறகு சொல்வீர்கள்.‌

இந்த படத்தில் அழுத்தமான எமோஷன்களை பற்றி பேசி இருக்கிறோம். அதே தருணத்தில் திரையரங்குகளில் பார்த்து ரசிக்கும் அற்புதமான அனுபவங்களையும் வழங்கி இருக்கிறோம்.

தமிழ் திரைப்படங்கள் எனக்கு ஒரு பைபிள் மாதிரி. என்னுடைய சினிமா அறிவிற்கும்… என்னுடைய சினிமா மீதான ஆர்வத்திற்கும்.. என்னுடைய சினிமா மீதான காதலுக்கும்… சினிமா மீது பிரியம் வந்ததற்கும்… தமிழ் சினிமாவில் உள்ள கலைஞர்கள் தான் இன்ஸ்பிரேசன். அதிலும் கமல்ஹாசன்- மணிரத்னம்- பாக்கியராஜ்- பாரதிராஜா-  என பல சாதனையாளர்களை குறிப்பிடலாம்.

நான் ஒவ்வொரு முறையும் சென்னைக்கு வருகை தரும் போதெல்லாம் என்னுடைய திரை குடும்பத்திற்கு வந்தது போன்று உணர்வு எழும். எனக்கும், கடந்த காலத்தில் சென்னைக்கும், தமிழ்நாட்டிற்கும் நிறைய தொடர்பு உண்டு. என் மீது தமிழ் ரசிகர்கள் மட்டும் அன்பும் அதிகம். அதனை நான் பல தருணங்களில் உணர்ந்திருக்கிறேன்.

நான் என்னுடைய படத்திற்கு தமிழில் பின்னணி குரலில் பேசுவதற்கு தமிழ் ரசிகர்கள் மீதான பேரன்பு தான் காரணம்.

என்னுடைய திரையுலக பயணத்தில் மிகவும் கடினமாக உழைத்த திரைப்படம் ‘தி பாரடைஸ்’. என்னுடைய திரையுலக பயணத்தில் நான் பெரிதும் நம்பிக்கையுடன் எதிர்பார்க்கும் திரைப்படமும் இதுதான்.‌

நான் நம்பிக்கையுடன் சொல்கிறேன் 24ஆம் தேதி திரையரங்குகளில் உங்களுக்காக தரமான சம்பவம் காத்திருக்கிறது.

அடுத்த முறை நான் என்னுடைய படத்தினை விளம்பரப்படுத்துவதற்காக சென்னைக்கு வரும்போது, ரசிகர்கள் அனைவரும் என்னை ‘தி பாரடைஸ்’ படத்தில் நடித்திருக்கும் ‘ஜடல்’ என்ற கேரக்டர் பெயரை சொல்லித்தான் அழைப்பீர்கள்” என்றார்.

இதனைத் தொடர்ந்து பத்திரிக்கையாளர்களின் கேள்விகளுக்கு இயக்குநர் ஸ்ரீகாந்த் ஓடேலா- நடிகர்  நானி ஆகியோர் பதிலளித்தனர். அத்துடன் சென்னையில் உள்ள நானியின் ரசிகர்களுக்காக ‘தி பாரடைஸ்’ படத்திற்கான பிரத்யேக காட்சிக்குரிய முதல் டிக்கெட்டையும் நானி அறிமுகப்படுத்தினார்.
Previous Post

சண்டைக்காரி – விமர்சனம்

Next Post

‘கஸ்தூரி வீடு’ திரைப்படத்தின் பாடல் மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!

Next Post

'கஸ்தூரி வீடு' திரைப்படத்தின் பாடல் மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!

Popular News

  • குரு சோமசுந்தரம் – அனுமோல் நடிக்கும் ‘பாரிஸ் கஃபே’ செப்டம்பர் 18ஆம் தேதி வெளியாகிறது!

    0 shares
    Share 0 Tweet 0
  • காதல் கதைக்குள் இப்படி ஒரு ஆக்ஷனா? ‘அன்பில் அவன்’ டிரெய்லர் வெளியானது!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘கஸ்தூரி வீடு’ திரைப்படத்தின் பாடல் மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘நேச்சுரல் ஸ்டார்’ நானி நடிக்கும் ‘தி பாரடைஸ்- The Paradise ‘படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு

    0 shares
    Share 0 Tweet 0
  • Hi – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

காதல் கதைக்குள் இப்படி ஒரு ஆக்ஷனா? ‘அன்பில் அவன்’ டிரெய்லர் வெளியானது!

September 19, 2026

‘கஸ்தூரி வீடு’ திரைப்படத்தின் பாடல் மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!

September 19, 2026

‘நேச்சுரல் ஸ்டார்’ நானி நடிக்கும் ‘தி பாரடைஸ்- The Paradise ‘படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு

September 19, 2026

சண்டைக்காரி – விமர்சனம்

September 19, 2026

சில்வர் ஸ்ட்ரீம் ஸ்டுடியோஸ் பேனரின் கீழ் சௌந்தர்யா திலீபன், என். ராஜேந்திரன், ராமு தங்கராஜ் தயாரிப்பில், பிளாக் ஒயிபோ புரொடக்‌ஷன் ஹவுஸ் சார்பில் அருண் மாதேஸ்வரன் வழங்கும் ‘டிரான்ஸ்பர்’!

September 19, 2026

பாரிஸ் கபே – விமர்சனம்

September 19, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.