நடிகர் விமலுக்கு ஜோடியாக ஸ்ரேயா சரண் நடித்திருக்கும் படம் சண்டைக்காரி.
லண்டனில் ஒரு பெரிய கம்பெனியில் சிஎம்ஓவாக வேலை பார்க்கும் சரியான ராங்கியான ஸ்ரேயாவிடம் பெரிய லட்சியங்களை வைத்து இருந்தாலும், அசிஸ்டண்ட் வேலைக்கு வந்து சேர்கிறார் நம்ம ஹீரோ விமல். 50 பேருக்கு மேல் அந்த வேலையில் தாக்குப் பிடிக்க முடியாமல் தெறித்து ஓடிய நிலையில், விமல் அந்த வேலையில் தாக்கு பிடித்தாரா? அதை தாண்டி ஸ்ரேயாவின் மனதில் இடம் பிடித்தாரா? ஸ்ரேயா போடும் சுயநல டிராமா மற்றும் சொந்த ஊருக்கு அவரை அழைத்து வந்து விமல் ஆடும் டபுள் கேம் கடைசியில் எங்கே போய் முடிகிறது என்பது தான் இந்த சண்டக்காரி படத்தின் கதை.

படத்தின் ஒரே ஆறுதலும் ஸ்ரேயாவின் நடிப்பு தான் என்றே சொல்லலாம். லண்டன் பப்பில் வரும் ஒரு பாடல் மற்றும் கிராமத்தில் விமலுடன் குடித்து விட்டு லுங்கி டான்ஸ் போடும் ஒரு பாடல் என ரசிக்க வைக்கிறது. விமலின் அப்பாவாக பிரபு, பாட்டியாக கே.ஆர். விஜயா, அம்மாவாக உமா பத்மநாபன் வில்லனாக மகதீரா வில்லன் தேவ் கில் உள்ளிட்ட நடிகர்களின் நடிப்பு படத்திற்கு கை கொடுத்துள்ளது.
களவாணி, தேசிங்கு ராஜா, கேடி பில்லா கில்லாடி ரங்கா படங்களில் பார்த்து ரசித்த விமலை மீண்டும் திரையில் பார்ப்பது சற்றே மகிழ்ச்சியை தருகிறது. நடிகை ஸ்ரேயா ஸ்டைலாகவும் கவர்ச்சியாகவும் தனக்கே உரிய பாணியில் மாயா கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்கிறார்.
ஆனால், அந்த தக்காளி பாடலின் வரிகள் எல்லாம் ரொம்பவே மோசம். டபுள் மீனிங் வசனங்கள், மோசமான பழைய ஸ்டைல் காமெடிகள், வீக்கான வில்லன், லண்டனுக்குப் போய் பிரம்மாண்டமாக எடுக்கிறோம் என முதல் பாதியில் செல்லப்பட்ட புரொடக்ஷன் செலவுகள் உள்ளிட்டவை படத்திற்கு எந்த வகையிலும் கை கொடுக்கவே இல்லை. நீங்க ஸ்ரேயா மற்றும் விமல் ரசிகராக இருந்தால் ஒரு முறை ட்ரை பண்ணலாம்.படம் பார்க்கும் பொழுதே சில பல வருடங்கள் பழமையான படம் என்கிற எண்ணம் மனதுக்குள் வந்துவிடுகிறது.
படம் முழுவதும் கலகலப்பு இருந்தாலும் மனதிற்குள் ஏதோ ஒரு குறை தெரிகிறது.









