• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

வரலாற்றில் முதல் முறையாக இசைஞானி இளையராஜாவின் இசையில் உருவான இலங்கைத் தமிழ்த் திரைப்படம்

by Tamil2daynews
September 20, 2026
in சினிமா செய்திகள்
0
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

வரலாற்றில் முதல் முறையாக இசைஞானி இளையராஜாவின் இசையில் உருவான இலங்கைத் தமிழ்த் திரைப்படம்

 

‘அந்தோனி’ – 2027 ஆஸ்கார் விருதை நோக்கிய பயணம் தொடக்கம்

இலங்கைத் தமிழ் சினிமாவில் புதிய வரலாற்றைப் படைத்துள்ள ‘அந்தோனி’ திரைப்படம், 2027ஆம் ஆண்டுக்கான ஆஸ்கார் விருது விழாவின் சிறந்த சர்வதேச திரைப்படப் பிரிவிற்கான தேர்வுப் பயணத்தைத் தொடங்கியுள்ளது.

உலகப் புகழ்பெற்ற இசைமேதையும், ‘The Maestro’ என அழைக்கப்படுபவருமான இசைஞானி இளையராஜா அவர்களின் இசையில் உருவான வரலாற்றுச் சிறப்புமிக்க இலங்கைத் தமிழ்த் திரைப்படம் என்ற பெருமையை ‘அந்தோனி’ பெற்றுள்ளது.

ஓசை பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் கலைவளரி சக இரமணதாஸ் மற்றும் சுகந்தினி இரமணதாஸ் ஆகியோரின் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தில் கயல் வின்சன்ட், TJ. பானு, சுதர்சன் ரவீந்திரன், செளமி முனசிங்க, நிழல்கள் ரவி, அருள்தாஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

சுகிர்தன் கிறிஸ்துராஜா மற்றும் ஜெனோசன் ராஜேஸ்வர் ஆகியோர் இயக்கியுள்ள ‘அந்தோனி’ திரைப்படம் மூன்று மொழிகளில் உருவாக்கப்பட்டுள்ளது. அண்மையில் உலகெங்கும் திரையரங்குகளில் வெளியான இப்படம், ரசிகர்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பைப் பெற்றுள்ளது.

திரையரங்கு வெளியீட்டைத் தொடர்ந்து, இந்தியாவில் Amazon Prime Video, OTT Plus, Shortflix, Tentkotta, Roopahala உள்ளிட்ட முன்னணி OTT தளங்களிலும் இப்படம் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், ‘அந்தோனி’ திரைப்படம் இலங்கை திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் ஊடாக 2027ஆம் ஆண்டுக்கான ஆஸ்கார் விருதின் சிறந்த சர்வதேச திரைப்படப் பிரிவிற்கான தேர்வுக் குழுவிற்கு அனுப்பப்பட்டுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இசைஞானி இளையராஜாவின் இசையில் உருவான முதல் இலங்கைத் தமிழ் திரைப்படம் என்ற வரலாற்றுப் பெருமையுடன், சர்வதேச அரங்கில் கவனம் பெற்றுள்ள ‘அந்தோனி’, ஆஸ்கார் தேர்வுப் பயணத்தில் மேலும் பல அங்கீகாரங்களைப் பெறும் என்ற எதிர்பார்ப்பு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் உருவாகியுள்ளது.

‘அந்தோனி’ – இலங்கைத் தமிழ் சினிமாவின் புதிய சர்வதேசப் பயணம்!
Previous Post

பீப் – விமர்சனம்

Next Post

பிரம்மாண்டமாக நடைபெற்ற ‘பத்தா’ இசை வெளியீட்டு விழா!

Next Post

பிரம்மாண்டமாக நடைபெற்ற ‘பத்தா’ இசை வெளியீட்டு விழா!

Popular News

  • ‘கஸ்தூரி வீடு’ திரைப்படத்தின் பாடல் மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!

    0 shares
    Share 0 Tweet 0
  • பாரிஸ் கபே – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • அர்ஜுன் தாஸ் நடிக்கும் புரொடக்ஷன் No.1 (Production No.1) – பூஜையுடன் படப்பிடிப்பு தொடக்கம்!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘நேச்சுரல் ஸ்டார்’ நானி நடிக்கும் ‘தி பாரடைஸ்- The Paradise ‘படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு

    0 shares
    Share 0 Tweet 0
  • சில்வர் ஸ்ட்ரீம் ஸ்டுடியோஸ் பேனரின் கீழ் சௌந்தர்யா திலீபன், என். ராஜேந்திரன், ராமு தங்கராஜ் தயாரிப்பில், பிளாக் ஒயிபோ புரொடக்‌ஷன் ஹவுஸ் சார்பில் அருண் மாதேஸ்வரன் வழங்கும் ‘டிரான்ஸ்பர்’!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

#Love’ – அக்டோபர் 2 முதல் நெட்ஃப்ளிக்ஸில் மட்டும்

September 20, 2026

பிரம்மாண்டமாக நடைபெற்ற ‘பத்தா’ இசை வெளியீட்டு விழா!

September 20, 2026

வரலாற்றில் முதல் முறையாக இசைஞானி இளையராஜாவின் இசையில் உருவான இலங்கைத் தமிழ்த் திரைப்படம்

September 20, 2026

பீப் – விமர்சனம்

September 20, 2026

‘வேட்டுவம்’ பா.இரஞ்சித்தின் பிரம்மாண்ட அபோகலிப்டிக் ஆக்ஷன் திரைப்படம்.

September 20, 2026

‘மீசைய முறுக்கு 2’ இசைக் கலைஞர்களின் வாழ்க்கை, போராட்டம், கனவுகளைப் பேசும் உலகளாவிய கதை – ஹிப்ஹாப் தமிழா ஆதி

September 20, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.