• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா விமர்சனம்

பீப் – விமர்சனம்

by Tamil2daynews
September 20, 2026
in விமர்சனம்
0
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

பீப் – விமர்சனம் 

 

எல். சண்முகசுந்தர் இயக்கத்தில் ராகவ் ரங்கநாதன் நடிப்பில் வெளியாகியுள்ள க்ரைம் த்ரில்லர் திரைப்படமான பீப
ஃபோட்டோசென்சரி (photosensory) சக்தி கொண்ட ஒரு சாதாரண இளைஞன் மற்றும் அவனது நண்பர்கள் குழுவினரை சுற்றியே கதை நகர்கிறது.எதிர்பாராத விதமாக நடக்கும் ஒரு கொலையை இந்த நண்பர்கள் குழு எவ்வாறு கண்டுபிடிக்க முயல்கிறது என்பதுடன் ஒரு காவல்துறை விசாரணை இணைந்து சஸ்பென்ஸ் தருகிறது.
கால் கேர்ள் ஒருவருடன்  ராகவ்க்கு பழக்கம் ஏற்படுகிறது. திடீரென்று அந்தப் பெண் மாடியில் இருந்து விழுந்து இறந்து கிடக்கிறார். அது தற்கொலையா அல்லது யாராவது மாடியில் இருந்து தள்ளிவிட்டு கொலை செய்தார்களா? அப்படி செய்தால் அதை யார் செய்தது என்ற பல்வேறு கேள்விகள் எழுகிறது. தனக்கு தோழியாக இருந்த பெண் கொல்லப்பட்டதால் அதிர்ச்சி அடைந்த ராகவ் இது குறித்த போலீசில் புகார் கொடுத்து நீதி கேட்கிறார். அத்துடன் அவரும் களத்தில் இறங்கி யார் குற்றவாளி என்பதை துப்பறிய முயல்கிறார்   இதில் கால்கேர்ள் சாவிற்கு என்ன காரணம் என்பதற்கு எதிர்பாராத திருப்பங்களுடன் கிளைமாக்ஸ் பதில் அளிக்கிறது.
பீப் வழக்கமான  திரைப்படமாக இல்லாமல்  சஸ்பென்ஸ் திரில்லர் கதையை புத்தக வடிவில் படித்தது போன்ற பாணியில்  திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது   அதனால் படத்தில் காட்சிகள் முழுக்க முழுக்க உரையாடலாகவே கடந்து செல்கிறது
பீப்' (Beep) விமர்சனம் – Behind Frames
ராகவ் மற்றும் நண்பர்கள்  பெண்களை சைட் அடிப்பது பின்னர் தங்களுக்குள் அவர்களைப் பற்றி பேசிக் கொள்வது போன்ற காட்சிகள் யாரோ சில நண்பர்கள் ஒன்று சேர்ந்து பேசிக் கொள்வது போலவும் அதை அருகில் இருந்து கவனிப்பது போன்ற உணர்வு  படம் பார்க்கும்போது ஏற்படுகிறது.
கால் கேர்ளாக  யாமினி செதுக்கிய சிலைபோல் வருகிறார். ராகவுக்கும் யாமினிக்கும் ஏற்படும் நட்பு காமத்தை மீறிய தோழமை உணர்வு என்ற கோணத்தில் தான் நகர்கிறது. திடீரென்று யாமினி மாடியில் இருந்து விழுந்து இறந்து கிடப்பது  ஷாக்.
யாமினி எப்படி இறந்தார் என்பதை கண்டுபிடிக்க போலீஸுடன் சேர்ந்து ராகவும் அவரது நண்பர்களும் துப்பறியும் வேலையில் ஈடுபடுவதும், ராகவுக்கு புகைப்படத்தை பார்த்தவுடன் அதன் பின்னணியில் என்ன நடந்தது என்பதை கண்டுபிடிக்கும் ஒரு சிறப்பு ஆற்றல் இருப்பதால் அதைக் கொண்டு கொலையாளி யார் என்று கண்டுபிடிக்க போகிறாரா என்ற எதிர்பார்ப்புடன் காட்சிகள் நகர்ந்தாலும் அதை ஈடு செய்யும் வகையில் காட்சிகளில் அழுத்தமில்லை.
போட்டோவை பார்த்து என்ன நடந்தது என்பதை சொல்லும் திறமை கொண்ட ராகவ் பலமுறை யாமினி இறந்து கிடக்கும் புகைப்படத்தை பார்த்தும் அதன் பின்னணியில் என்ன நடந்தது என்பதை கண்டுபிடிக்க முற்படாதது ஏன் என்ற கேள்வி எழுகிறது.
BeeP Tamil Movie Review I பீப் தமிழ் திரைப்பட விமர்சனம் I Thamizhpadam - Thamizhpadam
பிரேமா கண்ணா, ஐடிஐ ஆச்சார்யா, அருண் மோகன்,  ஷ்ரவன் ராமகிருஷ்ணன், ஜூஹி சர்மா, பிரியதர்ஷினி, நிதிஷ், பாலாஜி, ராஜவேல், அப்துல், ஜி சிவகுமார், வெங்கட் ரமேஷ், ஆர் கணேசன்,  என பலர் நடித்திருக்கிறார்கள். குறிப்பாக ப்ரொபசர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் எல் சண்முகா தனித்து தெரிகிறார்.
பிரசாந்த் விஹாரி இசை அமைத்திருக்கிறார். பிரதீப் பத்மகுமார் கேமரா காட்சிகளை எதார்த்தமாக பதிவு செய்திருக்கிறது
இயக்குனர் இல சண்முக சுந்தர் மாறுபட்ட ஒரு பாணியில் படத்தை இயக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ஒரு நாவலை போல் காட்சிகள் அமைத்திருப்பது சினிமாவுக்கு பொருத்தமாக இல்லாவிட்டாலும் கொலைகாரன் யார் என்ற  உண்மையை  தெரிந்து கொள்வதற்காக கிளைமாக்ஸ் வரை ஆடியன்சை இருக்கையில் அமர வைத்திருக்கிறார் இயக்குனர்.
இந்த படம் குறித்து யோசிக்கையில் இன்ஸ்பெக்டர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நித்திஷ் இறந்து ஆறு ஆண்டுகள் ஆகிறது .
அதை நினைக்கும் போது ரொம்ப பழைய படமோ என்ற எண்ணம் தோன்றுகிறது.
கிரைம், இன்வெஸ்டிகேஷன் பர பர காட்சிகள் இருந்தும் விறுவிறுப்புக்கு சற்று பஞ்சம் தான்
செப்டம்பர் 18ல் வந்த படங்களில் இது ஓகே ரகம்.
Previous Post

‘வேட்டுவம்’ பா.இரஞ்சித்தின் பிரம்மாண்ட அபோகலிப்டிக் ஆக்ஷன் திரைப்படம்.

Next Post

வரலாற்றில் முதல் முறையாக இசைஞானி இளையராஜாவின் இசையில் உருவான இலங்கைத் தமிழ்த் திரைப்படம்

Next Post

வரலாற்றில் முதல் முறையாக இசைஞானி இளையராஜாவின் இசையில் உருவான இலங்கைத் தமிழ்த் திரைப்படம்

Popular News

  • ‘கஸ்தூரி வீடு’ திரைப்படத்தின் பாடல் மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!

    0 shares
    Share 0 Tweet 0
  • பாரிஸ் கபே – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • அர்ஜுன் தாஸ் நடிக்கும் புரொடக்ஷன் No.1 (Production No.1) – பூஜையுடன் படப்பிடிப்பு தொடக்கம்!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘நேச்சுரல் ஸ்டார்’ நானி நடிக்கும் ‘தி பாரடைஸ்- The Paradise ‘படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு

    0 shares
    Share 0 Tweet 0
  • சில்வர் ஸ்ட்ரீம் ஸ்டுடியோஸ் பேனரின் கீழ் சௌந்தர்யா திலீபன், என். ராஜேந்திரன், ராமு தங்கராஜ் தயாரிப்பில், பிளாக் ஒயிபோ புரொடக்‌ஷன் ஹவுஸ் சார்பில் அருண் மாதேஸ்வரன் வழங்கும் ‘டிரான்ஸ்பர்’!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

#Love’ – அக்டோபர் 2 முதல் நெட்ஃப்ளிக்ஸில் மட்டும்

September 20, 2026

பிரம்மாண்டமாக நடைபெற்ற ‘பத்தா’ இசை வெளியீட்டு விழா!

September 20, 2026

வரலாற்றில் முதல் முறையாக இசைஞானி இளையராஜாவின் இசையில் உருவான இலங்கைத் தமிழ்த் திரைப்படம்

September 20, 2026

பீப் – விமர்சனம்

September 20, 2026

‘வேட்டுவம்’ பா.இரஞ்சித்தின் பிரம்மாண்ட அபோகலிப்டிக் ஆக்ஷன் திரைப்படம்.

September 20, 2026

‘மீசைய முறுக்கு 2’ இசைக் கலைஞர்களின் வாழ்க்கை, போராட்டம், கனவுகளைப் பேசும் உலகளாவிய கதை – ஹிப்ஹாப் தமிழா ஆதி

September 20, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.