• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா விமர்சனம்

டோரதி – விமர்சனம்

by Tamil2daynews
September 25, 2026
in விமர்சனம்
0
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

டோரதி – விமர்சனம் 

 

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சனத், கீர்த்தி சுரேஷ், ரிஷிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் டோரதி.இசை – இளையராஜா  பள்ளி பருவத்தில் இருந்து நண்பர்களாக இருக்கும் கார்த்தி (ரிஷிகாந்த்) – சுப்பு (சனந்த்) வளர்ந்து ஊருக்குள் ரௌடிகளாக திரிகிறார்கள். என்னதான் கார்த்தி, சுப்புவின் நண்பனாக இருந்தாலும், சுப்புவின் அப்பா கார்த்தியை வேறொரு சாதி ஆளாகத்தான் பார்க்கிறார். மேலும், சுப்புவின் அம்மா மற்றும் தங்கை இருவரையும் அவர்தான் ஆணவக்கொலை செய்துள்ளார்.

இந்த சூழலில் சுப்புவின் அண்ணன், கீர்த்தி சுரேஷை (டோரதி) திருமணம் செய்து வீட்டிற்கு அழைத்து வருகிறார். அவருடன் சுப்பு பழக ஆரம்பிக்க, ஒரு நாள் அவர் தூக்குபோட்டு இறந்துபோகிறார். இது தற்கொலை இல்லை, என்னுடைய அப்பனும் அண்ணனும் தான் கொலை செய்துள்ளார்கள் என கோபமடைகிறார் சுப்பு.

தாய், தங்கை, அண்ணி என அனைவரையும் வீட்டில் உள்ள ஆண்கள் கொலை செய்ததை நினைத்து வாடும் சுப்பு, ஒரு கட்டத்தில் தான் ஆண் இல்லை திருநங்கையாக மாறிவிட்டேன் என என்பதை வெளிப்படுத்துகிறார். இதனால் குடும்ப மானம் போய்விடும் என, கார்த்தியிடம் சுப்புவை கொலை செய்ய சொல்கிறார்கள்.

கார்த்தி சுப்புவை திருநங்கையாக ஏற்றுக்கொண்டாரா? இல்லை கொலை செய்தாரா? இதன்பின் என்னென்ன சம்பவங்கள் நடந்தன என்பதே படத்தின் மீதி கதை.

இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் எடுத்துக்கொண்ட மிகவும் சென்சிட்டிவான கதைக்களத்தை நேர்த்தியான திரைக்கதையில் வழங்கியுள்ளார். மனிதர்கள் எவ்வளவு கொடூரமான மிருகமாக நடந்துகொள்கிறார்கள் என்பதை காட்டிய விதம், ஆணாக இருந்து திருநங்கையாக சனந்த் மாறும் காட்சி, கீர்த்தி சுரேஷின் மரணம், ரிஷிகாந்தின் தவிப்பு என பல விஷயங்கள் தாக்கத்தை ஏற்படுகிறது.

கதாபாத்திரங்களின் வடிவமைப்பு படத்திற்கு மிகப்பெரிய பலமாக உள்ளது. சொல்ல வந்த விஷயத்தை தெளிவாக கார்த்திக் சுப்பராஜ் கூறியிருந்தாலும், இது ஜனரஞ்சகமாக அனைவரும் ஏற்றுக்கொள்ளுவார்களா என்பது கேள்விக்குறியாக உள்ளது.

திருநங்கையாக மாறிய தனது நண்பனை ஏற்க மறுத்து, அவனை அருவருப்பாக பார்க்கும் காட்சிகளில் இருந்து நண்பனை எப்படி கொலை செய்வது என தவிக்கும் காட்சிகள் வரை சிறப்பாக நடித்துள்ளார் நடிகர் ரிஷிகாந்த்.

திருநங்கையாக மாறியபின் தனது நடிப்பால் கவனத்தை ஈர்க்கிறார் சனந்த். குறிப்பாக தனது நண்பனோடு அவர் செல்லும் பயணம், அதில் இருவருக்கும் இடையே ஏற்படும் மன மாற்றங்கள் அனைத்தும் சிறப்பான காட்சிகள்.

பாடல்களாலும் பின்னணி இசையாலும் படத்தை மிகப்பெரிய அளவில் தூக்கி பிடித்துள்ளார் இசைஞானி இளையராஜா. இவருடைய நாஸ்டால்ஜிக் பாடல்கள் மற்றும் பின்னணி இசையும் இப்படத்தில் இடம்பெற்று இருப்பது படத்தின் மிகப்பெரிய பலம். படத்திலுள்ள பல சென்சிட்டிவான காட்சிகளுக்கு பின்னணி இசையால் உயிர் கொடுத்துள்ளார். அன்றும் இன்றும் என்றும் ராஜா ராஜாதான்.

ஒளிப்பதிவு வேற லெவல். படத்தை இன்டர்நேஷனல் லெவலில் காட்டியுள்ளார் ஒளிப்பதிவாளர் திரு. மற்ற அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களின் ஒர்க்ஸ் படத்திற்கு பலம் சேர்க்கிறது.
படம் முழுக்க இளையராஜாவின் இசை ராஜ்ஜியம் படித்திருக்கிறார்.

கேமராவும் கிடைத்த கேப்புகளில் எல்லாம் புகுந்து விளையாடி இருக்கின்றது.

கார்த்திக் சுப்புராஜ் மிகப்பெரிய ஒரு ரிஸ்க்கான கதையை எடுத்திருக்கிறார் இது எந்த அளவுக்கு ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்று தெரியவில்லை.

இளையராஜாவும் டோரதி யும் என்றே சொல்லலாம் அந்த அளவுக்கு கதையும் இசையும் பின்னி பிணைந்து இருக்கின்றன.

மொத்தத்தில் இந்த டோரதி  திருநங்கைகளின் தனி அடையாளம் என்று சொல்லலாம்.
Previous Post

இதுவரை காணாத ஹாட் லுக்! ஆலியா பட்டின் ‘லவ் & வார்’ (Love & War) முதல் பார்வை போஸ்டர்கள் வைரல்!

Next Post

சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘SK27’ – அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Next Post

சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘SK27’ – அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Popular News

  • இயக்குனர் சீனுராமசாமியிடம்  துணை இயக்குனராக பணியாற்றிய தயானந்தன்  இயக்குனராக  திரையுலகில் தடம் பதிக்கிறார்.

    இயக்குனர் சீனுராமசாமியிடம்  துணை இயக்குனராக பணியாற்றிய தயானந்தன் இயக்குனராக திரையுலகில் தடம் பதிக்கிறார்.

    0 shares
    Share 0 Tweet 0
  • கமல்ஹாசனின் ‘சண்டியர்’ படப்பிடிப்பு அவருடைய பிறந்தநாளில் தொடங்கியது!

    0 shares
    Share 0 Tweet 0
  • பாடலாசிரியர் பிரியன் நடிக்கும் ‘வெகுளி’ திரைப்படம் (VEGULI) நவம்பர் 20 முதல் திரையரங்குகளில் வெளியீடு!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ படத்தின் ஐந்து அதிரடியான புதிய போஸ்டர்களை வெளியிட்ட மார்வெல் ஸ்டுடியோஸ்!

    0 shares
    Share 0 Tweet 0
  • முகமூடி அணிந்த கலைஞர் தி ஆர்ட்டிஸ்ட் 404 ‘ஜான் டோ’ படத்திலிருந்து ‘நான் போதுமா’ பாடலை வெளியிட்டார்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

‘சிக்னல் அட் 11.30’ திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா!

November 8, 2026

200 முதியோர்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஆடைகள், நலத்திட்ட உதவிகள் – ஏராளமான பொதுமக்களுக்கு மருத்துவச் சேவைகள்!

November 8, 2026

‘யாத்திசை’ படப்புகழ் இயக்குநர் தரணி ராசேந்திரனின் பிரம்மிக்க வைக்கும் வரலாற்றுப் பின்னணி கொண்ட ‘டெத் ரயில்வே’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் கிளிம்ப்ஸ் வெளியீடு!

November 8, 2026

மைத்ரி மூவி மேக்கர்ஸ், ஜி ஸ்குவாட் இணைந்து வழங்கும், இயக்குநர் விஷால் வெங்கட் இயக்கத்தில் ரெஜினா கசாண்ட்ரா, நாசர் நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

November 8, 2026

ஜியோஹாட்ஸ்டாரின் புதிய அலுவலக நகைச்சுவைத் தொடர் ‘மிஸ்டர் & மிஸஸ் ஆபிஸ்’ நவம்பர் 18 ஆம் தேதி முதல் ப்ரீமியர் ஆகிறது!

November 8, 2026

ராமாயணா – விமர்சனம்

November 8, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.