டோரதி – விமர்சனம்
இந்த சூழலில் சுப்புவின் அண்ணன், கீர்த்தி சுரேஷை (டோரதி) திருமணம் செய்து வீட்டிற்கு அழைத்து வருகிறார். அவருடன் சுப்பு பழக ஆரம்பிக்க, ஒரு நாள் அவர் தூக்குபோட்டு இறந்துபோகிறார். இது தற்கொலை இல்லை, என்னுடைய அப்பனும் அண்ணனும் தான் கொலை செய்துள்ளார்கள் என கோபமடைகிறார் சுப்பு.
தாய், தங்கை, அண்ணி என அனைவரையும் வீட்டில் உள்ள ஆண்கள் கொலை செய்ததை நினைத்து வாடும் சுப்பு, ஒரு கட்டத்தில் தான் ஆண் இல்லை திருநங்கையாக மாறிவிட்டேன் என என்பதை வெளிப்படுத்துகிறார். இதனால் குடும்ப மானம் போய்விடும் என, கார்த்தியிடம் சுப்புவை கொலை செய்ய சொல்கிறார்கள்.
கார்த்தி சுப்புவை திருநங்கையாக ஏற்றுக்கொண்டாரா? இல்லை கொலை செய்தாரா? இதன்பின் என்னென்ன சம்பவங்கள் நடந்தன என்பதே படத்தின் மீதி கதை.
இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் எடுத்துக்கொண்ட மிகவும் சென்சிட்டிவான கதைக்களத்தை நேர்த்தியான திரைக்கதையில் வழங்கியுள்ளார். மனிதர்கள் எவ்வளவு கொடூரமான மிருகமாக நடந்துகொள்கிறார்கள் என்பதை காட்டிய விதம், ஆணாக இருந்து திருநங்கையாக சனந்த் மாறும் காட்சி, கீர்த்தி சுரேஷின் மரணம், ரிஷிகாந்தின் தவிப்பு என பல விஷயங்கள் தாக்கத்தை ஏற்படுகிறது.
திருநங்கையாக மாறிய தனது நண்பனை ஏற்க மறுத்து, அவனை அருவருப்பாக பார்க்கும் காட்சிகளில் இருந்து நண்பனை எப்படி கொலை செய்வது என தவிக்கும் காட்சிகள் வரை சிறப்பாக நடித்துள்ளார் நடிகர் ரிஷிகாந்த்.
திருநங்கையாக மாறியபின் தனது நடிப்பால் கவனத்தை ஈர்க்கிறார் சனந்த். குறிப்பாக தனது நண்பனோடு அவர் செல்லும் பயணம், அதில் இருவருக்கும் இடையே ஏற்படும் மன மாற்றங்கள் அனைத்தும் சிறப்பான காட்சிகள்.
பாடல்களாலும் பின்னணி இசையாலும் படத்தை மிகப்பெரிய அளவில் தூக்கி பிடித்துள்ளார் இசைஞானி இளையராஜா. இவருடைய நாஸ்டால்ஜிக் பாடல்கள் மற்றும் பின்னணி இசையும் இப்படத்தில் இடம்பெற்று இருப்பது படத்தின் மிகப்பெரிய பலம். படத்திலுள்ள பல சென்சிட்டிவான காட்சிகளுக்கு பின்னணி இசையால் உயிர் கொடுத்துள்ளார். அன்றும் இன்றும் என்றும் ராஜா ராஜாதான்.
படம் முழுக்க இளையராஜாவின் இசை ராஜ்ஜியம் படித்திருக்கிறார்.கேமராவும் கிடைத்த கேப்புகளில் எல்லாம் புகுந்து விளையாடி இருக்கின்றது.
கார்த்திக் சுப்புராஜ் மிகப்பெரிய ஒரு ரிஸ்க்கான கதையை எடுத்திருக்கிறார் இது எந்த அளவுக்கு ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்று தெரியவில்லை.
இளையராஜாவும் டோரதி யும் என்றே சொல்லலாம் அந்த அளவுக்கு கதையும் இசையும் பின்னி பிணைந்து இருக்கின்றன.







