• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா விமர்சனம்

மீசைய முறுக்கு2 – விமர்சனம்

by Tamil2daynews
September 25, 2026
in விமர்சனம்
0
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

மீசைய முறுக்கு2 – விமர்சனம் 

 

Hiphop tamizha Meesaya murukku 2 first review: ஹிப் ஹாப் தமிழா இயக்கி ஹீரோவாக நடித்துள்ள மீசைய முறுக்கு 2 திரைப்படத்தின் முதல் விமர்சனம் வெளியாகியுள்ளது; படம் எப்படி உள்ளது என்பதை இந்த முதல் விமர்சனத்தில் பார்க்கலாம், வாங்க. நகைச்சுவைப்படங்களை ரசி

மீசைய முறுக்கு பாடல்கள் மூலம் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த ஹிப் ஹாப் தமிழா ஆதி, இயக்கி ஹீரோவாக நடித்து வெளிவந்த திரைப்படம் மீசைய முறுக்கு.

தன்னுடைய வாழ்க்கையை வைத்து இப்படத்தை எடுத்திருப்பார். 2017-ஆம் ஆண்டு வெளியான இப்படம் ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றி பெற்றது.

முதல் பாகத்தில் ஆதி தனது சொந்த வாழ்க்கையை மையமாக வைத்து கதையை உருவாக்கியிருந்தார். இசை மீது ஆர்வம் கொண்ட ஒரு இளைஞன் தனது கனவை நோக்கி பயணிப்பது, அதற்காக சந்திக்கும் தடைகள் மற்றும் காதல் ஆகியவற்றை மையமாக வைத்து அந்த படம் உருவானது.

இந்த படத்தின் முக்கியமான சிறப்பம்சமாக 3 வெவ்வேறு காலகட்டங்களில் பயணிக்கும் கதை அமைப்பு பார்க்கப்படுகிறது. இசை உலகில் தலைமுறைக்கு தலைமுறை ஏற்படும் மாற்றங்கள், பழைய தலைமுறையின் அணுகுமுறை, புதிய தலைமுறையின் கனவுகள் என பல விஷயங்கள் கதையில் இடம்பெற்றுள்ளதாக ஆதி தெரிவித்துள்ளார்.
Meesaya Murukku 2 title teaser out; Chaithra J Achar, Ketika Sharma join the sequel

குறிப்பாக கானா இசையை பாரம்பரிய எல்லைகளைக் கடந்து இன்னும் பெரிய அளவில் கொண்டு செல்ல வேண்டும் என்ற எண்ணம் கொண்ட இளம் இசைக்கலைஞரைச் சுற்றி கதையின் முக்கிய பகுதி நகர்கிறது. இசையை வெறும் பொழுதுபோக்காக இல்லாமல் வாழ்க்கைப் பாதையாக பார்க்கும் மனிதர்களின் உணர்வுகளையும் படம் பேசுகிறது.

படத்தின் பாடல்களும் நன்றாக இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக கலைவாணியே பாடல் மனதை கவரும் வகையில் இருப்பதாகவும் அவர் பாராட்டியுள்ளார். இதனால் இசை ரசிகர்களுக்கு இந்த படம் கூடுதல் விருந்தாக அமையும் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது

படத்தின் முதல் பாதி இன்றைய இளம் தலைமுறையினருடன் எளிதாக தொடர்புபடுத்திக்கொள்ளும் வகையில் அமைந்துள்ளது. இன்றைய இளைஞர்களின் இசை ஆர்வம், கனவு மற்றும் தங்களுக்கென ஒரு பாதையை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் ஆகியவை முதல் பாதியில் முக்கியமாக இடம்பெற்றுள்ளது.

படத்தின் 2ம் பாதி அதிக உணர்வுகளுடன் நகர்வதாக முதல் விமர்சனம் தெரிவித்துள்ளது. குறிப்பாக தந்தை மற்றும் மகன் இடையிலான உறவு அழுத்தமாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது மிக அருமை.

உறவை மையமாகக் கொண்ட காட்சிகள் ரசிகர்களை நெகிழ வைக்கும் வகையில் இருப்பதாகவும் விமர்சனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் பாதியில் இளைஞர்களை மையப்படுத்திய காட்சிகளும், 2ம் பாதியில் குடும்ப உணர்வுகளும் இணைந்திருப்பது படத்தின் முக்கியமான அம்சமாக இருக்கும்.
Meesaya Murukku 2: Hiphop Tamizha Adhi returns with triple role musical drama; teaser out

இந்த படத்தில் சைத்ரா அச்சர், கேதிகா சர்மா, ரம்யா ரங்கநாதன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் ஹர்ஷத் கான், பாபா பாஸ்கர், கருணாஸ், நாசர் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

முதல் விமர்சனத்தில் குறிப்பாக ரம்யா ரங்கநாதனின் கதாபாத்திரம் வலுவாக அமைந்துள்ளதாக பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அவரது கதாபாத்திரம் படத்தின் உணர்வுப்பூர்வமான பகுதிகளில் முக்கிய பங்கு வகிக்கலாம் என்ற எதிர்பார்ப்பு உருவாகிறது.

முதல் பாகத்தில் மறைந்த நடிகர் விவேக் ஆதியின் தந்தையாக நடித்திருந்தார். 2ம் பாகத்தில் அந்த இடத்தை யாராலும் நிரப்ப முடியாது என்று ஆதி ஏற்கனவே தெரிவித்துள்ளார். இருப்பினும், புதிய கதையில் முக்கியமான தந்தை கதாபாத்திரம் இருப்பதால் அதற்கு பாபா பாஸ்கரை நடிக்க வைத்துள்ளார் அவரும் நடிப்பில் நன்றாக தெரிகிறார்.

படம் வெளியாகிறதுக்கு முன்னாடியே படத்தின் பாடல்கள் ஹிட் அடித்த நிலையில் படத்தில் வரும் ஒவ்வொரு காட்சிகளும் இன்றைய தலைமுறுக்கு ஏற்ற படமாகவே இந்த மீசைய முறுக்கு அமைந்திருக்கிறது குறிப்பிடத்தக்கது.

மொத்தத்தில் மீசைய முறுக்கு படத்தின் பெயர் அல்ல, படம் பார்த்துட்டு தியேட்டரை விட்டு வெளியே வருபவர்களும் முறுக்கலாம் மீசையை.

இன்றைய இளைய தலைமுறைகள் பார்க்க வேண்டிய படம்.
Previous Post

பாரடைஸ் – விமர்சனம்

Next Post

‘பத்தா’ படத்தின் டிரெய்லர் வெளியீடு – விஜய் சேதுபதியின் பல முகங்களைக் காட்டும் வித்தியாசமான டிரெய்லர்

Next Post

‘பத்தா’ படத்தின் டிரெய்லர் வெளியீடு – விஜய் சேதுபதியின் பல முகங்களைக் காட்டும் வித்தியாசமான டிரெய்லர்

Popular News

  • மீசைய முறுக்கு2 – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘பத்தா’ படத்தின் டிரெய்லர் வெளியீடு – விஜய் சேதுபதியின் பல முகங்களைக் காட்டும் வித்தியாசமான டிரெய்லர்

    0 shares
    Share 0 Tweet 0
  • “வெற்றிமாறன் மாற்றியது சூரியை அல்ல, ரசிகர்களின் பார்வையை!” – பாடலாசிரியர் மதன் கார்க்கி விளக்கம்!

    0 shares
    Share 0 Tweet 0
  • இதுவரை காணாத ஹாட் லுக்! ஆலியா பட்டின் ‘லவ் & வார்’ (Love & War) முதல் பார்வை போஸ்டர்கள் வைரல்!

    0 shares
    Share 0 Tweet 0
  • டோரதி – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

டோரதி – விமர்சனம்

September 25, 2026

இதுவரை காணாத ஹாட் லுக்! ஆலியா பட்டின் ‘லவ் & வார்’ (Love & War) முதல் பார்வை போஸ்டர்கள் வைரல்!

September 25, 2026

“வெற்றிமாறன் மாற்றியது சூரியை அல்ல, ரசிகர்களின் பார்வையை!” – பாடலாசிரியர் மதன் கார்க்கி விளக்கம்!

September 25, 2026

‘பத்தா’ படத்தின் டிரெய்லர் வெளியீடு – விஜய் சேதுபதியின் பல முகங்களைக் காட்டும் வித்தியாசமான டிரெய்லர்

September 25, 2026

மீசைய முறுக்கு2 – விமர்சனம்

September 25, 2026

பாரடைஸ் – விமர்சனம்

September 25, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.