• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

ஹைக்கூ’ படக்குழுவுடன் மூன்றாவது முறையாக இணையும் முன்னணி விநியோக நிறுவனமான சக்தி ஃபிலிம் ஃபேக்டரி !

by Tamil2daynews
September 29, 2026
in சினிமா செய்திகள்
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

ஹைக்கூ’ படக்குழுவுடன் மூன்றாவது முறையாக இணையும் முன்னணி விநியோக நிறுவனமான சக்தி ஃபிலிம் ஃபேக்டரி !

 

தமிழ் சினிமாவில் காதல் கதைகள் எப்போதுமே ஸ்பெஷல். ‘மௌன ராகம்’, ‘அலைபாயுதே’, ‘மின்னலே’, ‘விண்ணைத்தாண்டி வருவாயா’, ‘96’ என பல்வேறு காலகட்டங்களில் வெளியான காதல் திரைப்படங்கள் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளன. அந்த வரிசையில், புதிய தலைமுறைக்கான காதல் கதையாக உருவாகியுள்ள ‘ஹைக்கூ’ திரைப்படத்தின் தமிழ் திரையரங்க விநியோகத்தினை முன்னணியில் உள்ள சக்தி ஃபிலிம் ஃபேக்டரி கைப்பற்றியுள்ளது. ‘ஹைக்கூ’ படக்குழுவுடன் சக்தி ஃபிலிம் ஃபேக்டரி இணையும் மூன்றாவது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிறுவனத்திற்கும் படக்குழுவினருக்கும் இடையில் உள்ள பரஸ்பர நம்பிக்கையையும் இது காட்டுகிறது.

திரையரங்க விநியோகத்தில் முன்னணி நிறுவனமான சக்தி ஃபிலிம் ஃபேக்டரி வணிக ரீதியாக நல்ல திரைப்படங்களை தேர்ந்தெடுத்து அவற்றை ரசிகர்களிடம் கொண்டு போய் சேர்ப்பதில் பெயர் பெற்றது. அந்த வகையில், ‘ஹைக்கூ’ திரைப்படத்தை இந்நிறுவனம் விநியோகம் செய்வது படம் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.உணர்வுப்பூர்வமான காதல் திரைப்படங்களை ரசிகர்கள் தொடர்ந்து கொண்டாடி வரும் நிலையில், ‘ஹைக்கூ’ திரைப்படம் காதலின் பல்வேறு பரிமாணங்களைப் பேசும் ஒரு முழுமையான கதையாக உருவாகியுள்ளது. ‘அலைபாயுதே’, ‘விண்ணைத்தாண்டி வருவாயா’, ‘96’ போன்ற திரைப்படங்கள் ரசிகர்களிடம் ஏற்படுத்திய உணர்வுப்பூர்வமான தாக்கத்தை நினைவூட்டும் வகையிலும் சமகாலத்து காதலை பேசும் திரைப்படமாகவும் இது இருக்கும்.

இப்படத்தை யுவராஜ் சின்னசாமி எழுதி இயக்கியுள்ளார். ஏகன், ஸ்ரீதேவி மற்றும் பெமினா ஜார்ஜ் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சித்து குமார் இசையமைத்துள்ள இப்படத்திற்கு பிரியேஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். அருள் மற்றும் மேத்யூ இப்படத்தைத் தயாரித்துள்ளனர். நெட்ஃபிலிக்ஸ் நிறுவனம் இப்படத்தின் ஓடிடி உரிமையை கைப்பற்றியுள்ளது.

அக்டோபர் 23 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் இந்தத் திரைப்படத்தை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.

Previous Post

“மூன்றாம் பாலினத்தவர்களின் வாழ்க்கை மற்றும் உணர்வுகளை ஆழமாகப் புரிந்துகொள்ள ‘டோரதி’ திரைப்படம் உதவுகிறது”… சகோதரன் அமைப்பினர் பாராட்டு!

Next Post

திரையரங்குகளில் குடும்ப பார்வையாளர்களின் கைத்தட்டலிலும் கிளைமாக்ஸில் முத்துமணி பாடலின் ஆரவாரத்திலும் ‘டோரதி’ திரைப்படத்தின் வெற்றிப்பயணம் தொடர்கிறது!

Next Post

திரையரங்குகளில் குடும்ப பார்வையாளர்களின் கைத்தட்டலிலும் கிளைமாக்ஸில் முத்துமணி பாடலின் ஆரவாரத்திலும் ‘டோரதி’ திரைப்படத்தின் வெற்றிப்பயணம் தொடர்கிறது!

Popular News

  • டிக் டாக் புகழ் இலக்கியா நடிக்கும் படம் ‘ நீ சுடத்தான் வந்தியா’

    டிக் டாக் புகழ் இலக்கியா நடிக்கும் படம் ‘ நீ சுடத்தான் வந்தியா’

    0 shares
    Share 0 Tweet 0
  • நடிகர் வி ஆர் தினேஷ் நடிக்கும் 26 வது படம் பந்தா கேங்ஸ்.

    0 shares
    Share 0 Tweet 0
  • ஃபஹத் பாசில் நடிக்கும் ‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்’ (Don’t Trouble The Trouble’ ) படத்தின் ப்ரீ- ரிலீஸ் ஈவென்ட்

    0 shares
    Share 0 Tweet 0
  • நடிகர் ரன்பீர் கபூர் பிறந்தநாளில் ‘ராமாயணா’ படக்குழு வெளியிட்ட சிறப்பு BTS காட்சிகள்!

    0 shares
    Share 0 Tweet 0
  • அனிருத்தின் அல்புகெர்க்கி ரெக்கார்ட்ஸ் வெளியிட்ட ஸ்மித் ஆஷர் இசையில் உருவான ‘அன்னக்கிளியே’ மியூசிக் வீடியோ ஆல்பம்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

நடிகர் வி ஆர் தினேஷ் நடிக்கும் 26 வது படம் பந்தா கேங்ஸ்.

September 29, 2026

ஃபஹத் பாசில் நடிக்கும் ‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்’ (Don’t Trouble The Trouble’ ) படத்தின் ப்ரீ- ரிலீஸ் ஈவென்ட்

September 29, 2026

நடிகர் ரன்பீர் கபூர் பிறந்தநாளில் ‘ராமாயணா’ படக்குழு வெளியிட்ட சிறப்பு BTS காட்சிகள்!

September 29, 2026

அனிருத்தின் அல்புகெர்க்கி ரெக்கார்ட்ஸ் வெளியிட்ட ஸ்மித் ஆஷர் இசையில் உருவான ‘அன்னக்கிளியே’ மியூசிக் வீடியோ ஆல்பம்

September 29, 2026

கே.மணிகண்டன் நடிக்கும் ‘மக்கள் காவலன்’ வெளியீட்டு தேதி அறிவிப்பு

September 29, 2026

திரையரங்குகளில் குடும்ப பார்வையாளர்களின் கைத்தட்டலிலும் கிளைமாக்ஸில் முத்துமணி பாடலின் ஆரவாரத்திலும் ‘டோரதி’ திரைப்படத்தின் வெற்றிப்பயணம் தொடர்கிறது!

September 29, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.