• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

கே.மணிகண்டன் நடிக்கும் ‘மக்கள் காவலன்’ வெளியீட்டு தேதி அறிவிப்பு

by Tamil2daynews
September 29, 2026
in சினிமா செய்திகள்
0
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
 கே.மணிகண்டன் நடிக்கும் ‘மக்கள் காவலன்’ வெளியீட்டு தேதி அறிவிப்பு

பிர்லா ஸ்டுடியோஸ் ( Birla Studios ) – நீலம் ஸ்டுடியோஸ் ( Neelam Studios )  நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் ‘மக்கள் காவலன்’ திரைப்படம் – உலக அளவில் எதிர்வரும் டிசம்பர் மாதம் 4 ஆம் தேதியன்று வெளியாகும் என அறிவித்துள்ளனர்.

நடிகர் கே. மணிகண்டன் (K. Manikandan) நடிப்பில் உருவாகும் இந்த அதிரடி திரைப்படத்தின் வெளியீட்டு தேதி- அவரது பிறந்த நாளன்று அறிவிக்கப்பட்டுள்ளது

கே. மணிகண்டன் நடிப்பில் பிர்லா ஸ்டுடியோஸ் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ள அதிரடி திரைப்படமான ‘மக்கள் காவலன்’ எதிர்வரும் டிசம்பர் மாதம்  4ஆம்  தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் கே. மணிகண்டனின் பிறந்த நாளையொட்டி இந்த வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டிருக்கிறது.

லட்சியம் -மன உறுதி- தடைகளை கடந்து முன்னேறும் துணிச்சல்- ஆகியவை ‘மக்கள் காவலன்’ படத்தின் மைய புள்ளியாகும். நடிகரின் சொந்த திரைப்பயணமும் இதனை பிரதிபலிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

‘பைசன் காளமாடன்’ திரைப்படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றியை தொடர்ந்து பிர்லா ஸ்டுடியோஸ் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் கூட்டணியில் உருவாகும் அடுத்த படம் ‘மக்கள் காவலன்’. பிரம்மாண்டமான திரைப்படங்களை உருவாக்கும் பிர்லா ஸ்டுடியோஸின் லட்சியத்தையும்…. உணர்வு பூர்வமான மற்றும் சமூக பின்னணி கொண்ட சிறந்த சினிமா கதைகளை உருவாக்கும் நீலம் ஸ்டுடியோஸின் அர்ப்பணிப்பையும்… இந்த திரைப்படம் ஒன்றிணைக்கிறது.

‘குட் நைட்’, ‘லவ்வர்’, ‘குடும்பஸ்தன்’ ஆகிய திரைப்படங்களின் வணிக ரீதியான வெற்றியை தொடர்ந்து கே. மணிகண்டன் நடிக்கும் திரைப்படம் ‘மக்கள் காவலன்’. அவரின் தொடர் வெற்றிகள் தமிழ் சினிமாவின் நம்பிக்கைக்குரிய மற்றும் அதிகம் விரும்பப்படும் முன்னணி நடிகர்களில் ஒருவராக அவரை உயர்த்தியுள்ளது. ‘மக்கள் காவலன்’ படத்தின் மூலம் மணிகண்டன் முதன்முறையாக ஒரு அதிரடியான ஆக்ஷன் திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார்.Imageஇயக்குநர் சந்தோஷ் குமார் எழுதி, இயக்கியிருக்கும் ‘மக்கள் காவலன்’ திரைப்படம் – கண்ணியத்துடன் வாழ விரும்பும் ஒரு சாதாரண மனிதனின் கதையை உரக்க பேசுகிறது. ஆனால் ஊழல் நிறைந்த ஒரு அமைப்பு… அவரை சரணடைவது அல்லது எதிர்த்து போராடுவது என்ற இரண்டு தேர்வுகளுக்குள் உந்தித் தள்ளுகிறது. ஒரு தனி மனிதனின் உயிர் வாழ்வதற்கான போராட்டமாக தொடங்கும் இது… மிகப்பெரிய பரிமாணத்தை எட்டுகிறது. இதனால் அவர் ஒருபோதும் விரும்பாத… ஒரு தலைவராக மாற வேண்டிய கட்டாய சூழல் உருவாகிறது. போராட்டம் தீவிரம் அடையும் போது.. அதற்கான விலையும் அதிகரிக்கிறது. அதே சமயத்தில் ஒரு சாதாரண மனிதனுக்கும், மக்களின் காவலனுக்கும் இடையிலான எல்லை மறைய தொடங்குகிறது. தனது பிறப்பு சூழலோ… அல்லது தன்னை சுற்றியுள்ள தடைகளோ… தனது லட்சியத்தின் எல்லையை தீர்மானிக்க அனுமதிக்காத ஒரு மனிதனின் கதையே.. இப்படத்தின் மையப் பொருளாகும். உலகம் விதிக்கும் எல்லைகளுக்கு அப்பால் கனவு காணும் துணிச்சலையும்… அந்த எல்லைகள் முக்கியத்துவமற்றதாக மாறும் வரை தொடர்ந்து முன்னேறும் மன உறுதியையும்… இத்திரைப்படம் அழுத்தமாக பேசுகிறது.

மணிகண்டனின் பிறந்த நாளன்று இப்படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டிருப்பது, அந்த மன உறுதியைப் பிரதிபலிக்கும் வகையில் குறிப்பிடத்தக்கதாக அமைந்துள்ளது..

எழுத்து, டப்பிங் மற்றும் சிறிய வேடங்களில் நடிக்க தொடங்கி.. இன்று ஒரு முன்னணி நடிகராக உயர்ந்திருக்கும் மணிகண்டனின் பயணமானது விடாமுயற்சி- தன்னை தொடர்ந்து புதுப்பித்துக் கொள்ளுதல் – மற்றும் தனது கலை மீதான அசைக்க இயலாத அர்ப்பணிப்பு – ஆகியவற்றால் கட்டமைக்கப்பட்டது.

இந்த திரைப்படத்தில் கே. மணிகண்டன் முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்க, அவருடன் வாகை சந்திரசேகர், ஏ. வெங்கடேஷ், ஆர் .கே. விஜய் முருகன், சண்முகம் முத்துசாமி, சபுமோன்,  உன்னி மாயா,  திவ்யா ஸ்ரீபாதா ,ஜென்சன் திவாகர், லல்லு , ஜெமினி மணி,  ரகு உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பிரதீபன் செல்வரத்னம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ‘பைசன் காளமாடன்’ படத்திற்கு பிறகு நிவாஸ் கே பிரசன்னா இசையமைக்கிறார். படத்தொகுப்புப் பணிகளை அருள் மோசஸ் மேற்கொள்ள, தயாரிப்பு வடிவமைப்பை  பாப்பநாடு சி. உதயகுமார் கவனித்திருக்கிறார். சண்டை பயிற்சியை டான் அசோக் – ஒலி வடிவமைப்பினை  ஆண்டனி ஜெயரூபன் – ஆடை வடிவமைப்பை சுரேஷ்குமார்-  ஒப்பனையை ராமச்சந்திரன் – ஆகியோர் மேற்கொண்டுள்ளனர்.

Previous Post

திரையரங்குகளில் குடும்ப பார்வையாளர்களின் கைத்தட்டலிலும் கிளைமாக்ஸில் முத்துமணி பாடலின் ஆரவாரத்திலும் ‘டோரதி’ திரைப்படத்தின் வெற்றிப்பயணம் தொடர்கிறது!

Next Post

அனிருத்தின் அல்புகெர்க்கி ரெக்கார்ட்ஸ் வெளியிட்ட ஸ்மித் ஆஷர் இசையில் உருவான ‘அன்னக்கிளியே’ மியூசிக் வீடியோ ஆல்பம்

Next Post

அனிருத்தின் அல்புகெர்க்கி ரெக்கார்ட்ஸ் வெளியிட்ட ஸ்மித் ஆஷர் இசையில் உருவான 'அன்னக்கிளியே' மியூசிக் வீடியோ ஆல்பம்

Popular News

  • பக்கத்து வீட்டுக்காரர்களே துப்பறிவாளர்களாக மாறினால் என்ன நடக்கும்? விஜய் சேதுபதி வெளியிட்ட ‘ஆக்டோபஸ்’ வெப் தொடரின் டிரெய்லர் – நவம்பர் 27 முதல் ZEE5-ல் ஸ்ட்ரீமிங்!

    0 shares
    Share 0 Tweet 0
  • பேசத் தயங்கும் விஷயங்களின் மவுனத்தை உடைக்கும் மலேசிய தமிழ் க்ரைம் த்ரில்லர் ‘இரும்புத் தோட்டம் ; விரைவில் தமிழகமெங்கும் ரிலீஸ்’!

    0 shares
    Share 0 Tweet 0
  • காதல் மற்றும் உறவுகளின் உணர்வுப்பூர்வமான கொண்டாட்டமாக வெளியான ‘ஹைக்கூ’ திரைப்படம் நவம்பர் 20 அன்று நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது!

    0 shares
    Share 0 Tweet 0
  • “கனவுகள், விடாமுயற்சி, சொந்த ஊரை விட்டு வெளியேறி வாழும் தமிழ் இளைஞர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் என அனைத்தையும் பேசும் கதைதான் ‘பீட்சா பாய்ஸ்’”…இயக்குநர் சேகர் கேசவ் சிரின்!

    0 shares
    Share 0 Tweet 0
  • சத்தியவான் சாவித்திரி – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

“‘டெத் இரயில்வே பக்கா கமர்ஷியல் படம்”…’யாத்திசை’ இயக்குநர் தரணி ராசேந்திரன்!

November 22, 2026

ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன் தன் மகள் அல்லு அர்ஹாவுக்கு சொன்ன நெகிழ்ச்சியான பிறந்தநாள் வாழ்த்து!

November 22, 2026

உலக மீனவர் தினத்தை முன்னிட்டு ‘தமிழினி’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

November 22, 2026

‘டெலிவரி பாய்’ திரைப்பட முன் வெளியீட்டு விழா !!

November 22, 2026

பிரைம் ஷோ என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், Vi. ஆனந்தின் கற்பனையில், நடிகர் பஞ்ச வைஷ்ணவ் தேஜ் நடிக்கும் ‘ஹனுமேன் 2: தி ரைஸ் ஆஃப் வானராஸ்’ (HanuMan 2: The Rise of Vanaras) – டைட்டில் போஸ்டர் வெளியீடு!

November 22, 2026

ஆகாயத்தில் ஒரு தாரகை (AOT) – விமர்சனம்

November 22, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.