• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

சிக்மா’ திரைப்படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு!

by Tamil2daynews
October 1, 2026
in சினிமா செய்திகள்
0
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

சிக்மா’ திரைப்படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு!

 

லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘சிக்மா’திரைப்படத்தின் மூலம், ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகிறார். சந்தீப் கிஷன், ஃபரியா அப்துல்லா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த திரைப்படம் அக்டோபர் இரண்டாம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த திரைப்படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.

கலை இயக்குநர் பெஞ்சமின், “இந்தப் படத்தில் என்னை நம்பி வாய்ப்பு தந்த இயக்குநர் சஞ்சய்க்கும், தயாரிப்பு நிறுவனத்திற்கும், ஒத்துழைப்பு கொடுத்த படக்குழுவினருக்கும் நன்றி. மேக்கிங், விஷூவல் இரண்டும் அற்புதமாக வந்துள்ளது. திரையரங்குகளில் பார்த்து ஆதரவு கொடுங்கள். சஞ்சய் சார், சந்தீப் சார் அனைவருக்கும் நன்றி”.

நடிகர் அன்பு, “கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களாக இந்த படத்தில் பயணம் செய்கிறேன். இந்த கேரக்டரை என்னை மனதில் வைத்து தான் எழுதினேன் என்று சஞ்சய் ப்ரோ சொன்னார். எமோஷனல் மற்றும் எண்டர்டெயின்மெண்ட் விஷயங்களோடு படம் நன்றாக வந்திருக்கிறது. சஞ்சய் ப்ரோ, சந்தீப் ப்ரோ, ஃபரியா மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி”.

இணை இயக்குநர் சஞ்சய், “‘சிக்மா’ அக்டோபர் 2 அன்று வெளியாகிறது. உங்கள் அனைவரது ஆதரவும் படத்திற்கு தேவை”.
நடிகை ஃபரியா, “படம் ரிலீஸ் ஆவது நினைத்து கொஞ்சம் பதட்டமாக இருக்கிறது. லைகா புரொடக்சன்ஸ், சஞ்சய், சந்தீப், படக்குழுவினர் மற்றும் எனது குடும்பத்தினர் அனைவருக்கும் நன்றி. படம் பார்த்துவிட்டு சொல்லுங்கள் “.

நடிகர் சந்தீப் கிஷன், ” ‘யாருடா மகேஷ்’ படத்திலிருந்து ‘சிக்மா’ வரை என்னுடைய தமிழ் சினிமா பயணத்திற்கு ஆதரவு கொடுத்த அனைவருக்கும் நன்றி. என்னுடைய சினிமா வாழ்க்கையை குட்டி பிக் பாஸ் போல தான் பார்க்கிறேன். இந்திய சினிமாவை அடுத்த லெவலுக்கு எடுத்துச் செல்லும் பணியை லைகா நிறுவனம் செய்து வருகிறது. தமன் படத்திற்கு பிரமாதமாக இசையமைத்துள்ளார்.

தனக்கு பிடித்த விஷயம் தன் வாழ்வின் அடையாளமாக இருக்க வேண்டும் என நினைத்து இயக்கத்துக்கு வந்தவர் சஞ்சய். ஹீரோவாக அறிமுகமாக வாய்ப்பிருந்தும் தன்னுடைய முதல் காதலை தேர்ந்தெடுத்து இயக்குநராகியிருக்கிறார். படம் நிச்சயமாக அனைவருக்கும் பிடிக்கும்.

சிக்மா திரைப்படம் என்டர்டெயினிங் ஜாலி ஆக்ஷன் படமாக இருக்கும். இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்று இயக்குநராக சஞ்சய் அடுத்தடுத்து பெரிய இடத்திற்கு போனால் நிச்சயம் நான் சந்தோஷப்படுவேன்”.

லைகா புரொடக்ஷன்ஸ் தமிழ்குமரன், “ஜேசன் சஞ்சய்க்கும் லைகா நிறுவனத்திற்கும் சிக்மா முக்கியமான படம். நன்றாக வந்திருக்கிறது. மிகவும் அன்பானவர். படம் பார்த்துவிட்டு சுபாஷ் அண்ணாவுக்கும் மகிழ்ச்சி. படம் பார்த்துவிட்டு சொல்லுங்கள்”.

Previous Post

பத்தா – விமர்சனம்

Next Post

“நம்பிக்கை, கடின உழைப்பு மற்றும் விடாமுயற்சி நிறைந்த பயணம் ‘சிக்மா’” -இயக்குநர் சஞ்சய்!

Next Post

“நம்பிக்கை, கடின உழைப்பு மற்றும் விடாமுயற்சி நிறைந்த பயணம் ‘சிக்மா’” -இயக்குநர் சஞ்சய்!

Popular News

  • ‘சிக்மா’ திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா நிகழ்வு!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘மிஸ்டர் பாரத்’ திரைப்படத்தின் திரையரங்க வெளியீடு குறித்த அப்டேட்!

    0 shares
    Share 0 Tweet 0
  • நகைச்சுவை நட்சத்திரங்கள் யோகி பாபு – சத்யா,ஆகியோர் ‘ரங்கபலி’ (Rangabali) புகழ் பவன் பாசம்செட்டி இயக்கும் காமெடி சரவெடியில் இணைகின்றனர்.

    0 shares
    Share 0 Tweet 0
  • “‘டோரதி’ திரைப்படம் எனக்கு கிடைத்த பொக்கிஷம்”- நடிகர் சனந்த்!

    0 shares
    Share 0 Tweet 0
  • “நம்பிக்கை, கடின உழைப்பு மற்றும் விடாமுயற்சி நிறைந்த பயணம் ‘சிக்மா’” -இயக்குநர் சஞ்சய்!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

‘மிஸ்டர் பாரத்’ திரைப்படத்தின் திரையரங்க வெளியீடு குறித்த அப்டேட்!

October 1, 2026

நகைச்சுவை நட்சத்திரங்கள் யோகி பாபு – சத்யா,ஆகியோர் ‘ரங்கபலி’ (Rangabali) புகழ் பவன் பாசம்செட்டி இயக்கும் காமெடி சரவெடியில் இணைகின்றனர்.

October 1, 2026

“‘டோரதி’ திரைப்படம் எனக்கு கிடைத்த பொக்கிஷம்”- நடிகர் சனந்த்!

October 1, 2026

“நம்பிக்கை, கடின உழைப்பு மற்றும் விடாமுயற்சி நிறைந்த பயணம் ‘சிக்மா’” -இயக்குநர் சஞ்சய்!

October 1, 2026

சிக்மா’ திரைப்படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு!

October 1, 2026

பத்தா – விமர்சனம்

October 1, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.