• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

சென்னையில் ‘தி புட்டு – Dhe Puttu’ உணவகத்தின் கிளையை தொடங்கிய நடிகர் திலீப் – காவ்யா மாதவன் தம்பதிகள்

by Tamil2daynews
October 3, 2026
in சினிமா செய்திகள்
0
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

சென்னையில் ‘தி புட்டு – Dhe Puttu’ உணவகத்தின் கிளையை தொடங்கிய நடிகர் திலீப் – காவ்யா மாதவன் தம்பதிகள்

 

உலகம் முழுவதும் மக்கள் தங்களுக்குப் பிடித்த உணவுகளை உணவகங்களுக்கு சென்று ருசித்து சாப்பிடுவது தற்போது கொண்டாடப்பட்டு வரும் உணவு கலாச்சாரமாகும். அந்த வகையில், கேரளாவில் பிரபலமான உணவு வகைகளை மண்ணின் பாரம்பரியம் மாறாமல் தயாரித்து வழங்குவதில் நட்சத்திர தம்பதிகளான திலீப் – காவ்யா மாதவன் அவர்களுக்கு சொந்தமான ‘தி புட்டு – Dhe Puttu’ உணவகம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

சென்னையில் உள்ள மலையாளிகளுக்கும், கேரள உணவுகளை விரும்பி சாப்பிடும் மற்றவர்களுக்கும் கேரளாவின் பாரம்பரிய சுவையை வழங்கும் வகையில், சென்னை அண்ணா நகரில் ‘தி புட்டு – Dhe Puttu’ உணவகத்தின் புதிய கிளை தொடங்கப்பட்டுள்ளது.

இதன் திறப்பு விழா இன்று கோலாகலமாக நடைபெற்றது. தயாரிப்பாளர் கோகுலம் கோபாலன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ‘தி புட்டு – Dhe Puttu’ உணவகத்தை திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் நடிகர்கள் அசோகன், ஷாந்தனு பாக்யராஜ், அர்ஜுன் அசோகன், ரியாஸ் கான், நடிகைகள் மீனா, ஷாரதா, ஷீலா, சீமா, ராதிகா சரத்குமார், மிர்னா, பூர்ணிமா பாக்யராஜ், கிகி விஜய், சட்டமன்ற உறுப்பினர் லீமா ரோஸ் மார்டின், இயக்குநர் பிரியதர்ஷன், தயாரிப்பாளர்கள் கண்ணன் ரவி, சிவா, விஜயகுமார், ரவி கொட்டாரக்கரா, Seven Arts விஜயகுமார், Prince Pictures வெங்கடேஷ், ஏ.வி. அனூப், மினி ஸ்டூடியோ வினோத் குமார், பாடகர்கள் ராகேஷ் பிரம்மானந்தன், சுஜாதா மோகன், நடன இயக்குநர்கள் கலா மாஸ்டர், சாண்டி மாஸ்டர், ஸ்டண்ட் மாஸ்டர்கள் கனல் கண்ணன் மாஸ்டர், மாஃபியா சசி மாஸ்டர், ஒளிப்பதிவாளர் அபினந்தன் ராமானுஞ்சன், டாக்டர் சைதன்யா, டாக்டர் கே. கிரீஷ் உள்ளிட்ட ஏராளமான திரையுலகப் பிரபலங்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இங்கு கேரளாவின் பாரம்பரிய உணவான புட்டு 80 வகைகளில் கிடைக்கிறது. இதுவே இந்த உணவகத்தின் தனித்துவமான அடையாளமாகும். உலகம் முழுவதும் ஏராளமான கிளைகளைக் கொண்டிருக்கும் இந்நிறுவனத்தின் புதிய கிளை தற்போது சென்னை அண்ணா நகரில் தொடங்கப்பட்டுள்ளது.
வளைகுடா நாடுகளான துபாய், சார்ஜா, ஜெட்டா, தோஹா ஆகிய இடங்களிலும் சர்வதேச அளவில் ‘தி புட்டு – Dhe Puttu’ உணவகத்தின் கிளைகள் தொடங்கப்பட்டு, வாடிக்கையாளர்களின் பேராதரவுடன் தொடர்ந்து வெற்றிகரமாக இயங்கி வருகின்றன.

சென்னை அண்ணா நகரில் தொடங்கப்பட்டுள்ள இந்த உணவகத்தின் உள்ளரங்க அலங்காரம் கேரள மாநிலத்தின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், 80 வகையான புட்டுகள் கிடைப்பதாலும், பல்வேறு பாரம்பரிய கேரள உணவு வகைகள் வழங்கப்படுவதாலும், புட்டு மற்றும் கேரள உணவுகளின் மீது பிரத்யேக பிரியம் கொண்ட உணவு பிரியர்கள் இந்த புதிய கிளைக்கு வருகை தரத் தொடங்கியுள்ளனர்.

Previous Post

அன்பில் அவன் – விமர்சனம்

Popular News

  • ‘டாய்ரா’ படத்தில் எதிரெதிர் பக்கங்களில் நீதியைத் தேடும் கரீனா கபூர் கான் மற்றும் பிருத்விராஜ் சுகுமாரன்!

    0 shares
    Share 0 Tweet 0
  • சென்னையில் ‘தி புட்டு – Dhe Puttu’ உணவகத்தின் கிளையை தொடங்கிய நடிகர் திலீப் – காவ்யா மாதவன் தம்பதிகள்

    0 shares
    Share 0 Tweet 0
  • நகைச்சுவை நட்சத்திரங்கள் யோகி பாபு – சத்யா,ஆகியோர் ‘ரங்கபலி’ (Rangabali) புகழ் பவன் பாசம்செட்டி இயக்கும் காமெடி சரவெடியில் இணைகின்றனர்.

    0 shares
    Share 0 Tweet 0
  • “‘டோரதி’ திரைப்படம் எனக்கு கிடைத்த பொக்கிஷம்”- நடிகர் சனந்த்!

    0 shares
    Share 0 Tweet 0
  • “நம்பிக்கை, கடின உழைப்பு மற்றும் விடாமுயற்சி நிறைந்த பயணம் ‘சிக்மா’” -இயக்குநர் சஞ்சய்!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

சென்னையில் ‘தி புட்டு – Dhe Puttu’ உணவகத்தின் கிளையை தொடங்கிய நடிகர் திலீப் – காவ்யா மாதவன் தம்பதிகள்

October 3, 2026

அன்பில் அவன் – விமர்சனம்

October 3, 2026

சிக்மா – விமர்சனம்

October 3, 2026

Dont Trouble The Trouble – விமர்சனம்

October 3, 2026

“என்னுள் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள திரைப்படம்‘டோரதி’”- நடிகர் ரிஷிகாந்த்!

October 3, 2026

இயக்கமா…நடிப்பா…இயக்குநர் ஜேசன் சஞ்சய் பதில்!

October 3, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.