• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

யோகி பாபு நடிக்கும் ‘சிங்காரம்’ திரைப்படம் அக்டோபர் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியீடு! :

by Tamil2daynews
October 10, 2026
in சினிமா செய்திகள்
0
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

யோகி பாபு நடிக்கும் ‘சிங்காரம்’ திரைப்படம் அக்டோபர் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியீடு! :

 

‘ராஜவம்சம்’ படத்தை இயக்கிய கே.வி. கதிர்வேலு இயக்கத்தில், சாம் சி.எஸ். இசையமைப்பில் உருவாகியுள்ள நகைச்சுவை மற்றும் குடும்ப உணர்வுகள் நிறைந்த திரைப்படம் ‘சிங்காரம்’. ராக் புரொடக்ஷன் நிறுவனத்தின் சார்பில் ஏ.எஸ். ரமண பாலாஜி மற்றும் பத்மாவதி காந்தி இணைந்து தயாரித்துள்ள இப்படம், வரும் அக்டோபர் 30, 2026 அன்று உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகிறது.

தமிழ் திரையுலகில் தனது தனித்துவமான நகைச்சுவை நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்து வரும் யோகி பாபு, இப்படத்தில் கதையின் நாயகனாக நடித்துள்ளார். அவருடன் வேல ராமமூர்த்தி, எம்.எஸ். பாஸ்கர், மரியா வின்சென்ட், சார்ம்ஸ், ஆர்த்தி கணேஷ், மனோபாலா, கல்கி, மாரிமுத்து, படவா கோபி, சென்ட்ராயன், டி.எஸ்.ஆர்., தீபா சங்கர், சபிதா ராய், ஜாவா சுந்தரேசன், கே.எம். கணேஷ்கர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்தில், நரிக்குறவர் சமுதாயத்தை சேர்ந்த யோகிபாபு, தனக்கு எதிராக நிலவும் அடக்குமுறைகளையும் வாழ்க்கைச் சவால்களையும் எதிர்கொண்டு, தனது வாழ்க்கையைத் தானே தீர்மானிக்கும் துணிச்சலைப் பெறுவதே இப்படத்தின் மையக்கருவாக அமைந்துள்ளது. தனது உரிமையையும் சுயமரியாதையையும் நிலைநாட்டப் போராடும் ஒரு மனிதனின் பயணத்தை, நகைச்சுவையும் உணர்வுபூர்வமான தருணங்களும் இணைந்த திரைக்கதையின் வழியாக இப்படம் எடுத்துரைக்கிறது. அன்றாட வாழ்க்கையில் எதிர்கொள்ளும் பிரச்சினைகளையும் அவற்றைக் கடந்து முன்னேறுவதற்கான மன உறுதியையும் மையப்படுத்தி, பொழுதுபோக்குடன் கூடிய கருத்தையும் பார்வையாளர்களுக்கு வழங்கும் வகையில் ‘சிங்காரம்’ உருவாகியுள்ளது.
‘ராஜவம்சம்’ படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் கே.வி. கதிர்வேலு, இப்படத்தை இயக்கியுள்ளார். யோகி பாபுவுடன் அனுபவமிக்க நடிகர்கள் இணைந்திருப்பது படத்தின் சிறப்பம்சமாகும். நகைச்சுவை, குடும்ப உணர்வுகள் மற்றும் வாழ்க்கையை எதிர்கொள்ளும் மன உறுதி ஆகிய அம்சங்களை ஒருங்கிணைத்து, அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் வகையில் இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

இப்படத்திற்கு பிரசன்னா எஸ். குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார். லாரன்ஸ் கிஷோர் படத்தொகுப்பையும், குருராஜ் கலை இயக்கத்தையும் கவனித்துள்ளனர். அனுபவமிக்க தொழில்நுட்பக் கலைஞர்களின் பங்களிப்பில் உருவாகியுள்ள ‘சிங்காரம்’, நகைச்சுவையும் உணர்வுகளும் நிறைந்த ஒரு சுவாரஸ்யமான திரையரங்க அனுபவத்தை வழங்கத் தயாராகி வருகிறது.

நடிகர்கள் :
யோகி பாபு, வேல ராமமூர்த்தி, எம்.எஸ். பாஸ்கர், மரியா வின்சென்ட், சார்ம்ஸ், ஆர்த்தி கணேஷ், மனோபாலா, கல்கி, மாரிமுத்து, படவா கோபி, சென்ட்ராயன், டி.எஸ்.ஆர்., தீபா சங்கர், சபிதா ராய், ஜாவா சுந்தரேசன், கே.எம். கணேஷ்கர் மற்றும் பலர்.

தொழில்நுட்பக் கலைஞர்கள்:

இயக்கம் : கே.வி. கதிர்வேலு
தயாரிப்பாளர்கள்:ஏ.எஸ். ரமண பாலாஜி, பத்மாவதி காந்தி
தயாரிப்பு நிறுவனம்:  ராக் புரொடக்ஷன்
இசை: சாம் சி.எஸ்.
ஒளிப்பதிவு: பிரசன்னா எஸ். குமார்
படத்தொகுப்பு: லாரன்ஸ் கிஷோர்
கலை இயக்கம்: குருராஜ்
மக்கள் தொடர்பு: ரியாஸ் K அஹ்மத், பாரஸ் ரியாஸ்

Previous Post

சிட்லிங்கியின் மருத்துவப் புரட்சியைப் பதிவு செய்யும் ஆவணப்படம் ‘தி வேலி ஆஃப் ஹெல்த்’!

Next Post

லண்டனில் படமாக்கப்பட்ட ‘பூக்கி பொன்னம்மா’ ஆல்பம் பாடல் வெளியீட்டு விழா!

Next Post

லண்டனில் படமாக்கப்பட்ட ‘பூக்கி பொன்னம்மா’ ஆல்பம் பாடல் வெளியீட்டு விழா!

Popular News

  • பேசத் தயங்கும் விஷயங்களின் மவுனத்தை உடைக்கும் மலேசிய தமிழ் க்ரைம் த்ரில்லர் ‘இரும்புத் தோட்டம் ; விரைவில் தமிழகமெங்கும் ரிலீஸ்’!

    0 shares
    Share 0 Tweet 0
  • காதல் மற்றும் உறவுகளின் உணர்வுப்பூர்வமான கொண்டாட்டமாக வெளியான ‘ஹைக்கூ’ திரைப்படம் நவம்பர் 20 அன்று நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது!

    0 shares
    Share 0 Tweet 0
  • டி பி சி (TPC) ட்ரீம் ஹவுஸ் நிறுவனத்தின் பிரம்மாண்டத் தயாரிப்பில், சிம்புதேவன் இயக்கத்தில், விமல் நடிக்கும் காமெடி-ஆக்‌ஷன் -ஃபேண்டஸி திரைப்படம் ‘நவோரியா’ டிசம்பர் வெளியீடு

    0 shares
    Share 0 Tweet 0
  • “கனவுகள், விடாமுயற்சி, சொந்த ஊரை விட்டு வெளியேறி வாழும் தமிழ் இளைஞர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் என அனைத்தையும் பேசும் கதைதான் ‘பீட்சா பாய்ஸ்’”…இயக்குநர் சேகர் கேசவ் சிரின்!

    0 shares
    Share 0 Tweet 0
  • சத்தியவான் சாவித்திரி – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

“‘டெத் இரயில்வே பக்கா கமர்ஷியல் படம்”…’யாத்திசை’ இயக்குநர் தரணி ராசேந்திரன்!

November 22, 2026

ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன் தன் மகள் அல்லு அர்ஹாவுக்கு சொன்ன நெகிழ்ச்சியான பிறந்தநாள் வாழ்த்து!

November 22, 2026

உலக மீனவர் தினத்தை முன்னிட்டு ‘தமிழினி’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

November 22, 2026

‘டெலிவரி பாய்’ திரைப்பட முன் வெளியீட்டு விழா !!

November 22, 2026

பிரைம் ஷோ என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், Vi. ஆனந்தின் கற்பனையில், நடிகர் பஞ்ச வைஷ்ணவ் தேஜ் நடிக்கும் ‘ஹனுமேன் 2: தி ரைஸ் ஆஃப் வானராஸ்’ (HanuMan 2: The Rise of Vanaras) – டைட்டில் போஸ்டர் வெளியீடு!

November 22, 2026

ஆகாயத்தில் ஒரு தாரகை (AOT) – விமர்சனம்

November 22, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.