• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா விமர்சனம்

சத்தியவான் சாவித்திரி – விமர்சனம்

by Tamil2daynews
November 22, 2026
in விமர்சனம்
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
சத்தியவான் சாவித்திரி – விமர்சனம் 

இயக்குனர் மிஷ்கின் நடிகை கீர்த்தி சுரேஷ் பால சரவணன் ஆகியோர் நடித்து வெளிவந்திருக்கும் படம் சத்தியவான் சாவித்திரி பல எதிர்பாராத திருப்பங்களுடன் திரைக்கதை அமைத்திருப்பது இயக்குனருக்கு மிகப்பெரிய பலம்.

வழக்கறிஞர் சாவித்திரிக்கும்( கீர்த்தி சுரேஷ்), தீபக்கிற்கும் (சாருகேஷ்) பெரியவர்கள் பார்த்து திருமணம் செய்து வைக்கிறார்கள். சாவித்திரிக்கு திருமணத்தில் விருப்பம் இல்லை. இருந்தாலும் வேறு வழியில்லாமல் ஒப்புக் கொள்கிறார். மூத்த வழக்கறிஞர் மார்கண்டேயன்(மிஷ்கின்) ஒரு வழக்கில் கூட தோல்வி அடைந்தது கிடையாது. அவரிடம் உதவியாளராக சேர்ந்து தொழில் கற்றுக் கொள்கிறார் சாவித்திரி.

இந்நிலையில் மார்கண்டேயனுக்கு எதிராக ஒரு வழக்கில் ஆஜராகி வெற்றியும் பெற்றுவிடுகிறார். இது சீனியரான மார்கண்டேயனை கோபம் அடைய செய்கிறது. இந்நிலையில் கொலை வழக்கில் கைது செய்யப்படுகிறார் தீபக். என் கணவர் குற்றமற்றவர், நான் அவரை காப்பாற்றாமல் ஓய மாட்டேன் என்று கொலை வழக்கில் தீபக் சார்பில் வாதாடுகிறார் சாவித்திரி.
அனல் பறக்கும் கோர்ட் ரூம் டிராமா? - 'சத்தியவான் சாவித்திரி' விமர்சனம்

இது அவருக்கு ரொம்ப பர்சனலான வழக்கு ஆகும். அந்த வழக்கில் அரசு தரப்பில் மார்கண்டேயன் வாதாடுகிறார். ஏற்கனவே தன் ஜூனியரிடம் தோல்வி அடைந்த கோபத்தில் உள்ள அவர் இந்த வழக்கில் எப்படியும் வெற்றி பெற வேண்டும் என்கிற முனைப்போடு இருக்கிறார். மார்கண்டேயனுக்கு இது பழி வாங்கி பெயரை காப்பாற்றிக்கொள்ளும் வழக்கு. சாவித்திரிக்கோ வாழ்க்கை. வெற்றிக்காக எதையும் செய்ய தயாராக இருக்கும் மார்கண்டேயனை மீண்டும் தோற்கடித்து கணவரை காப்பாற்றுவாரா சாவித்திரி என்பதை அழகாக காட்டியிருக்கிறார் இயக்குநர் பிரவீன் எஸ். விஜய்.

கோர்ட்ரூம் டிராமாவான சத்தியவான் சாவித்திரி படத்தை ஆரம்பத்தில் இருந்து கடைசி வரை பரபரப்பாக கொண்டு செல்வதில் அதிக கவனம் செலுத்தியிருக்கிறார் பிரவீன். அதனால் லாஜிக் எல்லாம் பார்க்கக் கூடாது. எனவே, லாஜிக் பார்க்கும் ஆட்களாக இருந்தால் அந்த நீதிமன்றத்தில் நடக்கும் விஷயங்கள் உங்களை திருப்தி படுத்தாது.

கிளைமாக்ஸில் வியக்க வைத்திருக்கிறார் இயக்குநர். படத்தில் குறைகள் இல்லாமல் இல்லை. ஆனால் அதை மறக்கச் செய்யும் வகையில் இருக்கிறது கீர்த்தி சுரேஷ், மிஷ்கின் நடிப்பு. படத்தில் வரும் டுவிஸ்ட் எதிர்பாராதது தான் என்றாலும், நம்பும்படியாக இருக்கிறது. தன் நடிப்பால் மிரட்டியிருக்கிறார் கீர்த்தி சுரேஷ். திரையில் கீர்த்தி தெரியவில்லை கணவருக்காக போராடும் சாவித்திரி மட்டும் தான் தெரிந்தார்.

வில்லத்தனமான நடிப்பால் பாராட்டுகளை பெற்றிருக்கிறார் மிஷ்கின். படம் சீரியஸாகும் நேரத்தில் ஒன் லைனர்களால் சிரிக்க வைக்கிறார் ஜூனியர் வழக்கறிஞராக நடித்திருக்கும் பால சரவணன். இசைஞானி இளையராஜாவின் காப்பீட்டு உரிமை பற்றி வசனம் வரும்போது தியேட்டர்களில் விசில் பறக்கிறது. கீர்த்தி சுரேஷின் கணவராக சிறப்பாக நடித்திருக்கிறார் சாருகேஷ். தீபக் கதாபாத்திரத்திற்கு நல்ல தேர்வு அவர்.
சத்தியவான் சாவித்திரி- திரை விமர்சனம்- Sathyavan Savithri Movie Reviewபுதுமுக இயக்குநர் பிரவீன் எஸ். விஜய் தன் முதல் படத்திலேயே தன்னை பற்றி பேச வைத்திருக்கிறார். சாம் சி.எஸ். இசை சத்தியவான் சாவித்திரிக்கு உதவி செய்திருக்கிறது. தலைப்பிலேயே கதையை சொல்லி அதை விறுவிறுப்பாக எடுத்துச் சென்று ரசிகர்களின் ஒட்டு மொத்த கவனத்தையும் ஈர்த்துவிட்டார் பிரவீன். கீர்த்தி சுரேஷ் மீண்டும் ஏதோ சீரியஸான கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம் என பேசப்பட்ட நிலையில் அது நல்ல கதாபாத்திரமாக அமைந்திருக்கிறது.

கீர்த்தி சுரேஷின் கெரியரில் முக்கியமான படங்களில் ஒன்று சத்தியவான் சாவித்திரி என்று தாராளமாக சொல்லலாம். படத்திற்கு படம் வித்தியாசம் காட்டுவதுடன் அவரின் நடிப்பும் தொடர்ந்து மேம்பட்டுக் கொண்டிருக்கிறது.

மொத்தத்தில் இந்த சத்தியவான் சாவித்திரி தலைப்பைப் போலவே தலை நிமிர்ந்து நிற்கும்
Previous Post

‘தேனிசைத் தென்றல்’ தேவாவின் குரலில் இறுதியாக உருவான ‘ஜெயில் மேட்ஸ்’ படத்தின் முதல் பாடலான ‘வா சிவா’ வெளியீடு!

Next Post

ஓம் – விமர்சனம்

Next Post

ஓம் - விமர்சனம்

Popular News

  • பக்கத்து வீட்டுக்காரர்களே துப்பறிவாளர்களாக மாறினால் என்ன நடக்கும்? விஜய் சேதுபதி வெளியிட்ட ‘ஆக்டோபஸ்’ வெப் தொடரின் டிரெய்லர் – நவம்பர் 27 முதல் ZEE5-ல் ஸ்ட்ரீமிங்!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஜி.வி. பிரகாஷ் குமார் நடிக்கும் ‘அன்புடன் மகி’ – இறுதிக்கட்டப் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெறுகிறது! 2027-ம் ஆண்டின் தொடக்கத்தில் வெளியீடு!

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழில் அடுத்தடுத்து இரண்டு படைப்புகள்… அசுர வளர்ச்சியில் கல்ட் டிஜிட்டல்

    0 shares
    Share 0 Tweet 0
  • நடிகர் இனிகோ பிரபாகர் நடிக்கும் ‘மின்னும் ஓர் இரவு’ படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீடு!

    0 shares
    Share 0 Tweet 0
  • துல்கர் சல்மானின் ‘ஆகாயத்தில் ஒரு தாரகை’ (AOT) திரைப்படம் – சென்னையில் நடைபெற்ற தமிழ் பத்திரிகையாளர் சந்திப்பு!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

“‘டெத் இரயில்வே பக்கா கமர்ஷியல் படம்”…’யாத்திசை’ இயக்குநர் தரணி ராசேந்திரன்!

November 22, 2026

ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன் தன் மகள் அல்லு அர்ஹாவுக்கு சொன்ன நெகிழ்ச்சியான பிறந்தநாள் வாழ்த்து!

November 22, 2026

உலக மீனவர் தினத்தை முன்னிட்டு ‘தமிழினி’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

November 22, 2026

‘டெலிவரி பாய்’ திரைப்பட முன் வெளியீட்டு விழா !!

November 22, 2026

பிரைம் ஷோ என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், Vi. ஆனந்தின் கற்பனையில், நடிகர் பஞ்ச வைஷ்ணவ் தேஜ் நடிக்கும் ‘ஹனுமேன் 2: தி ரைஸ் ஆஃப் வானராஸ்’ (HanuMan 2: The Rise of Vanaras) – டைட்டில் போஸ்டர் வெளியீடு!

November 22, 2026

ஆகாயத்தில் ஒரு தாரகை (AOT) – விமர்சனம்

November 22, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.