• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

சாருஹாசனுக்கு ‘வாழ்நாள் சாதனையாளர் விருது’ – இயக்குனர் ‘விஜய்ஸ்ரீ ஜி’ நன்றி

by Tamil2daynews
December 16, 2019
in சினிமா செய்திகள்
0
சாருஹாசனுக்கு ‘வாழ்நாள் சாதனையாளர் விருது’ – இயக்குனர் ‘விஜய்ஸ்ரீ ஜி’ நன்றி
0
SHARES
42
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

நடிகர் சாருஹாசனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது கிடைத்திருப்பது குறித்து, இயக்குனர் விஜய்ஸ்ரீ ஜி கூறியதாவது: “மூத்த திரைப்பட நடிகர் சாருஹாசனுக்கு ‘வாழ்நாள் சாதனையாளர் விருது’ வழங்கி கௌரவித்த சென்னை சர்வதேச திரைப்பட விழா குழுவினருக்கும், செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறை அமைச்சர் திரு. கடம்பூர் ராஜூ அவர்களுக்கும், துறை சார்ந்த இதர இயக்குனர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.”

கடந்த 2016 ஆம் ஆண்டு, நானும் எனது மக்கள் தொடர்பாளர் திரு நிகில் முருகனும் நடிகர் சாருஹாசனை சந்தித்துப் பேசினோம். அப்போது அவர், தனக்கு உடல் நலம் சரியில்லை என்றும், ஓய்வில் இருப்பதாகவும் கூறினார். மேலும், தனக்கு இரண்டு பைபாஸ் அறுவை சிகிச்சையும், விபத்தின் காரணமாக கால்களில் ஏற்பட்ட காயம் காரணமாக, இரும்பு பெல்ட் வைத்திருப்பதாகவும், ஆகையால், தன்னால் ஊன்றுக்கோலின்றி நடக்க இயலவில்லை எனவும் பல காணொளிகளில் ஏற்கெனவே தெரிவித்திருந்தபடி எங்களிடமும் தெரிவித்தார்.

இந்த சூழலில், ஒரு தேசிய விருது பெற்ற நடிகரான நீங்கள் தொடர்ந்து நடிக்க வேண்டும் என்று நான் மட்டுமல்ல, என்னைப் போலவே பல இயக்குனர்கள் ஆசைப்படுகிறார்கள் என்பதை அவரிடம் வலியுறுத்தி பேசிவிட்டு, அவருக்கெனவே, அவரது உடல்நிலையை கருத்தில் கொண்டு, ஒரு கதைகளம் அமைத்திருக்கிறேன் என்று ‘தாதா 87’ கதை அவரிடம் கூறினேன். கதை அவருக்கு பிடித்திருக்க, உற்சாகமாக நடித்துக் கொடுத்தார்.

தற்போது, அவர் 3 தெலுங்கு மற்றும் 2 மலையாள படங்களில் நடித்து வருகிறார் என்பதிலும், அதற்கு நானும் ஒரு காரணம் என அவர் பல்வேறு காணொளிகளில் குறிப்பிட்டு பேசி வருவதையும் கண்டு மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். சாருஹாசனைப் போன்ற சிறந்த மூத்த நடிகர்கள், நடிக்காமல் ஒதுங்கி இருக்கிறார்கள். நாம்தான் இத்தகைய சிறந்த கலைஞர்களை அடையாளம் கண்டு, தொடர்ந்து நடிக்க வைக்க வேண்டும்.

2016 ஆம் ஆண்டு முதன்முதலாக தாதா 87 படத்துக்காக, சாருஹாசன் அவர்களை முதன்முதலாக சந்தித்தது துவங்கி, அவருக்கு ‘வாழ்நாள் சாதனையாளர் விருது’ கிடைத்திருக்கும் இந்த தருணம் வரையில், அனைத்து நேரத்திலும் எனக்கு உறுதுணையாக இருந்துவரும் திரு. நிகில் முருகன், ‘தாதா 87’ படத்தின் தயாரிப்பாளர், படக்குழுவினர் அனைவருடனும் எனது மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வதுடன், எனது மனமார்ந்த நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் இயக்குனர் விஜய்ஸ்ரீ ஜி.

Tags: Chaaru HassanDha DhaTamilVijay Sri
Previous Post

எனது விளக்கத்தை ஏற்றுக்கொண்ட திரு.கமல் ஹாசன் அவர்கள் என்னை அன்புடன் நலம் விசாரித்து வழியனுப்பினார்.

Next Post

எனது அடுத்த படங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பம்ச தொழிற்நுட்பங்களுடன் வெளியிட முயற்சி செய்வேன்- இயக்குனர் பா இரஞ்சித்

Next Post
எனது அடுத்த படங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பம்ச தொழிற்நுட்பங்களுடன் வெளியிட முயற்சி செய்வேன்- இயக்குனர் பா இரஞ்சித்

எனது அடுத்த படங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பம்ச தொழிற்நுட்பங்களுடன் வெளியிட முயற்சி செய்வேன்- இயக்குனர் பா இரஞ்சித்

Popular News

  • பாபுஜி புரொடக்ஷன்ஸ் அபிஜித் பாபுஜி தயாரிப்பில் வர்ஷா வாசுதேவ் இயக்கத்தில் இந்திரன்ஸ், மதுபாலா, அபர்ணா பாலமுரளி நடிப்பில் மனித உணர்வுகளை பேசும் ‘சின்ன சின்ன ஆசை’

    0 shares
    Share 0 Tweet 0
  • அல்புகெர்கி ரெக்கார்ட்ஸ் மற்றும் யுனிவர்சல் மியூசிக் இந்தியா கூட்டணியின் முதல் வெளியீடான ‘அரவிந்த்’ மூலம் ராக்ஸ்டார் அனிருத் புதிய அத்தியாயத்தைத் தொடங்குகிறார்!

    0 shares
    Share 0 Tweet 0
  • பாக்ஸ் ஆபீஸ் வசூலில் புதிய சரித்திரம் படைத்த ‘தந்தை’ சிரஞ்சீவி – ‘மகன்’ ராம்சரண்

    0 shares
    Share 0 Tweet 0
  • அனந்த பத்மநாப சுவாமி ரதயாத்திரையுடன் தொடங்கிய ‘நாகபந்தம்’ புரமோஷன்

    0 shares
    Share 0 Tweet 0
  • வள்ளுவன் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

பாக்ஸ் ஆபீஸ் வசூலில் புதிய சரித்திரம் படைத்த ‘தந்தை’ சிரஞ்சீவி – ‘மகன்’ ராம்சரண்

June 16, 2026

நடிகர் அல்லு அர்ஜூனின் ’AA23’ திரைப்படத்தின் தீம் இசையை பயன்படுத்திய பிரதமர் நரேந்திர மோடி!

June 16, 2026

‘லவ் ஓ லவ்’ டீசர் வெளியீட்டு விழா : காதல், கலாட்டா, காமெடி… ரசிகர்களை கவரும் ‘லவ் ஓ லவ்’ டீசர்!

June 16, 2026

நடிகர் அஜய் கார்த்தி நடிக்கும் ‘டார்க்’ படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா

June 16, 2026

அல்புகெர்கி ரெக்கார்ட்ஸ் மற்றும் யுனிவர்சல் மியூசிக் இந்தியா கூட்டணியின் முதல் வெளியீடான ‘அரவிந்த்’ மூலம் ராக்ஸ்டார் அனிருத் புதிய அத்தியாயத்தைத் தொடங்குகிறார்!

June 16, 2026

ஜூலை 2 முதல் நெட்ஃப்ளிக்ஸில் ப்ரீமியர் ஆகும் சூப்பர் சுப்பு’!

June 16, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.