• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

‘தி டார்க் ஹெவன்’ திரைப்பட வெளியீட்டுக்கு முந்தைய அறிமுக விழா!

by Tamil2daynews
September 14, 2026
in சினிமா செய்திகள்
0
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

‘தி டார்க் ஹெவன்’ திரைப்பட வெளியீட்டுக்கு முந்தைய அறிமுக விழா!

 

நாட்டார் கதையை மையமாக வைத்து ஒரு முழு நீள சஸ்பென்ஸ் க்ரைம் த்ரில்லராக உருவாகி இருக்கும் திரைப்படம் ‘தி டார்க் ஹெவன்’ . இப்படத்தை பாலாஜி இயக்கி உள்ளார்.இவர் ஏற்கெனவே ‘D3’ என்ற படத்தை இயக்கியவர்.அவர் இயக்கியிருக்கும் இரண்டாவது படமான இந்த ‘தி டார்க் ஹெவன்’ படத்தில் பிக்பாஸ் புகழ் நட்சத்திரங்கள் சித்து, தர்ஷிகா , ரித்விகா ஆகியோருடன் , வேல ராமமூர்த்தி, நிழல்கள் ரவி, ஜெயக்குமார், அருள் டி சங்கர், சத்தியா, சாப்ளின் பாலு, கோபால் மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஒளிப்பதிவு: மணிகண்டன் பிகே,படத்தொகுப்பு : ராஜா ஆறுமுகம், இசை: சக்தி பாலாஜி, பாடல் வரிகள்: லாவர்தன். கோதை என்டர்டெயின்மென்ட் மற்றும் எம்எஸ் ஸ்விஸ் ஃபிலிம் ஃபேக்டரி தயாரித்துள்ளன.

கொலையும் கொலை சார்ந்த ஒரு துப்பறியும் கதையாக உருவாகி இருக்கும் இதன் படப்பிடிப்பு திருநெல்வேலி ,ராமநாதபுரம், குற்றாலம் ,முக்கூடல்,தென்காசி போன்ற பகுதிகளில் இதுவரை கேமரா வெளிச்சம் படாத இடங்களில் தேடிப் பிடித்துப் படப்பிடிப்பு செய்துள்ளார்கள்.

செப்டம்பர் 18ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் வெளியாகிற இப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய அறிமுக விழா சென்னை சாலிகிராமம் பிரசாத் லேப் அரங்கில் நடைபெற்றது.

அறிமுக விழாவில் இசையமைப்பாளர் சக்தி பாலாஜி பேசும்போது,
“நான் ஏற்கெனவே ’உடன்பால்’, ’ஜாக்கி ’ படங்களுக்கு இசையமைத்து இருக்கிறேன். க்ரைம் திரில்லர் படத்திற்கு இசையமைத்தது இதுதான் முதல் முறை. இயக்குநர் பாலாஜி முதலில் அப்படிச் சொன்ன இந்தக்கதை எனக்குப் பிடித்திருந்தது. அவர் சொன்ன ஒன்லைன் மிகவும் சுவாரஸ்யமானது. அதேபோல படத்தை எடுத்திருக்கிறார்.இந்தப் படத்திற்கு இசையமைத்தது மறக்க முடியாத அனுபவம்.படத்தில் நடித்திருக்கும் சித்து, ரித்விகா, தர்ஷிகா எல்லோரும் நன்றாக நடித்திருக்கிறார்கள். படத்தின் காட்சிகளை மிகச் சிறப்பாக எடுத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் மணி .ஒரு பெரிய படத்திற்குரிய திரையரங்கு அனுபவத்தை இந்தப் படம் கொடுக்கும். அனைவரும் திரையரங்கில் வந்து படத்தைப் பார்க்க வேண்டும் ஆதரிக்க வேண்டும் “என்றார்.
ஒளிப்பதிவாளர் மணிகண்டன் பிகே பேசும்போது,

” நான் இயக்குநர் பாலாஜியுடன் ஏற்கெனவே ’டி3 ’ படத்தில் பணியாற்றியிருக்கிறேன். இது அவருடன் பணியாற்றும் இரண்டாவது படம் .வழக்கமாக மலைப் பிரதேசங்களில் அழகான இடங்களில் படிப்பு நடத்துவது என்பது வேறு. மர்மமும் திகிலும் நிறைந்த ஒரு கதைக்கு அதே இடங்களில் படப்பிடிப்பு நடத்துவது என்பது வேறு. கிரைம் திரில்லர் படங்களுக்கு இயற்கை அழகோடு மர்மமும் திகிலும் நிறைந்து காணப்படும் இடங்களாக இருக்க வேண்டும். அப்படி அழகும் மர்மமும் இணைந்த இடங்களைத் தேடி தேடிக் கண்டுபிடித்து இயக்குநர் படப்பிடிப்பு நடத்தினார். நாங்களும் அப்படிக் காடு,மலை என்று சிரமப்பட்டு சென்று படமாக்கினோம்.வாகனங்கள் செல்ல முடியாத இடங்களுக்கெல்லாம் நீண்ட தூரம் படப்பிடிப்புக் கருவிகளைச் சுமந்து கொண்டு சென்று படப்பிடிப்பு நடத்தினோம்.அந்த சிரமங்கள் எல்லாம் காட்சிகளைப் பார்த்துவிட்டு மற்றவர்கள் பாராட்டும் போது இப்போது தெரிவதில்லை” என்றார்.

படத்தில் நடித்துள்ள பிக் பாஸ் புகழ் தர்ஷிகா பேசும்போது,

” ’தி டார்க் ஹெவன்’ எனது முதல் படம். பொதுவாக எனக்கு த்ரில்லர் படங்கள் என்றால் மிகவும் பிடிக்கும். அனைவரும் விரும்பிப் பார்க்கும் படங்களாக இருக்கக்கூடியவை த்ரில்லர் படங்கள்தான்.அப்படி ஒரு படமாக இந்த ’தி டார்க் ஹெவன்’ இருக்கும் என்று நான் நம்புகிறேன். இந்தப் படத்தில் ஒளிப்பதிவு, இசை எல்லாம் சிறப்பாக உள்ளன. நடித்திருக்கும் கலைஞர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் படத்திற்காகக் கடினமாக உழைத்திருக்கிறார்கள். கண்டிப்பாக செப்டம்பர் 18ஆம் தேதி திரையரங்கில் சென்று இந்தப் படத்தை பார்த்து ஆதரியுங்கள்.உங்களது நேர்மையான விமர்சனங்களைக் கூறுங்கள் “என்றார்.

நடிகை ரித்விகா பேசும்போது,

“பெரிய படங்களின் வெளியீடுகள் காரணமாக இந்தப் படத்தின் வெளியீட்டுத் தேதி மாறிமாறிப் போய்க்கொண்டிருந்தது. இப்போது செப்டம்பர் 18 அன்று உறுதியாக திரையரங்குகளில் வெளியாகிறது. நிறைய த்ரில்லர் படங்கள் வருகின்றன. போலீஸ்காரர், முகமூடி மனிதர், இன்வெஸ்டிகேஷன் என்று எல்லாம் ஒரே மாதிரியான தோற்றத்திலேயே இருக்கும். ஆனால் இது கண்டிப்பாக அப்படி இருக்காது. வித்தியாசமான திரையரங்க அனுபவத்தை தரும் படமாக இது இருக்கும்.

ஏற்கெனவே எடுத்த படத்தை அப்படியே வைத்துவிட்டு மீண்டும் படம் எடுப்பது என்பது இரட்டை உழைப்பைப் போட வேண்டிய நிலை.கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். அப்படி இந்தப் படத்திற்காக படக்குழுவினர் அனைவரும் இருமடங்கு உழைத்து இருக்கிறார்கள். சவாலான இடங்களில் படப்பிடிப்பு நடத்தியிருக்கிறார்கள். ஒரே ஒரு ஷாட்டுக்காகக் கூட மூன்று மணி நேரம் நான்கு மணி நேரம் சென்று காத்திருந்து எடுத்திருக்கிறார் இயக்குநர். தொழில்நுட்ப ரீதியாகவும் நன்றாக உழைத்து இருக்கிறார்கள்.

நாங்கள் நடிப்புக் கலைஞர்கள் ஒருமுறை நடித்தால் அவர்கள் இரண்டு மடங்கு உழைத்தார்கள்.இந்தப் படம் நிச்சயமாக திரையரங்கில் ஒரு திருப்தியான அனுபவத்தைத் தரக்கூடியதாக இருக்கும்.

படங்கள் திரையரங்குப் படங்கள், ஓடிடி படங்கள் என்று இரண்டு பிரிவாகப் பார்க்கப்படுகின்றன. எல்லாப் படங்களையும் திரையரங்கில் சென்று பார்க்க வேண்டும்.திரையரங்குக்கு வந்த பிறகு ஓடிடியில் வந்தால் மட்டும் அப்போது பார்க்கலாம் .அதுவரை திரையரங்கில் பார்ப்பது தான் நல்ல அனுபவத்தைத் தரக்கூடியதாக இருக்கும்.’தி டார்க் ஹெவன்’ கண்டிப்பாக நல்ல திரையரங்கு அனுபவத்தை தரும். நம்பி வரலாம். ஏமாற்றாது” என்றார்.

படத்தின் இயக்குநர் பாலாஜி பேசும்போது,

“ஒரு படத்தைப் பாதிக்கு மேல் எடுத்து முடித்து அப்படியே வைத்து விட்டு பிறகு ஆரம்பிப்பது என்பது மிகவும் சவாலான ஒரு விஷயம். மீண்டும் இந்தப் படத்தைத் தொடங்கி முடித்து இன்று நான் உங்கள் முன் நிற்பது சாதாரண விஷயம் அல்ல. அதற்கு உதவி செய்தவர்களை மறக்க முடியாது. அப்படி மூன்று பேருக்கு நான் நன்றி கூற வேண்டும்.ஒரு படத்தை எடுத்து முடித்துவிட்டு என்ன செய்வது என்று நான் தடுமாறிக் கொண்டிருந்த போது மீண்டும் எடுக்கும் போது எனக்கு மிகவும் உதவிகரமாக இருந்தது சரண் ,கோபால் சார், மற்றும் எனது படக்குழுவினர்.இந்த மூவரும் இல்லை என்றால் இந்தப் படம் எடுத்து இருக்கவே முடியாது.அவர்களுக்கு நான் முதலில் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு படத்தை முக்கால்வாசி எடுத்துவிட்டு மீண்டும் அதே படத்தை மறுபடியும் எடுப்பது என்பது மன ரீதியாக மிகவும் அழுத்தம் தரக்கூடிய தொந்தரவு தரக்கூடிய ஒரு விஷயம். அதைத் தொடர்ந்து கொண்டு செல்வது என்பது சிரமமாகத்தான் இருக்கும்.அப்படி இருந்த எனது நெருக்கடியான சூழலில் சித்து சார் என்னிடம் நடந்து கொண்ட விதம் எனக்கு அவர் மீது பெரிய மரியாதையை ஏற்படுத்தியது. அவர் கடந்த காலத்தைப் பற்றி எதுவும் நினைக்காமல் இந்தப் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார்.கடந்த காலத்தைப் பற்றி அவர் எதுவுமே கேட்கவில்லை.அது அவரிடம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இன்று வரை சுதந்திரமாக பணியாற்றுவதற்கு அது ஒரு பெரிய காரணம்.அதற்கு அவருக்கு மிகவும் நன்றி.

அதேபோல இரண்டாவது முறை ஆரம்பித்தபோது பழையதைப் பற்றியும் கடந்த காலத்தைப் பற்றியும் யாருமே பேசவில்லை; கேட்கவில்லை .இந்தப் படத்தை எப்படிக் கொண்டு செல்வது என்பதில் தான் அனைவரது கவனமும் இருந்தது .அதற்கு அனைவருக்கும் நன்றி.அப்படியே படத்தை முடிக்கவும் செய்தோம்.துணை நிற்பவர்கள் சரியாக இருந்தால் நாம் போய்ச் சேர வேண்டிய இடம் சரியாக அமையும் என்பதற்கு இந்தப் படமே ஒரு சாட்சி. அவர்களே எனது பாடம்.அவர்கள் கொடுத்த ஊக்கத்தால்தான் பெரிய அளவில் இந்தப் படத்தை எடுத்துக் கொண்டு சென்றோம்.

இந்த படத்திற்காக அனைவரும் சிரமப்பட்டோம். சிரமங்களில் நான் பெரிதாக நினைப்பது என்னவென்றால் தூக்கம் இல்லாமல் உழைப்பது என்பதைத்தான்.மூன்று மணி நேரம் கூடத் தூங்க முடியாமல் சில நேரம் உழைத்து இருக்கிறோம். அப்போது தூக்கம் இல்லாத அந்த உடல் ரீதியான பிரச்சினை எங்களுக்குப் பெரும் சவாலாக இருந்தது. அந்தத் தொந்தரவிலிருந்து மீள்வது பெரும் போராட்டமாக இருந்தது.அதிலிருந்து மீள்வதற்கு நாங்கள்  நீண்ட நாள்கள் மிகவும் சிரமப்பட்டோம்.எனது படத்தில் நடித்திருக்கும் சித்து, ரித்விகா, தர்ஷிகா என அனைவருமே நன்றாக நடித்தார்கள் .அதுமட்டுமல்லாமல் அவர்களோடு அனுபவமுள்ள பெரிய நட்சத்திரங்களும் நடித்து இருக்கிறார்கள். வேல ராமமூர்த்தி சார் , நிழல்கள் ரவி சார் , ஜெயக்குமார் சார் போன்ற அனுபவம் உள்ள நட்சத்திரங்களும் நடித்திருக்கிறார்கள். அவர்கள் படப்பிடிப்பில் இருந்ததால் இன்று வர முடியவில்லை.

மிகவும் முக்கியமான விஷயம் இது ஒரு நாட்டார் கதையை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கும் த்ரில்லர் படம் என்பதுதான்.டீஸர்,டிரெய்லர் எல்லாம் பார்த்து விட்டு அனைவரும் நன்றாக இருக்கிறது என்று சொன்னார்கள் என்றால் அதற்கு ஒளிப்பதிவாளர் மணிகண்டனுக்குத்தான் நான் நன்றி சொல்ல வேண்டும். எங்கள் இருவருக்கும் சின்ன சின்ன வாக்குவாதங்கள் வரும். அது படைப்பு நன்றாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தானே தவிர தனிப்பட்ட முறையில் அல்ல. எங்களது மனஸ்தாபங்கள் எல்லாம் பேக் அப் சொல்வதற்குள் காணாமல் போய்விடும்.அவர் நல்ல திறமைசாலி .அவர் பெரிய இடத்துக்கு வருவார். எனது இதயத்தில் இருந்து இதை நான் கூறுகிறேன். இந்தப் படத்தில் ரித்விகா வருவதற்கு முன்பு இந்த படத்தின் தரம் வேறு மாதிரி இருந்தது. வந்த பிறகு அது வேறு மாதிரியான உயரத்துக்குச் சென்றது. முக்கியமாக இந்தப் படத்தில் வரும் நான்கு பாத்திரங்களைப் பெரிதாக நம்பிக் கொண்டிருக்கிறேன் . பாரி,உமையாள், கனி இன்னொரு பாத்திரம் என இந்த நான்கையும் பிரதானமாக வைத்து நான் உருவாக்கி இருக்கிறேன். ரித்விகா ஏற்றுள்ள பாத்திரம் இந்தப் படத்திற்குப் பிறகு பேசக்கூடியதாக இருக்கும் என்று நம்பிக்கை எனக்கு இருக்கிறது. இந்தப் படத்திற்குப் பிறகு அவரிடம் இதைக் கேட்பார்கள்.இவர்கள் எல்லாம் இல்லை என்றால் இந்தப் படம் இந்த நிலைக்கு இன்று வந்து இருக்காது என்பதை நான் உறுதியாகச் சொல்வேன். அனைவருக்கும் மிக்க நன்றி. செப்டம்பர் 18ஆம் தேதி இந்தப் படம் திரையரங்கில் வெளியாகிறது. நல்லதொரு திரையரங்க அனுபவமாக நிச்சயமாக இந்தப் படம் இருக்கும் .படத்தைப் பார்த்து விட்டு உங்கள் உங்கள் நேர்மையான விமர்சனங்களைச் சொல்லுங்கள் .நல்லதைக் கேட்டுக்கொள்கிறோம். கேட்டதை மாற்றிக் கொள்கிறோம். நன்றி” என்றார்.

கதை நாயகன் சித்து பேசும்போது,

“இதே சாலிகிராமத்தில் பல்வேறு சினிமா கம்பெனி அலுவலகங்களுக்கு நான் சென்றிருக்கிறேன்.இதே பிரசாத் லேபில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு நான் வந்திருக்கிறேன். நான் சினிமாவில் சின்னச் சின்ன வேடங்களில் தோன்றியிருந்தாலும் இது எனக்கு முதல் படம். இதையே நான் ஒரு சாதனையாகப் பார்க்கிறேன் .அதுவும் காவல்துறை கதாபாத்திரத்தில் நடித்திருப்பது மகிழ்ச்சி.முதல் படத்திலேயே காவல்துறை கதாபாத்திரம் என்பது அனைவருக்கும் கிடைத்து விடாது; எனக்குக் கிடைத்திருக்கிறது. இதற்காக இயக்குநர் பாலாஜிக்கு நான் நன்றி சொல்ல வேண்டும்.அவர் என்னை அழைத்து இந்தக் கதையைச் சொல்லி நீங்கள் செய்தால் நன்றாக இருக்கும் என்று கேட்டார் .அது ஒரு த்ரில்லர் கதையாக இருந்தது.எல்லா கதாநாயக நடிகர்களுக்கும் காவல்துறை சம்பந்தப்பட்ட ’காப் ஸ்டோரி ’ என்று ஒன்று கிடைப்பது அரிதாக இருக்கும் .எனக்கு முதல் படத்திற்கு அப்படிப்பட்ட ஒரு கதையாகக் கிடைத்தது மகிழ்ச்சியாக உள்ளது .அதுவும் காவல் துறை சம்பந்தப்பட்ட திரில்லர் கதை என்று அமைந்திருப்பது எனக்கு ஒரு அதிர்ஷ்டம் என்று சொல்ல வேண்டும் .நான் கதாநாயகனாக நடிக்கும்போது அதுவும் த்ரில்லர் படத்தில் நடிப்பது பல பரிமாணங்களைக் காட்டுவதற்கு வாய்ப்பாக இருக்கும் .அப்படிப்பட்ட படம் முதல் படமாக வந்திருப்பது மகிழ்ச்சியாக இருந்தது. அதனால் அப்போது நான் கண்டிப்பாக நான் செய்கிறேன் என்றேன். அவர் அப்பொழுது சொன்னார், இது முன்பாக ஆரம்பிக்கப்பட்ட கதை என்றெல்லாம் சொன்னார். நான் அதைப் பற்றி எதுவுமே கவலைப்படவில்லை. ஏனென்றால் இந்தப் படத்தை எப்படி மேலே கொண்டு செல்வது என்பதில்தான் நம் கவனம் இருக்க வேண்டும் என்று நினைக்கிற அவர் மீது எனக்குப் பெரிய நம்பிக்கை இருந்தது .ஒரு முடிந்து போன முடிவைப் பற்றி நான் தெரிந்து கொள்வதில் ஆர்வம் காட்டவில்லை. எனக்கு வந்திருக்கும் வாய்ப்பை எப்படி நான் பயன்படுத்திக் கொண்டு மேலே முன்னேற வேண்டும் என்பதில் தான் என் கவனமும் இருந்தது. எனவே முடிவைப் பற்றி நான் பேசவில்லை. தெரிந்து கொள்ளவும் விரும்பவில்லை. அவர் மீது எனக்கு மிகப்பெரிய நம்பிக்கை இருந்தது.

அவரது படக்குழுவினரைப் பார்த்த பிறகு இந்தப் படம் மிக நன்றாக வரும் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. சுலபமாகப் படப்பிடிப்பு இடங்களில் படம் எடுப்பதற்கும் காடு, மலை என்று அலைந்து சிரமமான இடங்களில் எடுப்பதற்கும் வித்தியாசம் உண்டு. இவர்கள் அப்படி சிரமப்பட்டு எடுத்தார்கள்.அந்த இடங்களில் மற்றவர்கள் அவ்வளவு சுலபமாக எடுத்து விட முடியாது.படக் குழுவினர் நான் நினைத்தது போலவே கடினமாக உழைத்தார்கள்.இந்தப் படத்தில் நிறைய நல்ல நல்ல நடிப்புக் கலைஞர்கள் இருக்கிறார்கள். ரித்விகா, தர்ஷிகா மட்டுமல்ல அனுபவமுள்ள மதிப்பிற்குரிய வேல ராமமூர்த்தி, நிழல்கள் ரவி, ஜெயக்குமார் போன்றவர்கள் இருக்கிறார்கள். அவர்களிடம் இருந்து நான் நிறைய கற்றுக் கொண்டேன்.படப்பிடிப்பின் ஒவ்வொரு நாளும் கற்றுக் கொள்ளும் அனுபவமாக இருந்தது.

வருகிற 18-ஆம் தேதி அனைவரும் திரையரங்கு சென்று இந்தப் படத்தைப் பாருங்கள் ஆதரியுங்கள்”என்றார்.
Previous Post

“நான் ஏற்று நடித்த கதாபாத்திரங்களிலேயே தவசிமுத்து மிகவும் சவாலானது”…‘என்ன விலை’ படம் குறித்து நடிகர் கருணாஸ்!

Next Post

துருவ் விக்ரம் – ரமேஷ் வர்மா கூட்டணியில் உருவாகும் தமிழ்–தெலுங்கு இருமொழி ஆக்‌ஷன் படம்

Next Post

துருவ் விக்ரம் – ரமேஷ் வர்மா கூட்டணியில் உருவாகும் தமிழ்–தெலுங்கு இருமொழி ஆக்‌ஷன் படம்

Popular News

  • அரசியலும், சமூக அக்கறையும் சேர்ந்து உருவாகியுள்ள படம் “ஆகாயம் ” தினந்தோறும் நாகராஜ் இயக்கியுள்ளார்.

    0 shares
    Share 0 Tweet 0
  • செப்டம்பர் 24-இல் வெளியாகிறது! நேச்சுரல் ஸ்டார் நானியின் ‘தி பாரடைஸ்’ – டிரெய்லர் இன்றி புதிய முயற்சி

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘அன்பில் அவன்’ படத்தின் இரண்டாவது சிங்கிள் “கல்லா நிக்கிறியே” பாடல் வெளியானது !!

    0 shares
    Share 0 Tweet 0
  • “ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிறவைக்கும் கிரைம் த்ரில்லர்…” ; ‘பீப்’ படம் குறித்து மனம் திறந்த நடிகர் ராகவ்!

    0 shares
    Share 0 Tweet 0
  • துருவ் விக்ரம் – ரமேஷ் வர்மா கூட்டணியில் உருவாகும் தமிழ்–தெலுங்கு இருமொழி ஆக்‌ஷன் படம்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

செப்டம்பர் 24-இல் வெளியாகிறது! நேச்சுரல் ஸ்டார் நானியின் ‘தி பாரடைஸ்’ – டிரெய்லர் இன்றி புதிய முயற்சி

September 14, 2026

‘அன்பில் அவன்’ படத்தின் இரண்டாவது சிங்கிள் “கல்லா நிக்கிறியே” பாடல் வெளியானது !!

September 14, 2026

“ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிறவைக்கும் கிரைம் த்ரில்லர்…” ; ‘பீப்’ படம் குறித்து மனம் திறந்த நடிகர் ராகவ்!

September 14, 2026

அரசியலும், சமூக அக்கறையும் சேர்ந்து உருவாகியுள்ள படம் “ஆகாயம் ” தினந்தோறும் நாகராஜ் இயக்கியுள்ளார்.

September 14, 2026

துருவ் விக்ரம் – ரமேஷ் வர்மா கூட்டணியில் உருவாகும் தமிழ்–தெலுங்கு இருமொழி ஆக்‌ஷன் படம்

September 14, 2026

‘தி டார்க் ஹெவன்’ திரைப்பட வெளியீட்டுக்கு முந்தைய அறிமுக விழா!

September 14, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.