• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

விஜய் தேவரகொண்டா, பூரி ஜெகன்நாத் இணையும்  புதிய படம் துவக்கம் ! 

by Tamil2daynews
January 20, 2020
in சினிமா செய்திகள்
0
விஜய் தேவரகொண்டா, பூரி ஜெகன்நாத் இணையும்  புதிய படம் துவக்கம் ! 
0
SHARES
14
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

மிக சமீபகாலத்தில் இளைஞர்களிடம் வெகுவான வரவேற்பை பெற்ற ஹீரோவாக  மாறியிருக்கும் நாயகன் விஜய் தேவரகொண்டா, ஆக்‌ஷன் கமர்ஷயலில் அதகளம் செய்யும் இயக்குநர் பூரி ஜெகன்நாத் ஆகிய இருவரும் இணையும் புதிய படம், இன்று மிக எளிதான பூஜையுடன் மும்பையில் படப்பிடிப்பு துவங்கியுள்ளது.

விஜய் தேவரகொண்ட நடிக்க நடிகை ஷார்மி கவுர் கிளாப் அடித்து படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.

இந்த வருடத்தில்,  மிக புதுவிதமான  ஐடியாவுடன் அதிரிபுதிரி ஹிட்டாக “ஐ ஸ்மார்ட்” படத்தை தந்திருந்தார் பூரி ஜெகன்நாத். இப்படத்தின் பிரமாண்ட வெற்றிக்குபிறகு, உடனடியாக  எவரும் எதிர்பாராவிதமாக காதல் படங்களில் நடித்து வரும்  விஜய் தேவரகொண்டாவுடன் இப்படத்தை  துவங்கியுள்ளார். படத்தின் மீது ஈர்க்கப்பட்டு பாலிவுட் பிரபலம் கரண் ஜோஹர் மற்றும் அபூர்வா மேத்தா இப்படத்தின் தயாரிப்பாளர்களாக இணைந்துள்ளார்கள்.


இது ஒரு முழு இந்திய ரசிகர்களுக்கான படமாக  ஹிந்தி, தெலுங்கு, தமிழ்  என அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் உருவாகிறது.

பூரி ஜெகன்நாத் எப்போதும் ஹீரோவை,  அவர்கள் காணாத வேறொரு பரிணாமத்தில் திரையில் காட்டி கலக்குவார். இப்படத்திலும் விஜய் தேவரகொண்டாவை இதுவரை கண்டிராத வேடத்தில் இயக்கவுள்ளார்.

இயக்குநர் பூரி ஜெகன்நாத் முழுமையாக மாறுபட்ட கோணத்தில் விஜய் தேவரகொண்டா பாத்திரத்தை உருவாக்கியுள்ளார். இக்கதாப்பாத்திரத்திற்காக முழு டயட் மேற்கொண்டு உடலை ஆக்‌ஷன் ஹீரோ வடிவத்திற்கு மாற்றி வருகிறார் விஜய் தேவரகொண்டா. மேலும் தாய்லாந்து சென்று அங்குள்ள தற்காப்பு கலைகளில் பயிற்சி பெற்று வந்துள்ளார். அவரது சினிமா வாழ்வில் மிக சவாலான பாத்திரமாக, இக்காதாப்பாத்திரம்  அமைந்திருப்பதை ஏற்று வெகு அர்பணிப்புடன் தன் முழு உழைப்பையும் கொடுத்து உழைத்து வருகிறார்.

Puri connects, Touring Talkies   சார்பில் இயக்குநர் பூரி ஜெகன்நாத் நடிகை ஷார்மி கவுர், கரண் ஜோஹர், ஆபூர்வா மேத்தாவுடன் இணைந்து இப்படத்தினை தயாரிக்கிறார்.

ரம்யா கிருஷ்ணன் ரோனித் ராய், விஷு ரெட்டி, ஆழி, கெட்டப் ஶ்ரீனு ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கிறார்கள். Dharma Productions இப்படத்தை வழங்குகிறார்கள்.

தயாரிப்பு நிறுவனம் – Puri Connect

வழங்குபவர் – Dharma Productions

தயாரிப்பாளர்கள் – பூரி ஜெகன்நாத் , ஷார்மி கவுர், கரண் ஜோஹர், அபூர்வா மேத்தா.

Tags: Puri Jagannadh’sVijay Deverakonda
Previous Post

இயற்கையின் மீது கை வைக்காதீர் :  எச்சரிக்கும் படம் ‘இறலி’

Next Post

“என் கைப்பிடித்து வாசிக்க வைத்தது அக்கா பவதாரிணி தான் -யுவன் சங்கர் ராஜா.”

Next Post
“என் கைப்பிடித்து வாசிக்க வைத்தது அக்கா பவதாரிணி தான் -யுவன் சங்கர் ராஜா.”

"என் கைப்பிடித்து வாசிக்க வைத்தது அக்கா பவதாரிணி தான் -யுவன் சங்கர் ராஜா."

Popular News

  • 100 கோடி வசூல் நாயகர்கள் இணைந்த இயக்குநர் ராமின் ‘ஏழு கடல் ஏழுமலை’ : அக்-1 உலகெங்கும் ரிலீஸ் !

    100 கோடி வசூல் நாயகர்கள் இணைந்த இயக்குநர் ராமின் ‘ஏழு கடல் ஏழுமலை’ : அக்-1 உலகெங்கும் ரிலீஸ் !

    0 shares
    Share 0 Tweet 0
  • 25 மாவட்டங்கள்… 2,000 ரசிகர்கள்… பிரம்மாண்டமாக நடைபெற்ற திரு. சூர்யா ரசிகர்களின் Photoshoot!

    0 shares
    Share 0 Tweet 0
  • காதல், சிக்கல்கள் மற்றும் அதற்கு இடையில் இருக்கும் அனைத்தும்: நயன்தாரா மற்றும் கவின் நடிப்பில் உருவாகியுள்ள ‘Hi’ திரைப்படத்தை செப்டம்பர் 25 முதல் ரசிகர்களிடம் கொண்டு வருகிறது தமிழ் ZEE5

    0 shares
    Share 0 Tweet 0
  • வரவேற்பைக் குவிக்கும் ‘தாய்நிலம்’ டிரெய்லர் – அக்டோபர் 9-ம் தேதி திரைக்கு வருகிறது!

    0 shares
    Share 0 Tweet 0
  • மாரனாடு கருப்பணசாமி கோவிலில் பிரம்மாண்டமாக துவங்கியது தனுஷின் D56 !!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

100 கோடி வசூல் நாயகர்கள் இணைந்த இயக்குநர் ராமின் ‘ஏழு கடல் ஏழுமலை’ : அக்-1 உலகெங்கும் ரிலீஸ் !

100 கோடி வசூல் நாயகர்கள் இணைந்த இயக்குநர் ராமின் ‘ஏழு கடல் ஏழுமலை’ : அக்-1 உலகெங்கும் ரிலீஸ் !

September 27, 2026

25 மாவட்டங்கள்… 2,000 ரசிகர்கள்… பிரம்மாண்டமாக நடைபெற்ற திரு. சூர்யா ரசிகர்களின் Photoshoot!

September 27, 2026

மாரனாடு கருப்பணசாமி கோவிலில் பிரம்மாண்டமாக துவங்கியது தனுஷின் D56 !!

September 27, 2026

காதல், சிக்கல்கள் மற்றும் அதற்கு இடையில் இருக்கும் அனைத்தும்: நயன்தாரா மற்றும் கவின் நடிப்பில் உருவாகியுள்ள ‘Hi’ திரைப்படத்தை செப்டம்பர் 25 முதல் ரசிகர்களிடம் கொண்டு வருகிறது தமிழ் ZEE5

September 27, 2026

இதுவரை பார்த்திராத அதீத தீவிரமும் கம்பீரமும்… சஞ்சய் லீலா பன்சாலியின் ‘Love & War’ படத்தில் விக்கி கௌஷலின் இரு மாறுபட்ட தோற்றங்கள்!

September 27, 2026

ராவணனாக மிரட்டும் ராக்கிங் ஸ்டார் யஷ்! ராமாயணம் முதல் அதிகாரப்பூர்வ போஸ்டர் வெளியானது

September 27, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.