• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

‘நீ சுடத்தான் வந்தியா’ படத்திற்கு ‘ A’ சான்றிதழ்!

by Tamil2daynews
September 29, 2021
in சினிமா செய்திகள்
0
‘நீ சுடத்தான் வந்தியா’ படத்திற்கு ‘ A’ சான்றிதழ்!
0
SHARES
11
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
டிக் டாக் மூலம் தனது சில நிமிடக் கவர்ச்சி நடன வீடியோக்கள் மூலம் ரசிகர்களைக் கவர்ந்தவர் இலக்கியா. இவரது கவர்ச்சி நடன வீடியோக்கள் புகழ் பெற்றதால் இவர் ” டிக்டாக் இலக்கியா ” என்று அழைக்கப்படுகிறார். இவரைப் பிரதான நாயகியாக வைத்து ‘நீ சுடத்தான் வந்தியா’என்று ஒரு படத்தை எடுத்திருக்கிறார்கள்.
ஆல்பின் மீடியா தயாரிப்பில் துரைராஜ்  இயக்கத்தில் ‘ உருவாகியுள்ள இப்படத்திற்கு தணிக்கைத்துறையின்  ‘ ஏ’ சான்றிதழ் கிடைத்துள்ளது. இப்படத்தைப் பார்த்த தணிக்கை குழுவினர் அதை தணிக்கை செய்வதற்காக நான்கு பேர் கொண்ட குழுவிற்கு அனுப்பவே, அங்கும் ஒரு முடிவு எட்டப்படாமல் எட்டுப்பேர் கொண்ட குழுவுக்கு அனுப்பப்பட்டது. இறுதியில் படத்திற்கு ‘ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளனர்.ஒருவழியாக ‘ஏ’ சான்றிதழ் பெற்று விட்ட இப்படம் விரைவில் வெளியாக உள்ளது.
இப்படத்தைத்  தயாரித்ததுடன் கதாநாயகனாகவும் நடித்திருக்கிறார் அருண்குமார்.அவர் தனது அனுபவம் பற்றி கூறும்போது,
” படப்பிடிப்பில் இருந்த போது கூட என்னால் நம்ப முடியவில்லை .நாம் தான் படம் எடுக்கிறோமா? நாம் தான் இதில் நடிக்கிறோமா என்று எனக்கு நம்பமுடியாத ஆச்சரியமாக இருந்தது. எனக்குச் சினிமா பற்றி எதுவுமே தெரியாது. இதன் மூலம் தான் நான் நிறைய கற்றுக் கொண்டேன்.
எனக்கு நடிப்பில் ஆர்வம் இல்லை. நான்  தயாரிப்பாளர் என்பதால்  நடிக்க விரும்பவில்லை.பலரிடமும் கேட்டும் யாரும் நடிக்கச் சம்மதிக்கவில்லை.எனவே வேறுவழி இல்லாமல்தான் நான் நடித்தேன்.நடிப்பது என்று முடிவு செய்தபின் அப்படியே நான் வந்து விடவில்லை .அதற்கு , முன் தயாரிப்பாகக் கூத்துப்பட்டறையில் சேர்ந்து பயிற்சி பெற்றேன்.பிறகுதான் நடிக்க வந்தேன்.எனது நண்பருக்குத் தெரிந்தவர் மூலம் தான் கதாநாயகி டிக் டாக் இலக்கியா  இந்தப் படத்துக்கு அறிமுகமானார், நடித்தார்.இயக்குநர் சொன்னபடி நடித்துக் கொடுத்து ஒத்துழைப்பு தந்தார்.
கதாநாயகியாக நடித்திருக்கும்’ டிக் டாக்’ புகழ் இலக்கியா படத்தில் நடித்த அனுபவம் பற்றிப் பேசும்போது,
” இந்தப் படத்தில் நடித்துப் பார்த்தபோதுதான் சினிமா எவ்வளவு சிரமம் என்பதைத் தெரிந்து கொண்டேன் .சினிமாவில் நடிக்க வேண்டும் என்பதுதான் என் கனவு. அது இப்போது நிறைவேறி இருக்கிறது. மேலும் நல்ல நல்ல படங்களில் நடிக்க வேண்டும் என்று ஆசை இருக்கிறது .
உண்மையில் படம் நடிக்க வேண்டும் என்று எனக்கு ஆசை இருந்ததே தவிர படப்பிடிப்பில்தான் அது எவ்வளவு சிரமம் என்று புரிந்தது.படக் குழுவில் இயக்குநர்  சொல்லிக் கொடுத்தார். பலரும் நடிப்பு அனுபவம் இல்லாத என்னைப் புரிந்து கொண்டு உதவினார்கள்.  ஒருவழியாக பிறகுதான் மெல்ல மெல்ல நம்பிக்கை வந்து நடிக்க ஆரம்பித்தேன்.அனைவரும் இந்த படத்தை ஆதரிக்க வேண்டும்.என்னையும் வாழ்த்த வேண்டும் “என்கிறார்.
படத்தில்  இயக்குநர் துரைராஜ்,ஒளிப்பதிவாளர் செல்வகணேஷ்,இசையமைப்பாளர் துரைராஜன்,பாடலாசிரியர் லோகேஷ்  என ஆர்வமுள்ளவர்கள் இணைந்திருக்கிறார்கள்.
படத்தின் டிரைலர்  வெளியாகி வரவேற்பு பெற்று உள்ளது.கதாநாயகி இலக்கியா பற்றி ஆயிரம் விமர்சனங்கள் பேசப்பட்டாலும் சமூக ஊடகங்களில் பலவாறாகச் சீண்டப்பட்டாலும் படக்குழுவினருக்கு அவர் தந்த ஒத்துழைப்பைப் பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள். ஒரு நடிகையாக அவர் தனது கடமையைச் சரிவரச் செய்தார் என்று கூறுகிறது படக்குழு.
விரைவில் இப்படம் வெளியாக இருக்கிறது. ரசிகர்களுக்கு கவர்ச்சி அனுபவமாக படம் அமைய உள்ளது.
Previous Post

N.T.நந்தா இயக்கும் இரண்டாவது படம் ‘குறுக்கு வழி’.

Next Post

தயாரிப்பாளர், நடிகர் JSK சதீஷ் குமார் @JSK அவர்களின் புதிய அவதாரம் ! 

Next Post
தயாரிப்பாளர், நடிகர் JSK சதீஷ் குமார் @JSK அவர்களின் புதிய அவதாரம் ! 

தயாரிப்பாளர், நடிகர் JSK சதீஷ் குமார் @JSK அவர்களின் புதிய அவதாரம் ! 

Popular News

  • வாரி வாரி பாடல் மூலம் ரசிகர்களை கவர்ந்த பாப் நட்சத்திர பாடகி தீ (DHEE)

    0 shares
    Share 0 Tweet 0
  • ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் தயாரிப்பில் சுபாஷ் கே ராஜ் இயக்கத்தில் ‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுன், அபிராமி, பிரீத்தி முகுந்தன் நடிக்கும் குடும்ப ஆக்ஷன் திரில்லர் ‘பிளாஸ்ட்’

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ஆதி புருஷ்’ படத்தில் பிரபாஸுக்கு வில்லனாக சைஃப் அலி கான் ஒப்பந்தம்!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘இரண்டு வானம்’ திரைப்படத்தின் உணர்ச்சிமிகு பயணத்தை வெளிப்படுத்தும் கவித்துவமான ‘வெள்ளிச்சுடரே’ பாடல்!

    0 shares
    Share 0 Tweet 0
  • குற்றம் கடிதலைத் தொடர்ந்து மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வரவிருக்கும் ‘குற்றம் கடிதல் 2!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

வாரி வாரி பாடல் மூலம் ரசிகர்களை கவர்ந்த பாப் நட்சத்திர பாடகி தீ (DHEE)

May 2, 2026

ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் தயாரிப்பில் சுபாஷ் கே ராஜ் இயக்கத்தில் ‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுன், அபிராமி, பிரீத்தி முகுந்தன் நடிக்கும் குடும்ப ஆக்ஷன் திரில்லர் ‘பிளாஸ்ட்’

May 2, 2026

‘இரண்டு வானம்’ திரைப்படத்தின் உணர்ச்சிமிகு பயணத்தை வெளிப்படுத்தும் கவித்துவமான ‘வெள்ளிச்சுடரே’ பாடல்!

May 2, 2026

பிரைம் வீடியோ தனது தமிழ் ஒரிஜினல் சஸ்பென்ஸ் டிராமா சீரிஸான ‘எக்ஸாம்’ (Exam) சீரிஸின் உலகளாவிய வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளது — மே 15 முதல் ஸ்ட்ரீமாகிறது

May 2, 2026

காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே நடிக்கும் ‘தி இந்தியா ஸ்டோரி’ ஜூலை 24ஆம் தேதி வெளியாகிறது!

May 2, 2026

நடிகர் சூர்யாவின் ‘கருப்பு ‘ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா

May 2, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.