• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா

அரசியல் நையாண்டியாடு களம் காணும் “ஆளில்லாத ஊர்ல அண்ணன் தான் எம்.எல்.ஏ”.!

by admin
January 24, 2019
in சினிமா, சினிமா செய்திகள்
0
அரசியல் நையாண்டியாடு களம் காணும் “ஆளில்லாத ஊர்ல அண்ணன் தான் எம்.எல்.ஏ”.!
0
SHARES
31
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

சாதிக்கொரு சங்கம் வீதிக்கொரு கட்சி என பெருகி வரும் நாட்டில் தொண்டர்களை விட தலைவர்கள் அதிகமாக இருக்கிறார்கள். ஆலை இல்லாத ஊரில் இலுப்பை பூ தான் சர்க்கரை என்று பழமொழி உண்டு. அதே போல் தான் சிலர் ஆளில்லாத ஊரில் எம்.எல்.ஏ. போல் வலம் வருவார்கள்.

அப்படி ஒரு ஊரில் இருந்த ஒருவரை பற்றிய கதை தான் இது என்று கூறும் இயக்குனர் பகவதி பாலா மேலும் கூறுகையில் இதில் காதல், மோதல் , அடிதடி, அரசியல் நையாண்டி என அனைத்தும் அங்கங்கே உண்டு. “ஆளில்லாத ஊர்ல அண்ணன் தான் எம்.எல்.ஏ. என்று பெயரிட்டுள்ள இப்படத்தை சி. ராம்தாஸ் தமது ஸ்ரீபெரியநாயகி அம்மன் பிலிம்ஸ் சார்பில் தயாரித்துள்ளார். நான் கதை, திரைக்கதை, வசனம், எழுதி ஒளிப்பதிவு செய்து டைரக்ட் செய்திருக்கிறேன். என்று கூறியுள்ளார்.

புதுமுகம் செல்வாவுடன் அனிதா ஜோடியாக நடித்துள்ள இதில் ஆர்.சுந்தர்ராஜன். நளினி, வையாபுரி, மீரா கிருஷ்ணன், கிங்காங், கொட்டாச்சி, போண்டா மணி, புரோட்டா முருகேஷ், சரோஜா பாட்டி என பலரும் நடித்துள்ளார்கள்.

தேவா இசையில் கபிலேஷ்வர், சுதந்திரதாஸ் பாடல்களை எழுதி உள்ளனர். ராம் நாத் படத்தொகுப்பையும், தீப்பொறி நித்யா சண்டை பயிற்சியையும், ரமேஷ் ரெட்டி நடன பயிற்சியையும், நாதன் தயாரிப்பு நிர்வாகத்தையும் கவனிக்கின்றனர்.

இயற்கை எழில் நிறைந்த சேலம் அருகில் உள்ள அழகிய கிராமங்களில் படம் வளர்ந்துள்ளது.

விரைவில் திரைக்கு வர உள்ளது “ஆளில்லாத ஊர்ல அண்ணன் தான் எம்.எல்.ஏ “

Tags: Aalillatha Oorla Annantha MLA
Previous Post

“83” படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு

Next Post

ஆர் எஸ் எஸ் எஸ் பிக்சர்ஸ் தணிகைவேல் தயாரிக்கும் ‘ஒற்றைப் பனை மரம்’!

Next Post
ஆர் எஸ் எஸ் எஸ் பிக்சர்ஸ் தணிகைவேல் தயாரிக்கும் ‘ஒற்றைப் பனை மரம்’!

ஆர் எஸ் எஸ் எஸ் பிக்சர்ஸ் தணிகைவேல் தயாரிக்கும் ‘ஒற்றைப் பனை மரம்’!

Popular News

  • நல்லபடம் -விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • இரா.சரவணன் இயக்கத்தில், நிவாஸ் கே. பிரசன்னா இசையில், அழுத்தமான படைப்பாக அதிர வைக்க வருகிறது ‘நந்தன் 2’.

    0 shares
    Share 0 Tweet 0
  • அதிரடி ஆக்ஷனில் மிரளவைக்கும் ராஷ்மிகா: மைசா’ திரைப்படத்தின் டீசர் வெளியீடு!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘வேட்டுவம்’ பா.இரஞ்சித்தின் பிரம்மாண்ட அபோகலிப்டிக் ஆக்ஷன் திரைப்படம்.

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘சிக்மா’ திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா நிகழ்வு!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

நல்லபடம் -விமர்சனம்

September 21, 2026

‘சிக்மா’ திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா நிகழ்வு!

September 21, 2026

இரா.சரவணன் இயக்கத்தில், நிவாஸ் கே. பிரசன்னா இசையில், அழுத்தமான படைப்பாக அதிர வைக்க வருகிறது ‘நந்தன் 2’.

September 21, 2026

அதிரடி ஆக்ஷனில் மிரளவைக்கும் ராஷ்மிகா: மைசா’ திரைப்படத்தின் டீசர் வெளியீடு!

September 21, 2026

#Love’ – அக்டோபர் 2 முதல் நெட்ஃப்ளிக்ஸில் மட்டும்

September 20, 2026

பிரம்மாண்டமாக நடைபெற்ற ‘பத்தா’ இசை வெளியீட்டு விழா!

September 20, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.