
அனைத்து சினிமா ரசிகர்களாலும், சினிமாக்காரர்களாலும் நன்கு அறியப்பட்டவர் ஜான் கொக்கன். மும்பையில் பிறந்து வளர்ந்த இவர் 2005 ஆம் ஆண்டு முதல் மாடலிங் துறையில் நுழைந்தார். 10 சிறந்த மாடல்களில் ஒருவராக முன்னேறினார். அதன்பின் மோகன்லால் நடிப்பில் வெளியான கலாபம் படம் மூலம் நடிகராக அறிமுகமானார். இதைத்தொடர்ந்து, மலையாளத்தில் லவ் இன் சிங்கப்பூர், அலெக்சாண்டர் தி கிரேட் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.
தமிழில், அஜித்தின் வீரம், விஷாலின் மதகதராஜா, சிம்பு நடித்த ஒஸ்தி படங்களில் நடித்துள்ளார். மேலும், தற்போது பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடித்து வரும் சார்பட்டா பரம்பரை படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

