• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

சைக்கலாஜிகல் திரில்லராக உருவாகியுள்ள “இரட்டையர்” ஜூன் 5 ஆம் தேதி வெளியாகிறது!!

by Tamil2daynews
May 27, 2026
in சினிமா செய்திகள்
0
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
சைக்கலாஜிகல் திரில்லராக உருவாகியுள்ள “இரட்டையர்” ஜூன் 5 ஆம் தேதி வெளியாகிறது!!

Asia Iconic Studios சார்பில் ராஜேஸ்வரி லக்ஷ்மிநாராயணன் மற்றும் வினோத் கண்ணன், இணை தயாரிப்பாளர்- ஹரிஹரன் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ஜெகதீஷ் இயக்கத்தில், முற்றிலும் மாறுபட்ட களத்தில் சைக்கலாஜிகல் திரில்லராக உருவாகியுள்ள “இரட்டையர்” திரைப்படம் வரும் ஜூன் 5 ஆம் தேதி சிவானி ஸ்டுடியோ  நிறுவனம் உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.

தமிழ் சினிமாவில் இதுவரை வந்த திரில்லர் படங்களிலிருந்து மாறுபட்டு, அம்மாவுக்கும் இரட்டை பெண் குழந்தைகளுக்குமான அன்பும் உறவும் மையமாகக் கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

ஒரு விபத்தில் தந்தை உயிரிழக்கிறார். அதில் தாயின் முகமும் கடுமையாக சேதமடைகிறது. பிளாஸ்டிக் சர்ஜரிக்குப் பிறகு வீட்டிற்கு திரும்பும் தாயின் விநோதமான நடத்தைகள், அவரது இரட்டை பெண் குழந்தைகளின் வாழ்க்கையை பாதிக்க தொடங்குகிறது. இதன் பின்னர் அவர்கள் அந்த மர்மங்களை ஆராய ஆரம்பிக்கிறார்கள். அதன் பிறகு நடக்கும் திகில் சம்பவங்களே இப்படத்தின் கதைக்களமாக அமைந்துள்ளது.

படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில், ஒரு காரேஜ் போன்ற இடத்தில் இரட்டை பெண் குழந்தைகள் உயிர் பயத்துடன்  கதவை மூட முயல்கின்றனர். கதவின் மறுபுறம் அவர்களது தாய் கோபத்துடன் கதவை திறக்க முற்படுவது போன்ற காட்சி பரபரப்பை ஏற்படுத்துகிறது. சுற்றியுள்ள கருவிகள், டயர்கள் மற்றும் எண்ணெய் கறைகள் படத்தின் டார்க் மற்றும் இன்டென்ஸ் மூடினை மேலும் வலுப்படுத்துகின்றன.

இதனைத் தொடர்ந்து வெளியான டிரெய்லரும், அம்மாவுக்கும் இரட்டை குழந்தைகளுக்கும் இடையிலான விநோதமான உறவை திகில் கலந்த திரில் அனுபவமாக வெளிப்படுத்தி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

வித்தியாசமான கதைக்களம், அச்சமூட்டும் காட்சிகள் மற்றும் பரபரப்பான திரைக்கதை காரணமாக “இரட்டையர்” திரைப்படத்தின் மீது ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

இப்படத்தில் அம்மாவாக அபிநயா நடித்திருக்கிறார். இரட்டை குழந்தைகளாக அனுமிதா மற்றும் அனுஷிதா நடித்துள்ளனர். மேலும் சுப்ரமணிய சிவா, சங்கீதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

திட்டக்குடி மற்றும் கொடைக்கானல் பகுதிகளில் இப்படத்தின் படப்பிடிப்பு வெறும் 21 நாட்களில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. தற்போது அனைத்து பணிகளும் நிறைவடைந்த நிலையில், இறுதிக்கட்ட பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகின்றன.

ஒரு வித்தியாசமான ஹாரர்-த்ரில்லர் அனுபவத்தை தரவிருக்கும் “இரட்டையர்” திரைப்படம் வரும் ஜூன் 5 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தை சிவானி ஸ்டுடியோ  நிறுவனம் தமிழகமெங்கும் இப்படத்தை திரையரங்குகளில் வெளியிடுகிறது.

தொழில்நுட்பக் குழு:
கதை, திரைக்கதை & இயக்கம் : ஜெகதீஷ்
தயாரிப்பாளர்கள் : ராஜேஸ்வரி லக்ஷ்மிநாராயணன், வினோத் கண்ணன்
வசனம் – பால பாரதி
ஒளிப்பதிவு : முகமது அமீன்
இசையமைப்பாளர் : GKV
படத்தொகுப்பு : ஈஸ்வரா மூர்த்தி
கலை இயக்கம் : பிரபாகரன் ராகுல்
நிர்வாக தயாரிப்பாளர் : பாலச்சந்தர்
தயாரிப்பு மேலாளர் : பிரதீப் மிதுல்
இணை தயாரிப்பாளர் – ஹரிஹரன்
மக்கள் தொடர்பு – மணி மதன்
Previous Post

ராம் சரணுக்கு தேசிய விருது வாங்கித்தரும் படமாக உருவாகும் “ பெத்தி ” – சிவராஜ்குமார் நம்பிக்கை!!

Next Post

கார்த்தி – மீனாட்சி சௌத்ரி இணைந்து நடிக்கும் புதிய படம்

Next Post

கார்த்தி - மீனாட்சி சௌத்ரி இணைந்து நடிக்கும் புதிய படம்

Popular News

  • ஸ்ரீ சிவகுமார் கல்வி அறக்கட்டளையின் 47-வது ஆண்டு விழா! ஓவியர் ஜீவானந்தனுக்கு ரூ. 1 லட்சம் விருது, மாணவர்கள் மற்றும் கல்வி அமைப்புகளுக்கு ரூ. 13.78 லட்சம் நிதியுதவி!

    0 shares
    Share 0 Tweet 0
  • சுஹாஸ் (Suhas) நடிக்கும் ‘ஹைட் & சில்க்’ (‘Hide & Silk’ ) படத்தின் டைட்டில் கிளிம்ப்ஸ் வெளியீடு!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஃபேண்டஸி உலகத்துக்குள் அழைத்துச் செல்லும் ‘டிரோன்ஸ்’ டிரெய்லர் வெளியானது!

    0 shares
    Share 0 Tweet 0
  • ZEE தமிழின் weekend-ஐ கலக்க வருது ‘சரிகமப’ & ‘மாஸ் பசங்க Vs கிளாஸ் பொண்ணுங்க’!

    0 shares
    Share 0 Tweet 0
  • சென்னையில் ‘தி புட்டு – Dhe Puttu’ உணவகத்தின் கிளையை தொடங்கிய நடிகர் திலீப் – காவ்யா மாதவன் தம்பதிகள்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

‘ஹைக்கூ’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!

October 12, 2026

கற்பனை உலகில் புதிய அனுபவம் தரும் ‘டிரோன்ஸ்’ – பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!

October 12, 2026
‘சிக்னல் அட் 11:30’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் நடிகை புஜிதா பொன்னாடா!

‘சிக்னல் அட் 11:30’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் நடிகை புஜிதா பொன்னாடா!

October 12, 2026

‘ராமாயணா’ திரைப்படத்தின் முதல் பாகம் நவம்பர் 5 அன்று உலகம் முழுவதும் வெளியாகிறது!

October 12, 2026

ஸ்ரீ சிவகுமார் கல்வி அறக்கட்டளையின் 47-வது ஆண்டு விழா! ஓவியர் ஜீவானந்தனுக்கு ரூ. 1 லட்சம் விருது, மாணவர்கள் மற்றும் கல்வி அமைப்புகளுக்கு ரூ. 13.78 லட்சம் நிதியுதவி!

October 12, 2026

சிலம்பரசன் TR வெளியிட்ட ‘டெலிவரி பாய்’ டிரைலர்… காதல், ஆக்ஷன், காமெடி என கமர்ஷியல் அம்சங்களுடன் கவனம் ஈர்க்கும் லியோ சிவக்குமாரின் புதிய படம்!

October 12, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.