• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

நடிகர் கார்த்திக்குமாரின் புதிய அவதாரம்..!

by Tamil2daynews
September 14, 2020
in சினிமா செய்திகள்
0
நடிகர் கார்த்திக்குமாரின் புதிய அவதாரம்..!
0
SHARES
16
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
ஸ்டான்ட் அப் காமெடி என்பது மிகப் பாரம்பரியமான, மிகப் பழமையான நகைச்சுவை பாணிகளில் ஒன்று – காமிக்ஸ்தான் செம்ம காமெடி பா நடுவர் கார்த்திக் குமார்
ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான, அமேசானின் அசல் தயாரிப்பு காமிக்ஸ்தானின் தமிழ் பதிப்பான காமிக்ஸ்தான் செம்ம காமெடி பா, செப்டம்பர் 11ஆம் தேதி வெளியாகியுள்ளது.
உள்ளூர் பாணியை மேடையேற்றியிருக்கும் இந்த நிகழ்ச்சி ஸ்டான்ட் அப் காமெடி உலகில் ஒரு குறிப்பிட்ட புதிய அடியை எடுத்து வைத்துள்ளது. இது பற்றி பேசியிருக்கும் நடுவர் கார்த்திக் குமார், இந்த நிகழ்ச்சியின் முக்கியத்துவம் குறித்தும், தொடர்பு குறித்தும் பேசியுள்ளார்.
“மிகப் பாரம்பரியமான, பழமையான நகைச்சுவை பாணிகளில் ஒன்று தான் ஸ்டான் ட் அப் காமெடி என்பது வெகு சிலருக்குத் தான் தெரியும். நீங்கள் கவனித்தால் தெரியும், சாக்கைக் கூத்து இன்றும் பலரால் பயிற்சி செய்யப்பட்டு, ரசிக்கப்பட்டு வருகிறது. அது ஒரு பாரம்பரிய கலை வடிவம். அதற்கு இணையான நவீன வடிவம் தான் ஸ்டான்ட் அப் காமெடி. இது எல்லாருக்கும் தெரியாது.
இன்றைய காலகட்டத்தில் இந்த வகை பொழுதுபோக்கை செய்து வருவதில், நகைச்சுவையாளர்கள் நாங்கள் அதிகப் பெருமை கொள்கிறோம். நகைச்சுவையை விரும்புபவர்கள் இன்னும் இந்த பாணி குறித்து தெரிந்து கொள்ள, திறமைகளை பாராட்ட எங்கள் நிகழ்ச்சி உதவும் என்று நம்புகிறேன்” என்கிறார் கார்த்திக் குமார்.
ப்ரைம் வீடியோ, தமிழ் மொழியில் அசல் தயாரிப்புக்களை தொடங்கியிருப்பதற்கான முதல் படியே  இந்த நிகழ்ச்சி. இந்த புதிய நிகழ்ச்சியில், தமிழின் 3 முன்னணி நகைச்சுவையாளர்கள் பிரவீன் குமார், கார்த்திக் குமார் மற்றும் ராஜ்மோகன் ஆறுமுகம், தேர்ந்தெடுக்கப்படும் போட்டியாளர்களுக்கு வழிகாட்டியாக இருப்பார்கள். மூவருமே அவரவர்க்கான நகைச்சுவை பாணியில் நிபுணர்களாக இருப்பவர்கள். இவர்கள் வழிகாட்டும் போட்டியாளர்கள் தமிழ் ஸ்டான்ட் அப் காமெடி மேடைகளின் ராஜாவாகவோ அல்லது ராணியாகவோ தேர்வாகப் போட்டியிடுவார்கள்.
காமிக்ஸ்தான் செம்ம காமெடி பா நிகழ்ச்சி, தமிழ் கலாச்சாரத்தின் தனித்துவமான நுணுக்கங்களை இரவல் பெற்று, உள்ளூர் ரசனையைக் கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு போட்டியாளரும் அவருக்கான பிரத்யேக பாணியில் நகைச்சுவை செய்யவுள்ளார்கள். தமிழின் 6 சிறந்த நகைச்சுவையாளர்கள் காமிக்ஸ்தான் செம்ம காமெடி பாவின் சாம்பியன் பட்டத்தை வெல்ல போடும் போட்டிக்கான முன்னோட்டத்தை ட்ரெய்லர் காட்டியது.
ஒன்லி மச் லவுடர் தயாரிக்கும் காமிக்ஸ்தான் தமிழை, அர்ஜுன் கார்த்திகேயன் இயக்கியுள்ளார். ஜெய் ஆதித்யா, மெர்வின் ரொஸாரியோ ஆகியோர் எழுதியுள்ளனர். 11 செப்டம்பர் 2020ஆம் தேதி முதல், காமிக்ஸ்தான் தமிழின் அனைத்து பகுதிகளை, அமேசான் ப்ரைம் வீடியோவில் பிரத்யேகமாகக் கண்டு மகிழுங்கள்.
Previous Post

நடிகர் யோகி பாபு பார்த்து பார்த்து கட்டியுள்ள பிரமாண்ட வீட்டை பார்த்திருக்கீங்களா..?

Next Post

சுந்தர்.சி தயாரிப்பில் புதியபடம்..!

Next Post
சுந்தர்.சி தயாரிப்பில் புதியபடம்..!

சுந்தர்.சி தயாரிப்பில் புதியபடம்..!

Popular News

  • ‘ஹோப்’: உலகத் தரத்தில், திரைப்படமாகும் 30 நிமிட குறும்படம்

    0 shares
    Share 0 Tweet 0
  • I’m Game – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ படக்குழுவினரை பாராட்டிய உலகநாயகன் கமல்ஹாசன் !!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘மொத ராத்திரி’ திரைப்படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘பிளாஸ்ட்’ பிளாக்பஸ்டர் வெற்றியை தொடர்ந்து கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் தயாரிப்பில் எம் எஸ் ஆனந்தன் இயக்கத்தில் ஜெய், பிரியங்கா மோகன், யோகி பாபு நடிக்கும் ‘ஏஜிஎஸ் 29’

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

‘ஹோப்’: உலகத் தரத்தில், திரைப்படமாகும் 30 நிமிட குறும்படம்

September 7, 2026

‘பிளாஸ்ட்’ பிளாக்பஸ்டர் வெற்றியை தொடர்ந்து கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் தயாரிப்பில் எம் எஸ் ஆனந்தன் இயக்கத்தில் ஜெய், பிரியங்கா மோகன், யோகி பாபு நடிக்கும் ‘ஏஜிஎஸ் 29’

September 7, 2026

‘மொத ராத்திரி’ திரைப்படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா!

September 7, 2026

‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ படக்குழுவினரை பாராட்டிய உலகநாயகன் கமல்ஹாசன் !!

September 7, 2026

விமல் – ஸ்ரேயா கூட்டணியில் அதிரடி ரோம்-காம் ‘சண்டக்காரி’!

September 5, 2026

மோகன்லால் – விஷ்ணு மோகன் இணையும் படத்திற்கு ‘ஆபரேஷன் கங்கா’ என பெயர் சூட்டப்பட்டது

September 5, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.