• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

மனம் திறக்கும் நடிகை பார்வதிநாயர்..!

by Tamil2daynews
March 6, 2021
in சினிமா செய்திகள்
0
மனம் திறக்கும் நடிகை பார்வதிநாயர்..!
0
SHARES
29
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
என் திரை வாழ்வில் சவாலான  கதாப்பாத்திரம் “உன் பார்வையில்”  படம் குறித்து  நடிகை பார்வதி நாயர் !
இளம் நெஞ்சங்களை கொள்ளை கொள்ளும் அழகால் கிறங்கடிக்கும் நடிகை பார்வதி நாயர் தன் திரைவாழ்வில் மிகச்சவாலான பாத்திரத்தில் நடிப்பதில் பெரும் உற்சாகத்தில் மிதந்து வருகிறார்.
அழகு தேவதை நடிகை பார்வதி நாயர் இறுதியாக தன் நடிப்புக்கு சவால் தரும் கனவு  கதாப்பாத்திரத்தில்,  இயக்குநர் கபீர் லால் அறிமுக இயக்கத்தில் உருவாகும் “உன் பார்வையில்”  படத்தில் நடித்துவருகிறார். அவர் கற்பனையே செய்திராத வகையில் இப்படத்தில் இரட்டை கதாப்பாத்திரத்தில் நடித்துவருகிறார்.
இப்படத்தில் தன் சகோதரியின் கொலையாளியை தேடும் பார்வையற்ற பெண்ணாக நடிக்கிறார். பழிவாங்கும் திரில்லர் திரைப்படமாக இப்படம் உருவாகிறது. மிக அழுத்தமானதொரு  கதாப்பாத்திரத்தில் நடித்து வருவதில் பெரும் உற்சாகத்தில் இருக்கிறார் நடிகை பார்வதி நாயர்.
படம் குறித்து நடிகை பார்வதி நாயர் கூறியதாவது…
மிகச்சிறந்த படங்களின் ஒளிப்பதிவாளர் கபீர் லால் அவர்களின் முதல் இயக்கத்தில் நடிப்பது பெரும் மகிழ்ச்சி. திரைப்படம் பற்றி மிகப்பெரும் தெளிவான பார்வை அவரிடம் உள்ளது. படம் மிகச்சிறப்பாக வரும் என்பதில் எனக்கு பெரும் நம்பிக்கை உள்ளது. அதிலும் இரட்டை வேடம், நாயகியை மையப்படுத்திய  மிக சவாலான, அழுத்தமான பாத்திரம் செய்வது பெரும் பாக்கியம். தென்னிந்திய சினிமாவில் பெண் கதாப்பத்திரத்தை மையப்படுத்திய படம்,  நல்ல தயாரிப்பு நிறுவனத்தில் நல்ல இயக்குநரின் இயக்கத்தில் உருவாவது மிகவும் அரிது. இரட்டை வேடம் இது வரை நான் செய்திராத ஒன்று, எனக்கு மிகவும் புதிய அனுபவம். முதன்மை நாயகியாக, சாகசமான பாத்திரத்தில் நடிப்பது எனக்கு கிடைத்த ஆசிர்வாதம்.
கணேஷ் வெங்கட்ராம் படத்தில் நாயகி பார்வதி நாயரின் கணவராக சைக்காலஜி மருத்துவராக முக்கியமானதொரு பாத்திரத்தில் நடிக்கிறார். பார்வதி நாயர் இப்படத்தில் ஒரு தொழிலதிபராக நடிக்கிறார். இருவருக்குமான கெமிஸ்ட்ரி படத்தில் மிக அழகாக வந்துள்ளது.
கணேஷ் குறித்து கூறும்போது, கணேஷ் ஒரு மிக அற்புதமான  நடிகர் மேலும் மிகச்சிறப்பான ஒத்துழைப்பு தருபவர். ஒவ்வொரு காட்சியும் வெகு சிறப்பாக வரவேண்டுமென விரும்புவார். இயக்குநர் கபீர் அவர்கள் ஒவ்வொரு காட்சியையும்  அமைக்கும் விதம் அதை படமாக்கும் விதம் பிரமிப்பாகவுள்ளது.
World Lovely Production நிறுவனம் தயாரித்து வரும் “உன் பார்வையில்” படம்,வரும் ஜூலை மாதம் வெளியிட திட்டமிடுகிறார்கள்.
—- Johnson
Previous Post

ஜேப்பியாரின் செயலாளர் ஜோஸ்,  ஜஸ்டின்  உள்ளிட்ட 5 பேர் மீது மத்திய குற்றப்பிரிவு

Next Post

சாதனை பெண்களுக்கான விருது வழங்கும் விழா..!

Next Post
சாதனை பெண்களுக்கான விருது வழங்கும் விழா..!

சாதனை பெண்களுக்கான விருது வழங்கும் விழா..!

Popular News

  • குரு சோமசுந்தரம் – அனுமோல் நடிக்கும் ‘பாரிஸ் கஃபே’ செப்டம்பர் 18ஆம் தேதி வெளியாகிறது!

    0 shares
    Share 0 Tweet 0
  • என்ன விலை – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • “என்ன விலை திரைப்படம் ரசிகர்களுக்கு நிச்சயம் மறக்க முடியாத அனுபவம் கொடுக்கும்” -நடிகை நிமிஷா சஜயன்!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘பத்தா’ படத்தின் ‘வேர்ல்ட் ஆஃப் பத்தா’ டீசர் வெளியீடு –ரசிகர்களை ஆச்சரியப்படுத்தும் விஜய் சேதுபதியின் வித்தியாசமான பரிமாணங்கள்!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘பாரத ரத்னா’ எம் எஸ் சுப்புலட்சுமியின் சுய சரிதையான ‘எம் எஸ் : எ லெகஸி ஆன் ஸ்கிரீன்- M.S. : A LEGACY ON SCREEN ‘ திரைப்படத்தின் தொடக்க விழா

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

அர்ஜுன் தாஸ் நடிக்கும் புரொடக்ஷன் No.1 (Production No.1) – பூஜையுடன் படப்பிடிப்பு தொடக்கம்!

September 17, 2026

நவம்பர் 20-ம் தேதி பிரமாண்டமாக வெளியாகும் துல்கர் சல்மானின் ‘AOT’

September 17, 2026

‘பாரத ரத்னா’ எம் எஸ் சுப்புலட்சுமியின் சுய சரிதையான ‘எம் எஸ் : எ லெகஸி ஆன் ஸ்கிரீன்- M.S. : A LEGACY ON SCREEN ‘ திரைப்படத்தின் தொடக்க விழா

September 17, 2026

‘கன்னடத்து பைங்கிளி’ படத்திற்காக டி. ராஜேந்தரின் இசையில் முதல் முறையாக பாடிய இசைஞானி இளையராஜா

September 17, 2026

‘பத்தா’ படத்தின் ‘வேர்ல்ட் ஆஃப் பத்தா’ டீசர் வெளியீடு –ரசிகர்களை ஆச்சரியப்படுத்தும் விஜய் சேதுபதியின் வித்தியாசமான பரிமாணங்கள்!

September 17, 2026

‘தி டார்க் ஹெவன்’. – விமர்சனம்

September 17, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.