• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா

AJ Fiilms தயாரிப்பில் ரொமான்டிக் டிராமா “147” !

by admin
September 21, 2019
in சினிமா, சினிமா செய்திகள்
0
AJ Fiilms  தயாரிப்பில் ரொமான்டிக் டிராமா “147” !
0
SHARES
23
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

பெரியவர் முதல் சிறியவர் வரை எக்காலத்திலும் அனைத்து வயதினரும் ரசிக்கக் கூடியது காதல் கதைகள் தான்.  இது பலமுறை காலத்தால் நிரூபிக்கபட்டது.  தற்போது இயக்குநர் சிபி உஸ்ஸேன் மீண்டும் இக்காலத்திற்கேற்ற இளைஞர் மனதை கொள்ளை கொள்ளும் காதல் கதையோடு வந்திருக்கிறார்.”147” என்கிற தலைப்பில் உருவாகும் இந்த ரொமான்டிக் டிராமாவை AJ Fiilms நிறுவனம் தயாரிக்கிறது.

படத்தினை பற்றி இயக்குநர் சிபி உசேன் கூறியது…

மௌனப்படக் காலம் , கருப்பு வெள்ளை காலம், தொழில் நுட்பத்தில் பெரும் வளர்ச்சி பெற்ற இந்தக்காலம் என எக்காலத்திலும் மங்கிபோகாத  கதை தான் காதல். காதல் கதைகளும் அதன் உணர்வுகளும் எப்போதும் அழியாதது. மீண்டும் மீண்டும் எத்தனை முறை சொல்லப்பட்டாலும் மனதில் நீங்காத இடம் பிடிக்கும் தன்மை கொண்டவை தான் காதல் கதைகள்.  அதிலும் முதல் காதலை சொல்லும் கதைகளை அனைவரும் தங்கள் வாழ்வோடு பிணைத்து நினைவுகளோடு சேர்த்து பிணைத்து உருகும் தன்மையுடையவை. இத்தகைய காதலை நினைவு படுத்தும் கதைதான் 147

15 வருட நீண்ட பிரிவுக்குப் பின் ஒரு பயணத்தில் மகின், நந்தினி இருவரும் சந்தித்து கொள்கிறார்கள். அவர்களுடன் வேறொரு தம்பதியும்  பயணம் செய்கிறார்கள். அந்தப் பயணத்தில் தங்கள் மனதில் நீங்காமல் இருக்கும் தங்களின்  கடந்த கால நினைவுகளை, அழியாத சம்பவங்களை  தம்பதிகளின் வழி  மீட்டெடுக்கிறார்கள் மகினும் நந்தினியும். கூடவே பயணிக்கும் அந்த தம்பதி மகினுக்கும்,  நந்தினிக்கும் அவர்கள் தொலைத்த காதலையும் தியாகத்தையும் ஞாபகப்படுத்துகிறார்கள். அந்த தம்பதிக்கு மகின் தன் காதல் கதையை, தன் பார்வையில் சொல்கிறான்.  தம்பதிக்கு கதை முழுதாக சொல்லப்பட்டதா அல்லது இன்னும் இருக்கிறதா?, இந்தப் பயணமே முதலில் ஏதேச்சையானது தானா? இந்தக் கேள்விகளுக்கு  நிறைய திருப்பங்களுடனும்  மனதை தாக்கும் உணர்வுகளுடனும் பிரிந்த காதலின் ஆத்மாக்களை  ஓர் மிகப்பெரும் அனுபவத்தை  அந்தப் பயணிகளுக்கு மட்டுமல்லாமல் படம் பார்க்கும் நமக்கும் உணர்த்தும் கதை தான் 147.

இத்தனை உணர்வுமிக்க ஒரு கதைக்கு எதற்காக 147 எனும் தலைப்பு என்ற கேள்விக்கு மெல்லிய புன்னகையுடன் இயக்குநர் சிபி உசேன் …

அது ரகசியம் ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தும்.  இப்படியான ஒரு காதலை 147 என்கிற  மூன்று எண்கள் எப்படி ஒன்றிணைக்கப் போகிறது என்பதை படம் பார்க்கும் அந்தத் தருணத்தில் உணர்வார்கள் அதுவரை அது ரகசியமே என்றார்.

Previous Post

மோன்ஸ் செல்வம் என்ற 22வயது  பெண்ணின் உலகின் மிக நீளமான சித்திரம் வரையும் சாதனை முயற்சி. 

Next Post

100% Kaadhal Movie Stills

Next Post
100% Kaadhal Movie Stills

100% Kaadhal Movie Stills

Popular News

  • நானும் விவசாயம் செய்வேன் – நடிகர் கார்த்தி

    நானும் விவசாயம் செய்வேன் – நடிகர் கார்த்தி

    0 shares
    Share 0 Tweet 0
  • சென்னையில் நடைபெற்ற “நாகபந்தம்” திரைப்பட பத்திரிககையாளர் சந்திப்பு !!

    0 shares
    Share 0 Tweet 0
  • அங்கீகாரம் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘கங்கணம்’ பட பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட தயாரிப்பாளர் கலைப்புலி தாணு

    0 shares
    Share 0 Tweet 0
  • மரியா – விமர்சனம் ரேட்டிங் – 3 / 5

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

அட்டாக்கர் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது

June 25, 2026

இரண்டு மணி நேரம் குடும்பத்துடன் ஜாலியாக ரசிக்கலாம்; கான் சிட்டி அப்படிப்பட்ட படம்” – அர்ஜுன் தாஸ்

June 25, 2026

’ஹபீபி’ திரைப்படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா!

June 25, 2026

‘டிமான்டி காலனி 3 – தி எண்ட் இஸ் டூ ஃபார்’ திரைப்படம் உலகம் முழுவதும் செப்டம்பர் 11, 2026 அன்று வெளியாகிறது!

June 25, 2026

குறுகிய நாட்களில் மில்லியன் பார்வையாளர்களை கடந்த விஷாலின் ‘மகுடம்’ படத்தின் லிங்கா பாடல்! – உற்சாகத்தில் ராப் பாடகர் வினோத் (V7h)

June 25, 2026

‘மம்மட்டியான் ஸ்டார்ஸ்’ கிரிக்கெட் ரசிகர்களின் உணர்வை உயிர்ப்பிக்கும்; ஜூன் 26 முதல் ZEE5-ல் ஸ்ட்ரீமிங்

June 25, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.