• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

கிறிஸ்மஸ் விருந்தாக வருகிறது ‘அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா’

by Tamil2daynews
November 20, 2019
in சினிமா செய்திகள்
0
கிறிஸ்மஸ் விருந்தாக வருகிறது ‘அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா’
0
SHARES
30
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

ஆரா சினிமாஸ் காவ்யா வேணு கோபால் தயாரிப்பில், அவினாஷ் ஹரிஹரன் இயக்குகத்தில், வீரா – மாளவிகா இணைந்து நடிக்கும் ‘அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா’ திரைப்படம் டிசம்பர் 27ஆம் தேதி திரைக்கு வருகிறது. நகைச்சுவைப் படமான இதில் பசுபதி, ரோபோ சங்கர், ஷாரா, நான் கடவுள் ராஜேந்திரன் என்று ஒரு நட்சத்திர கூட்டமே இணைந்திருக்கிறது.

இப்படம் குறித்து விவரித்த இயக்குநர் அவினாஷ் ராஜேந்திரன், “எங்களது கனவுப் படமான ‘அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா’ படம் குறித்து அறிவிப்பதில் பெரும் மகிழ்ச்சியடைகிறோம்.பொழுது போக்கு அம்சங்கள் நிரம்பிய இப்படம், விலா நோகச் சிரிக்க வைக்கும் காட்சிகள் நிரம்பியது. பல்வேறு பாத்திரங்களை மையப்படுத்தி சுற்றி வரும் இப்படம், நகைச்சுவை மூலம் அவர்கள் எவ்வாறு ஒருவரோடு ஒருவர் பின்னிப் பிணைந்திருக்கின்றனர் என்பதை சுவைபடச் சொல்லும்.


நூறு சதவீதம் நகைச்சுவைக்கு உறுதியளிக்கும் இப்படத்தில் சில விசேடங்களும் உண்டு. படத்தின் பிரதான பாத்திரங்களான வீரா, மாளவிகா மற்றும் பசுபதி ஆகியோர் நடித்து வெளிவந்த முந்தைய படங்களில் சீரியஸ் வேடங்களில் சித்தரிக்கப்பட்டவர்கள். எனவே இப்போது அவரகளை நகைச்சுவை வேடங்களில் நடிக்க வைத்த காரணம் என்ன என்று இயக்குநர் அவினாஷ் ஹரிஹரனிடம் கேட்டபோது கூறினார்

இவர்கள் நடித்த முந்தைய படங்களை ஊன்றி கவனித்துப் பார்த்தால் ஏதேனும் ஒரு விதத்தில் நகைச்சுவையின் சாயல் இருக்கும். குறிப்பாக பசுபதி சாரைப் பற்றி சொல்லவேண்டும் என்றால், அவர் எந்த வகையான வேடம் என்றாலும், மிகப் பிரமாதமாக நடித்து அந்தப் பாத்திரத்துக்கு நியாயம் செய்வார். வீராவைப் பொறுத்தவரை முழு நீள நகைச்சுவை வேடம் ஏற்றிருப்பதால் இந்தப் படத்துக்குப் பிறகு அவரது பாணியே மாறிவிடும். மாளவிகாவைப் பொறுத்தவரையில் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் பலதரப்பட்ட வேடங்களை ஏற்று நடித்து தன் திறமையை நிரூபித்தவர். குக்கு தமிழ்ப் படத்தில் உணர்ச்சிபூர்வமாக நடித்து நம் உள்ளங்களைக் கொள்ளை கொண்டவர், யவடே சுப்ரமணியம் படத்தில் நடிப்பின் மற்றொரு பரிமாணத்தை வெளிப்படுதியிருந்தார். எனவே இவர்கள் அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா படத்திலும் உயிரோட்டமிக்க நகைச்சுவை நடிப்பை வழங்கியிருக்கிறார்கள். மேலும் ரோபோ சங்கர், ஷாரா, நான் கடவுள் ராஜேந்திரன் மற்றும் பலரும் நகைச்சுவைக் காட்சிளுக்கு சுவை கூட்டியிருக்கின்றனர்” என்றார்.


அவினாஷ் ஹரிஹரன் எழுதி இயக்கியிருக்கும் ‘அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா’ படத்துக்கு மேட்லி புளூஸ் இசையமைக்க, சுதர்சன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். பிரவீண் ஆன்டனி படத்தொகுப்பை கவனிக்க, எட்வர்ட் கலைமணி கலை இயக்குநர் பொறுப்பை ஏற்க, திலீப் சுப்பராயன் சண்டைக் காட்சிகளை அமைக்கிறார். ஆரா சினிமாஸ் நிறுவனம் சார்பாக காவ்யா வேணுகோபால் இப்படத்தைத் தயாரித்திருக்கிறார்.

Previous Post

அருண் விஜய் பிறந்த நாளை முன்னிட்டு மணி ரத்னம் வெளியிட்ட ‘சினம்’ படத்தின் பர்ஸ்ட் லுக்

Next Post

Maha Gurusamy M.N.Nambiar Centenary Tribute Function Stills

Next Post
Maha Gurusamy M.N.Nambiar Centenary Tribute Function Stills

Maha Gurusamy M.N.Nambiar Centenary Tribute Function Stills

Popular News

  • ஜென்-ஸி தலைமுறையின் வைபை கையில் எடுக்கும் சீயோன் ராஜா!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘சிட்டுக்குறிஞ்சி’ முதல் பாடல் குறிஞ்சி மலை மேல 15 லட்சம் பார்வைகளை கடந்து சாதனை!

    0 shares
    Share 0 Tweet 0
  • சாய் அபயங்கர் – பாக்யஸ்ரீ போர்ஸ் கூட்டணியில் உருவான ‘ரதிமா’

    0 shares
    Share 0 Tweet 0
  • Romeo Pictures சார்பில் ராகுல் மற்றும் Aviate Pictures சார்பில் கோகுல் ஸ்ரீனிவாசன் இணைந்து தயாரிக்க, ‘ரைட்டர்’ பட இயக்குநரும் ‘DC’ படத்தின் எழுத்தாளருமான ஃபிராங்க்ளின் ஜேக்கப் இயக்கத்தில், இளைய திலகம் பிரபு மற்றும் புது வரவான பிக்பாஸ் 7 நிகழ்ச்சியில் பங்கேற்று புகழ்பெற்ற விஜய் வர்மா முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கும் புதிய திரைப்படத்தின் பூஜை கோலாகலமாக நடைபெற்றது.

    0 shares
    Share 0 Tweet 0
  • முழு நீள சஸ்பென்ஸ் க்ரைம் ஹாரர் த்ரில்லராக உருவாகி இருக்கும் திரைப்படம் ‘தி டார்க் ஹெவன்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

ஜி.வி. பிரகாஷ் குமார் கதாநாயகனாக நடிக்க, சீன் ரோல்டன் இசையமைக்கும் கே.எஸ். சினிஷ் வழங்கும் ‘நிஞ்ஜா’ திரைப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் 24 ஆம் தேதி பூஜையுடன் தொடக்கம்!

August 26, 2026

சாய் அபயங்கர் – பாக்யஸ்ரீ போர்ஸ் கூட்டணியில் உருவான ‘ரதிமா’

August 26, 2026

ஜென்-ஸி தலைமுறையின் வைபை கையில் எடுக்கும் சீயோன் ராஜா!

August 26, 2026

சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்ற ‘டாக்ஸிக்’ முன்வெளியீட்டு விழா!

August 26, 2026

பிரசாந்த் வர்மாவின் ‘மகாகாளி’ படத்தின் வெளியீட்டு தேதி & பிரத்யேக கிளிம்ப்ஸ் வெளியீடு

August 26, 2026

‘சிட்டுக்குறிஞ்சி’ முதல் பாடல் குறிஞ்சி மலை மேல 15 லட்சம் பார்வைகளை கடந்து சாதனை!

August 26, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.