• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Advertisement
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

அருண் விஜய் பிறந்த நாளை முன்னிட்டு மணி ரத்னம் வெளியிட்ட ‘சினம்’ படத்தின் பர்ஸ்ட் லுக்

by Tamil2daynews
November 20, 2019
in சினிமா செய்திகள்
0
அருண் விஜய் பிறந்த நாளை முன்னிட்டு மணி ரத்னம் வெளியிட்ட ‘சினம்’ படத்தின் பர்ஸ்ட் லுக்
0
SHARES
13
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

பன்முக ஆளுமை மிக்க இயக்குநர் மணிரத்னம் ‘சினம்’ படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டது குறித்து ஒட்டு மொத்த படக்குழுவினரும் உளம் குளிர்ந்து மகிழ்ச்சியில் மூழ்கியிருக்கின்றனர்.


இது குறித்து பேசும்போது நடிகர் அருண் விஜய், “எனது எதிர்பார்ப்புகளுக்கும் மேலாக எனக்குக் கிடைத்த மிகப் பெரிய பிறந்த நாள் பரிசு இது. திரையுலக ஜாம்பவானான மணி ரத்னம் சார் எனது படத்தின் பர்ஸ் லுக்கை வெளியிட்டதை மிகப் பெரிய ஆசிர்வாதமாகக் கருதுகிறேன். அது மட்டுமல்ல, படத்துக்கே இது ஒரு சாதகமான அதர்வைக் கொடுத்து பலம் சேர்த்திருக்கிறது. அவரது இயக்கத்தில் ‘செக்கச் சிவந்த வானம்’ படத்தில் நடித்து மறக்க முடியாத மகத்தான அனுபவமாக எனக்கு அமைந்ததுடன் நடிப்பின் புதிய பரிமாணங்களையும் கற்றுக் கொள்ள உதவியது. கடந்த ஆண்டு பிறந்த நாள் எனக்கு எப்படி அற்புதமாக அமைந்ததோ, அதேபோல் இந்த ஆண்டும் தொட்டால் பொன்னாகும்  அவரது அற்புதக் கரங்களால் ‘சினம்’ படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டது மிகச் சிறந்த துவக்கமாக எங்கள் குழுவுக்கு அமைந்திருக்கிறது” என்றார்.

படம் குறித்து மேலும் பகிர்ந்து கொண்ட அருண் விஜய், “நான் ஏற்கெனவே குறிப்பிட்டதுபோல் ஒரு காவல் துறை அதிகாரியின் கோபம் எவ்வாறு தடைகளைத் தாண்டி நீதிக்காக போராட வைக்கிறது என்பதுதான் இந்தப் படம். இது பல முன்மாதிரிகளைக் கொண்டிருந்தாலும், இயக்குநர் ஜி.என்.ஆர்.குமாரவேலன் கதையை  விவரித்த விதமும், இப்போது அதை படமாக்கிய விதமும் எனக்கு மிகுந்த உற்சாகத்தை அளித்திருக்கிறது” என்றார்.


சினம் படப்பிடிப்பு தளத்திலேயே அருண் விஜயின் பிறந்த நாள் வெகு விமரிசையாகவும் உணர்ச்சி பூர்வமாகவும்  கொண்டாடப்பட்டது. அருண் விஜயின் தந்தை விஜயகுமார், தாயார், குழந்தைகள், சகோதரி ப்ரீதா, மற்றும் அக்னி சிறகுகள் இயக்குநர் நவீன் ஆகியோரும் கலந்து கொண்டனர். தயாரிப்பாளர் அம்மா கிரியேஷன்ஸ் சிவா தங்கச் சங்கிலி ஒன்றை அருண் விஜய்க்கு பரிசாக வழங்கினார். இயக்குநர் அறிவழகன், ஆல் இன் பிக்சர்ஸ் விஜய் ஆகியோரும் விழாவில் கலந்து கொண்டு அருண் விஜயை வாழ்த்தினர்.
மிகப் பெரிய வரவேற்பைப் பெற்ற குற்றம் 23 படத்துக்குப் பிறகு அருண் விஜய் மீண்டும் சினம் படத்தில் காக்கி சீருடை அணிந்து கலக்க இருக்கிறார். மூவி ஸ்லைட்ஸ் பிரைவேட் லிமிடெட் தயாரிக்கும் சினம் படத்தை, தேசிய விருது பெற்ற இயக்குநர் ஜி.என்.ஆர்.குமாரவேலன் இயக்குகிறார்.

 

பலாக் லால்வாணி கதாநாயகியாகி வேடத்தில் நடிக்க காளி வெங்கட் மிகவும் முக்கியத்துவமுள்ள ஒரு வேடத்தில் நடிக்கிறார்.ஷபீர் இசையமைக்கும் இப்படத்துக்கு கோபிநாத் ஒளிப்பதிவு செய்ய, ராஜா முகமது படத்தொகுப்பை கவனிக்க, கலை இயக்குநர் பொறுப்பை ஏற்றிருப்பவர் மைக்கேல். மதன் கார்க்கி, ப்ரியன் ஏக்நாத் பாடல்களை எழுதுகின்றனர். பவன் டிசைனராகப் பணியாற்ற, சண்டைக் காட்சிகளை சில்வா அமைக்கிறார்.

Tags: Arun VijayMani RatnamSinamTamil Movie
Previous Post

100 நிமிட கண்கவர் கிராபிக்ஸ் காட்சிகளுடன் ஜெய் நடிக்கும் ‘பிரேக்கிங் நியூஸ்’

Next Post

கிறிஸ்மஸ் விருந்தாக வருகிறது ‘அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா’

Next Post
கிறிஸ்மஸ் விருந்தாக வருகிறது ‘அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா’

கிறிஸ்மஸ் விருந்தாக வருகிறது 'அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா'

Popular News

  • மீண்டும் இணைந்த “பிளாக்” வெற்றிப்படக்கூட்டணி, “ஜீவா 46” கோலாகலத் துவக்கம்!!

    0 shares
    Share 0 Tweet 0
  • திங்க் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் நடிக்கும் கவின்- பிரியங்கா மோகன் ஜோடி

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ஜென்ம நட்சத்திரம்’ வெளியீட்டுக்கு முன்பே ஹிட்! ஊடக விமர்சனங்களும் முன்னோட்டக் காட்சிகளும் வரவேற்பை பெற்றுள்ளன!

    0 shares
    Share 0 Tweet 0
  • பிரபல இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வழங்க , Passion ஸ்டூடியோஸ், ஜி ஸ்க்வாட், தி ரூட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் யூட்யூப் சென்சேஷனல் ஐகான்கள் பாரத் & நிரஞ்சனின் “Mr. பாரத்” படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது!

    0 shares
    Share 0 Tweet 0
  • *மாதவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பில், அமேசான் தயாரிப்பில் உருவாகியிருக்கும்  மாறா ட்ரெய்லர்,

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

சட்டமும் நீதியும் – விமர்சனம்

July 19, 2025
திங்க் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் நடிக்கும் கவின்- பிரியங்கா மோகன் ஜோடி

திங்க் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் நடிக்கும் கவின்- பிரியங்கா மோகன் ஜோடி

July 19, 2025

கெவி – விமர்சனம் ரேட்டிங் – 4 / 5

July 19, 2025

ஜென்ம நட்சத்திரம் – விமர்சனம் ரேட்டிங் – 3.5 / 5

July 19, 2025

நடிகர் உன்னி முகுந்தனின் UMF மற்றும் ஐன்ஸ்டீன் மீடியாவுடன் இணைந்து லெஜெண்ட்ரி இயக்குநர் ஜோஷி இயக்கும் அடுத்த பட அறிவிப்பு அவரது பிறந்தநாளன்று வெளியாகியுள்ளது!

July 19, 2025

திரையிலும், நிஜ வாழ்க்கையிலும் முத்திரை பதித்துவரும் நடிகை பவ்யா த்ரிகா

July 19, 2025
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.