• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

அதர்வா நடிக்கும் ஆக்சன் படம்..!

by Tamil2daynews
February 7, 2021
in சினிமா செய்திகள்
0
அதர்வா நடிக்கும் ஆக்சன் படம்..!
0
SHARES
14
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

மீண்டும் இணையும் இயக்குநர் சாம் ஆண்டன் நடிகர் அதர்வா முரளி கூட்டணி, பிரமாண்டமாக தயாராகும் ஆக்சன் திரைப்படம் !
“100” திரைப்படம் மூலம் மிகப்பெரும் வெற்றியை தந்த இயக்குநர் சாம் ஆண்டன், நடிகர் அதர்வா முரளி கூட்டணி மீண்டுமொரு பிரமாண்ட ஆக்சன் படத்தில் இணைகிறது. மாதவன், ஷ்ரதா ஶ்ரீநாத் நடிப்பில்   சமீபத்தில் வெளியாகி வெற்றிபெற்ற  “மாறா”  திரைப்படத்தினை தயாரித்த Pramod Films  தயாரிப்பாளர் சுருதி நல்லாப்பா இப்படத்தினை தயாரிக்கிறார்.
நடிகர் அதர்வா முரளி  நாயகனாக நடிக்கும் இந்த புதிய திரைப்படம் ஒரு தந்தைக்கும் மகனுக்கும் இடையிலான பாசப்பிணைப்பபை மையப்படுத்தி ஆக்சன் திரில்லர் பாணியில் உருவாகிறது. பல புதுமையான ஆக்சன் காட்சிகள் படத்தில் இடம்பெற்றுள்ளது. இப்படத்தின் காட்சிகளுக்காக சிறப்பு பயிற்சி மேற்கொண்டு தயாராகி வருகிறார் நடிகர் அதர்வா. படத்தின் பின்னணி இசை மிகவும் முக்கியத்துவம் கொண்டிருப்பதால் “மாறா” படம் மூலம் அனைவரையும் கவர்ந்திழுத்த இசையமைப்பாளர் ஜிப்ரான் அவர்களையே, இப்படத்திற்கும் ஒப்பந்தம் செய்துள்ளனர் படக்குழுவினர். படத்தொகுப்பை ரூபன் செய்ய, கிருஷ்ணன் வெங்கட் இப்படத்தின் ஒளிப்பதிவை செய்கிறார்
பாலிவுட்டில் 40 க்கும் மேற்பட்ட வெற்றிபடங்களை தந்திருக்கும் Pramod Films நிறுவனம் இப்படத்தினை பெரும் பொருட் செலவில் தயாரிக்கிறது. இணையவழி குற்றங்கள்  ( Dark Web) தான் இப்படத்தின்  பின்னணி கதைக்களமாக அமைக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் ஆக்சன் மட்டுமல்லாமல் நகைச்சுவையும் பிரதானமாக கையாளப்பட்டுள்ளது.
பிரதீக் சக்தவர்த்தி, சுருதி நல்லப்பா இணைந்து இப்படத்தினை தயாரிக்கின்றனர். இப்படத்தின் முழுமையான நடிகர் குழு மற்றும் தொழில்நுட்ப குழு பற்றிய அறிவிப்பு விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.
Previous Post

நான்கு இயக்குநர்களின் கை வண்ணத்தில் “குட்டி ஸ்டோரி”..!

Next Post

ஒளிப்பதிவாளர், இயக்குநர் KV குகனின் WWW ( Who, Where,Why) பன்மொழி படத்தின் டீஸரை வெளியிட்டார் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ! 

Next Post
ஒளிப்பதிவாளர், இயக்குநர் KV குகனின் WWW ( Who, Where,Why) பன்மொழி படத்தின் டீஸரை வெளியிட்டார் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ! 

ஒளிப்பதிவாளர், இயக்குநர் KV குகனின் WWW ( Who, Where,Why) பன்மொழி படத்தின் டீஸரை வெளியிட்டார் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ! 

Popular News

  • ‘கங்கணம்’ பட பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட தயாரிப்பாளர் கலைப்புலி தாணு

    0 shares
    Share 0 Tweet 0
  • கல்விக்காக ஒரு பெண் மேற்கொள்ளும் பயணத்தை சொல்லும் படம்  “கமலி From நடுக்காவேரி” !

    0 shares
    Share 0 Tweet 0
  • சென்னையில் கோலாகலமாக நடைபெற்ற ‘பெத்தி’ திரைப்பட பத்திரிகையாளர் சந்திப்பு

    0 shares
    Share 0 Tweet 0
  • தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் அவர்கள் தனுஷ், நாகார்ஜுனா, சேகர் கம்முலா, ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்எல்பி, அமிகோஸ் கிரியேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் ஆகியோர் இணையும் #DNS படத்திற்கு இசையமைக்கவுள்ளார்.

    0 shares
    Share 0 Tweet 0
  • “கலைப்புலி”தாணு வின் 50 ஆம் ஆண்டு..!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

‘அன்பே டயானா’ டிரெய்லர் வெளியீட்டு விழா!!

July 15, 2026

நடிகர் ஃபஹத் பாசில் நடிப்பில் கற்பனை கலந்த பொழுதுபோக்கு திரைப்படமான ‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள் – Don’t Trouble The Trouble’ படத்தின் டீசர் வெளியீடு

July 15, 2026

‘கார்கில்’, ‘டேக் டைவர்ஷன்’ பட இயக்குநர் ஷிவானி செந்திலின் புதிய திரைப்படம் பரபரப்பான படப்பிடிப்பில்

July 15, 2026

மதர் ஆர்ட்ஸ் இன்டர்நேஷனலின் அடுத்த படைப்பு – ‘ஆண்ட’

July 15, 2026

ஞானபீட விருது பெற்றார் கவிஞர் வைரமுத்து

July 15, 2026

ட்ரெயின் படத்தின் இசை வெளியீட்டு விழா

July 15, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.