• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

“குதிரைவால்” ஓர் அறிவுப்பூர்வமான திரைப்படம். – இயக்குநர் மிஷ்கின் பெருமிதம்..!

by Tamil2daynews
March 17, 2022
in சினிமா செய்திகள்
0
பெண்களின் பாதுகாப்பிற்காக “எதற்கும் துணிந்தவன்”  விமர்சனம்
0
SHARES
24
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
                                                                   “குதிரைவால்” ஓர் அறிவுப்பூர்வமான திரைப்படம்.
                                                                                   இயக்குநர் மிஷ்கின் பெருமிதம்..!
இயக்குநர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்‌ஷன்ஸ் மற்றும் யாழி பிலிம்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கும் படம் ‘குதிரைவால்’. கலையரசன், அஞ்சலி பாட்டீல் ஆகியோர் நடித்திருக்கும் இப்படத்தை அறிமுக இயக்குநர்கள் மனோஜ் லியோனல் ஜாசன் மற்றும் ஷ்யாம் சுந்தர் ஆகியோர் இணைந்து இயக்கியுள்ளனர்.
எழுத்தாளர் ராஜேஷ்குமார் கதை, திரைக்கதை, வசனத்தில் உருவாகியுள்ள இப்படம் பல சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்று பல விருதுகளை வென்றிருக்கும் நிலையில், நாளை (மார்ச் 18) உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இப்படத்தை வெளியிட பல ஒடிடி நிறுவனங்கள் போட்டியிட்ட நிலையில், திரையரங்கில் மட்டுமே இப்படத்தை வெளியிடுவேன், என்பதில் இப்படத்தின் தயாரிப்பாளர்கள்  விக்னேஷ் சுந்தரேசன் மற்றும் பா.இரஞ்சித் உறுதியாக இருந்தார்கள். காரணம், இப்படத்தை திரையரங்குகளில் பார்க்கும் போது இதுவரை இல்லாத ஒரு புதிய அனுபவத்தை ரசிகர்கள் அனுபவிக்க முடியும் என்ற நம்பிக்கையால் தானாம். அப்படி ஒரு திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்தின் மீது பெரும் எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டிருப்பதோடு, சமீபத்தில் வெளியான டிரைலர் எதிர்ப்பார்ப்பை அதிக்கரிக்கவும் செய்திருக்கிறது.
இந்த நிலையில், ‘குதிரைவால்’ படத்தின் சிறப்பு காட்சி சமீபத்தில் திரையிடப்பட்டது. இதில் இயக்குநர்கள் மிஷ்கின், லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்று படம் பார்த்ததோடு, படத்தை வெகுவாக பாராட்டியுள்ளனர்.
இயக்குநர் மிஷ்கின் படம் குறித்து கூறுகையில்,
“தமிழ் சினிமாவில் நான் இதுவரை பார்த்த திரைப்படங்களிலேயே மிகவும் அறிவுப்பூர்வமான திரைப்படம் ‘குதிரைவால்’. ஒரு இயக்குநர் நான் நினைத்த அறிவுப்பூர்வமான விஷயங்களை திரைப்படமாக கொடுத்திருக்கும் முதல் திரைப்படம் இது தான். நான் உள்பட நினைத்ததை 10 சதவீதம் தான் படத்தில் சொல்வோம். ஆனால், இந்த படத்தின் இயக்குநர்கள் தாங்கள் நினைத்ததை 100 சதவீதம் முழுமையாக சொல்லியிருக்கிறார்கள். அதற்கு என் பாராட்டுகள். ஒரு சைக்காலாஜிக்கல் பயணமாகவே இப்படம் இருந்தது. நான் படம் பார்க்கும் போது எனக்கு புதுவித உணர்வை கொடுத்தது. இந்த படத்தை தயாரித்த இயக்குநர் பா.இரஞ்சித்துக்கு என் நன்றியும், பாராட்டும். இந்த படம் ஆங்கிலப் படத்துக்கு நிகராக இருக்கிறது. இந்த படத்தின் மேக்கிங் சிறப்பாக இருக்கிறது. பெரிய பெரிய விருதுகள் வாங்குவதற்கு தமிழ் சினிமா வெகு தூரத்தில் இல்லை மிக குறைவான தொலைவில் இருக்கிறது என்பதற்கு இந்த படம் சிறந்த உதாரணம். இந்த படத்தை மிக பொறுமையாக பார்க்க வேண்டும். இதுபோன்ற படங்களை பத்திரிகையாளர்களிடம் சேர்க்க வேண்டும். இந்த படத்தை தயாரித்த இயக்குநர் பா.இரஞ்சித் மற்றும் யாழி பிலிம்ஸ் நிறுவனத்துக்கு மிகப்பெரிய தைரியம் வேண்டும். பா.இரஞ்சித் தயாரித்த படங்களிலேயே இது தான் மிகச்சிறந்த படம்.” என்றார்.
இயக்குநர் லோகேஷ் கனகரான் படம் குறித்து கூறுகையில், “மிகவும் பிரமிப்பான திரைப்படம். இப்படி ஒரு படத்தை நான் எதிர்ப்பார்க்கவில்லை. படத்தில் நடித்த நடிகர்கள் அவர்களின் நடிப்பு மற்றும் ஒளிப்பதிவு என அனைத்தும் மிக சிறப்பாக உள்ளது. ஒரு வித்தியாசமான கதையம்சம் கொண்ட இந்த படம் ரசிகர்களுக்கு நிச்சயம் வித்தியாசமான உணர்வை கொடுக்கும்.” என்றார்.
இந்த நிலையில், ‘குதிரைவால்’ படம் குறித்து இயக்குநர் பா.இரஞ்சித் கூறுகையில், “தமிழ் சினிமாவில் இது ஒரு புதிய ஆரம்பமாக இருக்கும். புற உலகில் இருந்து விலகி அக உலகிற்குள் இருக்கும் ஒரு கலையை பற்றி குதிரைவால் படம் பேசி இருக்கிறது. கனவு, கனவு உலகத்தில் இருக்கும் சுதந்திரம் பற்றி குதிரைவால் காட்சிப்படுத்தி உள்ளது.
வழக்கமான ஹீரோ வில்லன் கதையாக இல்லாமல், பார்ப்பவர்கள் பர்சனலாக கனெக்ட் செய்து கொள்ள கூடிய அளவில் படம் இருக்கும்.  திரையரங்குகளில் குதிரைவால் படம் தரும் புதிய அனுபவம் பேசப்படும்.” என்று தெரிவித்துள்ளார்.
Previous Post

“பீஸ்ட்” ஆடியோ விழா ரத்து, காரணம் இது தான்..!

Next Post

Zee Studios & Bayview Projects நிறுவனங்கள் Romeo Pictures உடன் இணைந்து தயாரிக்க, தயாரிப்பாளர் போனி கபூர் வழங்கும், RJ பாலாஜி நடிக்கும் “வீட்ல விசேஷம்” திரைப்படம் ஜூன் 17, 2022 உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது!

Next Post
பெண்களின் பாதுகாப்பிற்காக “எதற்கும் துணிந்தவன்”  விமர்சனம்

Zee Studios & Bayview Projects நிறுவனங்கள் Romeo Pictures உடன் இணைந்து தயாரிக்க, தயாரிப்பாளர் போனி கபூர் வழங்கும், RJ பாலாஜி நடிக்கும் “வீட்ல விசேஷம்" திரைப்படம் ஜூன் 17, 2022 உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது!

Popular News

  • ‘கங்கணம்’ பட பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட தயாரிப்பாளர் கலைப்புலி தாணு

    0 shares
    Share 0 Tweet 0
  • மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘மொத ராத்திரி’ திரைப்படம் ஆகஸ்ட் 21ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகிறது!

    0 shares
    Share 0 Tweet 0
  • துல்கர் சல்மான் – பூஜா ஹெக்டே காம்போவின் ‘ஸ்ரீ ஸ்ரீ’ அசத்தலான ஃபர்ஸ்ட் லுக் !!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி – ஆர்யா இணைந்து வெளியிட்ட நடிகை ப்ரியா பவானி சங்கரின் ‘ஹாட் ஸ்பாட் 2 மச்’ படத்தின் முன்னோட்டம்

    0 shares
    Share 0 Tweet 0
  • ரெட்ரோ வெற்றி, மீடியா நண்பர்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்த சூர்யா!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

‘ஸ்ட்ரீட் ஃபைட்டர்’ திரைப்பட டிரெய்லர்: நோவா சென்டினியோ, ஜேசன் மோமோவா மற்றும் வித்யுத் ஜமால் இணையும் அதிரடி ஆக்‌ஷன்!

July 31, 2026

நடிகை சிம்ரனின் நெகிழ்ச்சியான மனிதநேய செயல் – மாற்றுத்திறனாளி சிறுமியின் கனவை நனவாக்கிய மறக்க முடியாத தருணம்!

July 31, 2026

ஏழு மாநிலங்களை சேர்ந்த 1000 ரசிகர்களுடன் ஆறு மணி நேரத்திற்கும் மேலாக நேரம் செலவிட்டு மகிழ்ந்த நடிகர் அல்லு அர்ஜுன்!

July 31, 2026

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘மொத ராத்திரி’ திரைப்படம் ஆகஸ்ட் 21ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகிறது!

July 31, 2026
நமித் மல்ஹோத்ராவின் ‘ராமாயணம்’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லர் ஐந்து இந்திய மொழிகளில் உலகளவில் வெளியீடு!

நமித் மல்ஹோத்ராவின் ‘ராமாயணம்’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லர் ஐந்து இந்திய மொழிகளில் உலகளவில் வெளியீடு!

July 31, 2026

பிரைம் வீடியோ, ‘வதந்தி சீசன் 2 – தி மிஸ்டரி ஆஃப் மணி’ சீரிஸிலிருந்து துள்ளலான புதிய ‘தெய்வா’ பாடலை வெளியிட்டது !

July 31, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.