“பீஸ்ட்” ஆடியோ விழா ரத்து, காரணம் இது தான்..!
சன் பிச்சர்ஸ் தயாரிப்பில் தளபதி விஜய் நடிக்கும் “பீஸ்ட்” படத்தின் முதல் பாடலான “அரபி குத்து” பாடல் வெளியாகி உலகெங்கும் உள்ள அனைவரையும் ஈர்த்தது மட்டுமல்லாமல் எல்லா மொழியில் உள்ள நடிகர், நடிகைகள் கூட தன்னுடைய சோசியல் மீடியாவில் அந்தப் பாடலுக்கு ஏற்றவாறு நடனமாடி சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளது அனைவருக்கும் தெரியும்.

இதற்கு அடுத்ததாக ரசிகர்களின் எதிர்பார்ப்பு இசை வெளியீட்டு விழாவை நோக்கி சென்றது.
இந்த இசை விழா கூட கடந்த சில வாரங்களாக மார்ச் 20 அன்று “பீஸ்ட்” படத்தின் இசை வெளியீடு மிக பிரம்மாண்டமான முறையில் நடைபெறும் என்று ஒரு சில தகவல்கள் பலரால் கசிந்த வண்ணம் இருந்தன.
ரசிகர்கள் எதிர்பார்ப்பு மார்ச்-20 யை நோக்கி மிகவும் குதூகலமாக குதூகலிக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு அதிரடி முடிவை வெளியிட்டது.

ஏனென்றால் விஜய் நடிப்பில் வெளியான “சர்க்கார்” , ‘மாஸ்டர்”, போன்ற திரைப்படங்களின் இசை வெளியீட்டு விழாவில் விஜய் பேசிய பேச்சால் ஒரு பரபரப்பும்,ரசிகர்களுக்கு ஒரு உற்சாகமும் ஏற்பட்டது.
அதுமட்டுமல்லாமல் அவர் பேசும்பொழுது இளைஞர்கள் முன்னேற கூடிய வகையிலான ஒரு சில தத்துவ வசனங்களையும், சில குட்டிக் கதைகளையும் சொல்லி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதுவும் நீண்ட நாட்களுக்கு சோசியல் மீடியாவில் வைரலாக சென்றது அனைவரும் அறிந்ததே.
என்ன காரணம் என்று நாம் விசாரித்தபோது காரணங்கள் பெரிதாக ஒன்றுமில்லை “கொரோனா” பரவல் ஒன்றை மட்டுமே காரணமாக கூறினார்கள்.

மூலம் சில,பல கோடிகளை படம் ரிலீசுக்கு முன்பே சம்பாதித்து விடுவது வழக்கம்.
அந் நிறுவனம் தயாரிக்கும் எந்த ஒரு திரைப்படத்திற்குமே மற்றவர்களுக்கு விளம்பரமோ, விளம்பரம் சம்பந்தமான எந்த ஒரு உரிமத்தையும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் வழங்காது.
படம் ரிலீசுக்கு சுமார் 10 நாட்களுக்கு முன்பே சன் டிவியில் விளம்பரங்கள் செய்து படத்தின் எதிர்பார்ப்பை எகிற விடுவது சன் பிக்சர்ஸின் வழக்கம்.
என்ன செய்யும் சன் பிக்சர்ஸ் நிறுவனம்.
அதுக்கு தான் ஒரு சித்து வேலையை செய்திருக்கிறார்கள் சன் பிக்சர்ஸ் நிறுவனம் .
இதே நிறுவனம் இதற்கு முன்பு விஜய் வைத்து தயாரித்த “சர்கார்” திரைப்படத்தில் கூட “தளபதி” விஜய் அவர்களின் பிரத்தியோக பேட்டியை ஒளிபரப்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஏனென்றால் அந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவை மிகப் பிரம்மாண்டமான முறையில் நடத்தி அவர்களின் டிவி சேனலில் ஒளிபரப்பி பல விளம்பரதாரர்கள் மூலம் சில பல கோடிகளை சம்பாதித்து குறிப்பிடத்தக்கது.

விஜய்யோட பிரத்தியோக இன்டர்வியூ சன் டிவியில் மிக பிரம்மாண்டமான முறையில் எடுக்கப்போவதாக தகவல் வந்திருக்கு ரசிகர்களுக்கு இந்த செய்தி நிச்சயமா ஒரு பெரிய சந்தோசத்தை கொடுக்கும் .