• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா கேலரி

Capital Film Works – Web Series Press release and Pooja stills

by Tamil2daynews
January 8, 2020
in கேலரி, சினிமா செய்திகள்
0
Capital Film Works – Web Series Press release and Pooja stills
0
SHARES
98
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் ‘கேப்பிடல் பிலிம் ஒர்க்ஸ்’ தயாரிப்பில், எஸ்.பி. சரண் இயக்கத்தில் உருவாகும்  “அதிகாரம்” – பரபரப்பான புதிய இணையத்  தொடர்


தேசிய விருது வென்ற ‘ஆரண்யகாண்டம்’ மற்றும் நாணயம், சென்னை 28,  திருடன் போலீஸ் ஆகிய வெற்றிப் படங்களைத் தயாரித்த கேப்பிடல் பிலிம் ஒர்க்ஸ், ‘அதிகாரம்’ மூலம் முதன் முறையாக  இணையத்  தொடர் தயாரிப்பில் தடம் பதிக்கிறது.

இன்று எஸ்.பி. பாலசுப்பிரமணியம் குத்து விளக்கேற்றி துவக்கி வைக்க, படப்பிடிப்பு இனிதே நடைபெற்று வருகிறது.

பிரபல பின்னணி பாடகரும், நடிகருமான எஸ்.பி. சரண் முதன் முறையாக இந்த இணையத் தொடரைத் தயாரித்து, இயக்குகிறார்.

அன்பும் அதிகாரமும் எதிர்மறை  விகிதாச்சார இயல்புடையதாக இருக்க, ‘அதிகாரம்’ அரசியலை மையமாகக் கொண்ட ஒரு பரபரப்பான  கதைகளத்துடன் தயாராகிறது.

இத்தொடர், அதிகாரத்தில் இருப்பவர்கள் தங்களது இருப்பை தக்க வைத்துக் கொள்ள ஒரு பக்கம் காய்களை நகர்த்திக் கொண்டிருக்க,  அவர்களை வீழ்த்தி அதிகாரத்தை அடையத் துடிக்கும் சாதாரண இளைஞன் ஒருவனைப் பற்றிய கதை.

தேசிய அளவில் முதல் முறையாக சமகால அரசியலையும், அதன் போக்கையும் மிகத் தீவிரமாய் பேசப் போகிறது அதிகாரம் என்கிறார் இத்தொடரின் ஆக்கம் எழுத்து மற்றும் வசனகர்த்தாவாகிய கேபிள் சங்கர்.


இத்தொடரில் ’வெள்ளைப்பூக்கள்’ தேவ், ஏ.எல்.அழகப்பன், இளவரசு, ‘பிக்பாஸ்’ புகழ் அபிராமி, ஜான் விஜய், அரவிந்த் ஆகாஷ், வினோதினி வைத்யநாதன், ‘சூது கவ்வும்’ சிவகுமார், கஜராஜ், ராஜேஷ், வின், வினோ ஆகியோர் நடிக்கிறார்கள்.

ராஜேஷ் யாதவ் ஒளிப்பதிவு செய்ய, பிரவீன் கே.எல் படத்தொகுப்பைக்  கவனிக்க,  இசை தீனா தேவராஜன் வசம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.  கலை இயக்குனராக  ரெமியனும்,  சண்டைப்பயிற்சிக்கு ஸ்டண்ட் செல்வாவும் பொறுப்பேற்று இருக்கிறார்கள்.

எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் ‘கேப்பிடல் பிலிம் ஒர்க்ஸ்’ தயாரிப்பில், கேபிள் சங்கரின் ஆக்கம்-எழுத்து வசனத்தில், எஸ்.பி. சரண் இயக்கும் “அதிகாரம்” ஒரு பரபரப்பான அரசியல் தொடராக அமைகிறது.

நட்சத்திரங்களும் தொழிட்நுட்ப கலைஞர்களும்:
’வெள்ளைப்பூக்கள்’ தேவ்
ஏ.எல்.அழகப்பன் இளவரசு
‘பிக்பாஸ்’ புகழ் அபிராமி
ஜான் விஜய்
அரவிந்த் ஆகாஷ் வினோதினி வைத்யநாதன்
‘சூது கவ்வும்’ சிவக்குமார்
கஜராஜ்
ராஜேஷ்
வின்
வினோ

தயாரிப்பு: கேப்பிடல் பிலிம் ஒர்க்ஸ்
இணை தயாரிப்பு: சிவலட்சுமணன் & இம்தியாஸ் ஷரீப்
ஒளிப்பதிவு: ராஜேஷ் யாதவ்
படத்தொகுப்பு: பிரவீன் கே.எல்
இசை: தீனா தேவராஜன்
கலை இயக்குனர்:  ரெமியன்
வடிவமைப்பு: 24 ஏ எம்
ஆடை அலங்காரம்: சோஃபியா ஜெனிபர்
ஸ்டில்ஸ்: மணி
சண்டைப்பயிற்சி:  ஸ்டண்ட் செல்வா
திரைகதை-வசன உதவி:  மணிஜி
ஆக்கம் – எழுத்து – வசனம்: கேபிள் சங்கர்
இயக்கம்: எஸ்.பி. சரண்
மக்கள் தொடர்பு: நிகில் முருகன்

Tags: Athulya RAviSP CharanSwayamSwayam Siddha
Previous Post

‘தா’ என்பது தாய், தமிழ், தந்தை, தர்மம் என பல விஷயங்களுக்கு ஒரு அடையாளச் சின்னமாக திகழும் – ஏ ஆர் ரஹ்மான்

Next Post

‘King of Mesmerizing Voice’ Sid Sriram’s South India Music Tour – ‘All Love No Hate’

Next Post
‘King of Mesmerizing Voice’ Sid Sriram’s South India Music Tour – ‘All Love No Hate’

‘King of Mesmerizing Voice’ Sid Sriram’s South India Music Tour - ‘All Love No Hate’

Popular News

  • முன்னணி தயாரிப்பாளர் ஆர். ரவீந்திரன், டிரைடென்ட் ஆர்ட்ஸின் 22வது படத்தை சுல்தான் ஜசானி மற்றும் சேத்தன் தியோலேகர் ஆகியோரோடு இணைந்து தயாரிக்கிறார்

    0 shares
    Share 0 Tweet 0
  • ஹைக்கூ – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • “ஒரு மனிதனின் வாழ்க்கையில் இருவேறு காலக்கட்டங்களை பேசும் திரைப்படம் ‘ஹைக்கூ’” நடிகர் ஏகன்

    0 shares
    Share 0 Tweet 0
  • 418 – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • பரத் – ராஜேஷ் மாதவன் இணையும் கலகலப்பான ஃபேமிலி என்டர்டெய்னர்! பூஜையுடன் கோலாகலமாகத் தொடங்கியது !

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

“‘ஹைக்கூ’ ரசிகர்களின் மனதைத் தொடும் ஃபீல் குட் என்டர்டெயினர் திரைப்படம்”- இயக்குநர் யுவராஜ் சின்னசாமி!

October 23, 2026

நாய்ஸ் அண்டு கிரைன்ஸ் நிறுவனத்தின் முதல் தயாரிப்பான ‘கோயம்பத்தூர் மாப்பிள்ளை’ திரைப்படம் டிசம்பர் 24 அன்று உலகெங்கும் வெளியாகிறது

October 23, 2026

சட்டமும் நீதியும்-2 – விமர்சனம்

October 23, 2026

418 – விமர்சனம்

October 23, 2026

“ஒரு மனிதனின் வாழ்க்கையில் இருவேறு காலக்கட்டங்களை பேசும் திரைப்படம் ‘ஹைக்கூ’” நடிகர் ஏகன்

October 23, 2026

யஷ் ராஜ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், கீர்த்தி சுரேஷ் – ராதிகா ஆப்தே மோதும் அதிரடி கேங்ஸ்டர் கதையான ‘அக்கா’ வெப் தொடரின் டிரெய்லரை வெளியிட்டது நெட்ஃபிளிக்ஸ்!

October 23, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.