யுவன் சங்கர் ராஜா தயாரிக்கும் 'ஸ்வீட்ஹார்ட்' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு அறிமுக இயக்குநர் ஸ்வினீத் எஸ். சுகுமார் இயக்கத்தில் உருவாகி வரும் 'ஸ்வீட்ஹார்ட்' எனும்...
Read moreDetailsஎஸ் புரொடக்ஷன்ஸ் எஸ். சௌந்தர்யா வழங்கும், இயக்குநர் வின்சென்ட் செல்வாவின் கதை-திரைக்கதையில், இயக்குநர் ராகுல் பரமஹம்சா இயக்கத்தில் நடிகர் ரிச்சர்ட் ரிஷி & பெல்ஜியன் மலினோயிஸ் நாய்...
Read moreDetailsரோமியோ பிக்சர்ஸ் தயாரிப்பில், நடன இயக்குநர் சதீஷ் இயக்கத்தில், நடிகர் கவின் நடிக்கும் “கிஸ்” பட ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!! ரோமியோ பிக்சர்ஸ் தயாரிப்பாளர் ராகுல்...
Read moreDetailsதமிழ் சினிமாவில் திறமையான நடிகையாக அறிமுகமாகி இருக்கும் சான்வே மேக்னா! இந்த வருடம் 2025ல் வெளியான ‘குடும்பஸ்தன்’ திரைப்படம் பல தரப்பிலும் பாராட்டுகளைப் பெற்றது. இந்தப்...
Read moreDetails'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' படக்குழு படவெளியீட்டை முன்னிட்டு ஊடகங்களை சந்தித்தது! மிகவும் எதிர்பார்க்கப்படும் தமிழ்த் திரைப்படமான 'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' பிப்ரவரி 21,2025...
Read moreDetailsபெண்கள் மீது நடத்தப்படும் வன்முறைகள் குறித்தான செய்தி அஜித் சாரை எப்போதும் மனதளவில் பாதிக்கக் கூடியது. அதுபற்றிய வலுவான மெசேஜ் 'விடாமுயற்சி' படத்தில் இருக்க வேண்டும் என்று...
Read moreDetailsநீண்ட இடைவெளிக்கு பிறகு புழல் மத்திய சிறையில் எடுக்கப்பட்ட திரைப்படம் உதயா, அஜ்மல், யோகி பாபு இணைந்து நடிக்கும் ‘அக்யூஸ்ட்’ ஜேஷன் ஸ்டுடியோஸ், ஸ்ரீதயாகாரன் சினி...
Read moreDetailsநடிகை நிவேதா தாமஸ் நடிப்பில், “35 சின்ன விஷயம் இல்ல” இன்று முதல் SUN NXT தளத்தில் ஸ்ட்ரீமாகிறது!! நந்தா கிஷோர் எமானி இயக்கத்தில், நிவேதா...
Read moreDetailsசிலம்பரசன் TR பிறந்த நாளில் அறிவிக்கப்பட்ட #STR49, தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனின் Dawn Pictures தயாரிப்பில், பார்க்கிங் பட இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குகிறார் !! தமிழ்...
Read moreDetails'காமெடி கிங்' கவுண்டமணி நடிக்கும் 'ஒத்த ஓட்டு முத்தையா' படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீடு தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நட்சத்திர நடிகரான 'காமெடி கிங்' கவுண்டமணி கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'ஒத்த ஓட்டு முத்தையா' படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியிடப்பட்டது. இதற்காக சென்னை கமலா திரையரங்க வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வில் படத்தின் இசை மற்றும் முன்னோட்டத்தை தமிழ்த் திரையுலகின் முன்னணி பிரபலங்களான இயக்குநர் கே. பாக்யராஜ், இயக்குநர் பி. வாசு, தயாரிப்பாளர் கே. ராஜன், ஆகியோர் இணைந்து வெளியிட, படக்குழுவினர் பெற்றுக் கொண்டனர். இயக்குநர் சாய் ராஜகோபால் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'ஒத்த ஓட்டு முத்தையா' திரைப்படத்தில் 'காமெடி கிங்' கவுண்டமணி, யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், சிங்கமுத்து, சித்ரா லட்சுமணன், ரவி மரியா, வையாபுரி, ஓ ஏ கே சுந்தர், கூல் சுரேஷ், டாக்டர் காயத்ரி, அனுமோகன், முத்துக்காளை, வாசன் கார்த்திக், அன்பு மயில்சாமி, கஜேஷ் நாகேஷ்,, ராஜேஸ்வரி, பிந்து, அபர்ணா, சாய் தன்யா, டெம்பிள் சிட்டி குமார், தாரணி, சென்ராயன், லேகா ஶ்ரீ, டி கே ஶ்ரீநிவாசன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். சா. காத்தவராயன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சித்தார்த் விபின் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை எஸ். பி. ராஜா சேதுபதி மேற்கொள்ள கலை இயக்கத்தை மகேஷ் நம்பி கவனித்திருக்கிறார். அரசியலும் காமெடியும் கலந்த இந்த திரைப்படத்தை சினி கிராஃப்ட் புரொடக்ஷன் நிறுவனம் மற்றும் குட்டி ஸ்டோரி பிக்சர்ஸ் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் எம். ஈ. ரவி ராஜா மற்றும் கோவை லட்சுமி ராஜன் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். இந்தத் திரைப்படத்தை ஃபைவ் ஸ்டார் செந்தில் வழங்குகிறார். வரும் 14ம் தேதி காதலர் தினத்தன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் இந்த திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழாவில் ஒளிப்பதிவாளர் சா. காத்தவராயன், கலை இயக்குநர் மகேஷ் நம்பி, நடிகர்கள் அனு மோகன், ரவி மரியா, மதுரை குமார், ஓ எ கே சுந்தர், வையாபுரி, சிசர் மனோகர், சி என் ரங்கநாதன், கஜேஷ், பாடலாசிரியர்கள் மோகன் ராஜன், சினேகன், இசையமைப்பாளர் சித்தார்த் விபின், ஃபைவ் ஸ்டார் செந்தில், தயாரிப்பாளர்கள் எஸ். கதிரேசன், கே. ராஜன், இயக்குநர்கள் பி. வாசு, கே. பாக்யராஜ் இவர்களுடன் 'காமெடி கிங்' கவுண்டமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பாடலாசிரியர் மோகன் ராஜன் பேசுகையில், ''சந்தோஷமான தருணம் இது. கடந்த ஆண்டில் வெற்றி பெற்ற 'லப்பர்பந்து', 'டிமான்டி காலனி 2' ஆகிய படங்களில் பாடல் எழுதுவதற்கான வாய்ப்பு கிடைத்தது. இந்த ஆண்டு நகைச்சுவை உலகின் சூப்பர் ஸ்டார், காமெடி கிங் கவுண்டமணி நடிக்கும் 'ஒத்த ஒட்டு முத்தையா ' எனும் இந்த திரைப்படத்தில் இரண்டு பாடல்கள் எழுதி இருக்கிறேன். இந்த வாய்ப்பிற்காக இசையமைப்பாளர் சித்தார்த் விபினுக்கும், இயக்குநர் ராஜகோபாலுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். விவரம் தெரியாத வயதிலேயே எனக்கு பிடித்த நபர் கவுண்டமணி. இந்த மேடையில் அவரும், பாக்கியராஜ் சாரும் ஒன்றாக இருப்பதை நான் பெருமிதமாக கருதுகிறேன். இந்தப் படம் கண்டிப்பாக பெரிய அளவில் வெற்றி பெறும். இதற்கு அனைவரும் ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,'' என்றார். படத்தின் இணை தயாரிப்பாளர் கோவை லட்சுமி ராஜன் பேசுகையில், ''இது என்னுடைய முதல் மேடை. ஒரே ஒரு விஷயத்தை மட்டும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். சூரிய உதயத்தில் கூட ஒரு நிமிடம் காலதாமதம் உண்டு. ஆனால் எங்கள் அண்ணன் கவுண்டமணி படபிடிப்பு தளத்திற்கு ஒரு நிமிடம் கூட தாமதமாக வர மாட்டார். சரியான தருணத்தில் வந்து விடுவார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்,'' என்றார். நடிகை ஹீமா பிந்து பேசுகையில், ''என் வாழ்க்கையில் சந்தோஷமான நாள் இது. லெஜண்டரி ஆக்டர் கவுண்டமணியுடன் இணைந்து நடித்ததை பெரிய பாக்கியமாக கருதுகிறேன். இதற்கு கடவுளுக்கு முதலில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இங்கு வருகை தந்திருக்கும் அனைவருக்கும் என் நன்றி,'' என்றார். நடிகர் ரவி மரியா பேசுகையில், ''ஆறு வருடங்களுக்கு முன் கவுண்டமணியுடன் இணைந்து நடிப்பது போல் கனவு கண்டேன். அந்தக் கனவு பலித்து விட்டது. படப்பிடிப்பு தளத்தில் அவர் எங்களுக்கு மரியாதை கொடுத்து பேசியது வியப்பை அளித்தது. படப்பிடிப்பு தளத்தில் அவருடன் இணைந்து நடிக்கும் போது தவறு ஏதும் நடந்து விடக்கூடாது என்பதற்காக காட்சிக்கு முன்னர் ஒத்திகை பார்ப்பேன். அந்த ஒத்திகை தருணத்தில் கூட அவர் தனக்கான வசனங்களை எனக்காக பேசுவார். ஒரு கலைஞரின் வளர்ச்சியில் அவருக்கு இருந்த அக்கறை அப்போது தெரிந்தது. இந்த தருணத்தில் இயக்குநர் கே. பாக்யராஜ் அவர்களுக்கு நன்றி தெரிவிக்க கடமைப்பட்டிருக்கிறேன். அவர் இல்லை என்றால் கவுண்டமணி இல்லை. அவர் தான் கவுண்டமணியை பாரதிராஜாவிடம் அறிமுகப்படுத்தினார். இயக்குநர் பி வாசுவிற்கும் நன்றி தெரிவித்துக்...
Read moreDetails© 2024 Tamil2daynews.com.