‘தல’ அஜித்தின் “விடா முயற்சி”..!
நடிகர் அஜித்குமார் நடித்து சமீபத்தில் மிகப்பெரிய ஹிட் அடித்த துணிவு திரைப்படத்திற்கு பிறகு நடிகர் அஜித்குமார் யாருடைய இயக்கத்தில் நடிக்க போகிறார் என்ற கேள்வி பரவலாக இருந்து வந்தது.
அந்தக் கேள்விக்கு விடை கிடைத்தது.
நடிகை நயன்தாராவின் கணவரும், இயக்குநருமான விக்னேஷ் சிவன் இயக்கத்தில் லைக்கா நிறுவனம் தயாரிக்க நடிகர் அஜித்குமாரின் அடுத்த படம் என்று உறுதி செய்யப்பட்டது.
இதற்காக நடிகர் அஜித்குமார் இதுவரை தன் படங்களுக்கு வாங்காத சம்பளத்தை நயன்தாரா பேசி வாங்கி கொடுத்துள்ளதாக நம்பத் தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

இயக்குனர் விக்னேஷ் சிவனின் இயக்கத்தில் நடிக்க மறுத்துள்ளார் நடிகர் அஜித்குமார்.
இதன் பிறகு அஜித்தின் படத்தை இயக்கப் போவது யார் என்ற கேள்வி பரவலாக இருந்து வந்த நிலையில் சமூக வலைதளங்கள் மூலம் இயக்குனர் மகிழ் திருமேணி இயக்க அதிக வாய்ப்புள்ளதாக பரபரப்பாக பேசப்பட்டது.
இது உண்மை என்று நிரூபிக்கும் வகையில் மே -1 ல் நடிகர் அஜித்குமாரின் பிறந்த தினமான அன்று அவர் நடிக்கும் புதிய படமான “விடாமுயற்ச்சி”
டைட்டில் போஸ்டர் உடன் வெளியாகி லைக்கா நிறுவனம் அதிரடி ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இப்படத்தின் இசையை அனிருத் கவனிக்க, படத்தின் இயக்கம் மகிழ் திருமேனி என்று இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது