சின்ன வீரனுக்கு அதிவீரன் கொடுத்த பரிசு
மாமன்னன் திரைப்படத்தில் சிறு வயது அதிவீரனாக சிறந்ததோர் நடிப்பை வெளிப்படுத்திய தம்பி சூர்யாவை இன்று உதயநிதி நேரில் வாழ்த்தினார். அவரது கல்விக்கு உதவிடும் வகையில் லேப்டாப் வழங்கி மகிழ்ந்தார். சூர்யாவின் கல்விக்கும், வளர்ச்சிக்கும் என்றும் துணை நிற்பதாக தெரிவித்தார்.

சமீபத்தில் உதயநிதி நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் மாமன்னன் திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் வடிவேலுவின் நடிப்பு நம்பர் ஒன் என அனைவராலும் சிலாகித்து பேசப்படுகிறது. பஹத் பாசில் நடிப்பும் அவருக்கு சற்றும் குறைந்தது அல்ல என்றும் பாராட்டப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்ல இந்த படத்தில் தன்னுடைய கதாபாத்திரம் என்ன என்பதை உணர்ந்து நடிப்பில் அண்டர்பிளே செய்து பாராட்டுகளை பெற்ற வருகிறார் நாயகன் உதயநிதி.
இவர்களை தாண்டி இந்த படத்தில் உதயநிதியில் சிறு வயது பருவத்தில் நடித்திருந்த அந்த பையனும் மிக உயர்ந்த நடிப்பை வெளிப்படுத்தி நடித்திருந்தார். குறிப்பாக தன்னுடைய கதாபாத்திரம் வெளிப்படுத்த வேண்டிய உணர்வுகளை அந்த வயதிற்குள் அவ்வளவு அற்புதமாக பிரதிபலித்திருந்தார். அதில் நடித்த அந்த இளைஞரின் பெயர் சூர்யா.


தற்போது படம் வெற்றி பெற்றுள்ள நிலையில் சூர்யாவை அழைத்து அவருக்கு விலை உயர்ந்த லேப்டாப் ஒன்றை பரிசளித்துள்ளார் நாயகன் உதயநிதி. இதற்கு முன்னதாக இயக்குனர் மாறி செல்வராஜுக்கு விலை உயர்ந்த மினி கூப்பர் கார் ஒன்றை உதயநிதி பரிசளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.